என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் பிரத்யங்கரா யாகம் அம்பாள் திருவீதியுலா வந்து ஊஞ்சல் சேவை நடந்த காட்சி.
வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் பிரத்யங்கரா யாகம்
- அம்பாள் திருவீதியுலா வந்து ஊஞ்சல் சேவை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் கிராமத்தில் எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நேற்று புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையொட்டி சிறப்பு மஹா பிரத்யங்கரா, நிகும்பலா யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அம்பாள் திருவீதியுலா வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் பெண்கள் பக்தி பரவசத்தில் அருள் வந்து ஆடினார்கள்.
நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, தலைமை குருக்கள் டி.எஸ். சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






