search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி
    X

    பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

    • கலெக்டர் தகவல்
    • வேலூரில் நாளை நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்ணா பிறந்த நாளையொட்டி 2023-24-ம் ஆண்டுக்கான சைக்கிள் போட்டிகள் வேலூரில் நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூர் மாவட்டப் பிரிவு சார்பில் நடத்தப் படும் இந்த போட்டிகளில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களுடைய சொந்த சைக்கிளுடன் கலந்து கொள்ளலாம்.

    போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டிகள் 13 வயது, 15 வயது, 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்படும்.

    இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளித் தலைமையா சிரியர்களிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்றும் அல்லது ஆதார் அட்டை கொண்டு வந்தும் கலந்து கொள் ளலாம். போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு தினப்படி, பயணப்படி வழங்கப்படமாட்டாது.

    போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெயர்களை நாளை காலை 6 மணிக்குள் வேலூர் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரிடம் போட்டி நடைபெறும் இடத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 என பரிசுத்தொகை, சான்றி தழ்கள் வழங்கப்படும்.

    4 முதல் 10 இடங்களைப் பிடிப்பவர்களுக்குத் தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகையும் தகுதிச்சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    போட்டிகள் காட்பாடி அருகிலுள்ள பள்ளிக்குப்பத்தில் தொடங்கி கண்டிப்பேட்டில் நிறைவடையும்.

    மேலும் விவரங்களுக்கு இளைஞர் நலன் அலுவலரை 74017 03483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×