என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
- மனைவி கண்டித்ததால் விரக்தி
- போலீசார் வழக்கு பதிவு
வேலூர்:
வேலூர் சின்ன அல்லாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). தச்சு தொழிலாளி. இவரது மனைவி சுதீஷா. மணிகண்டன் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தார்.
இந்த நிலையில் சுதிஷாவுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. நேற்றும் மணிகண்டன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சுதிஷா கணவரிடம் 3-வது குழந்தை பிறந்த பிறகும் ஏன் குடித்துவிட்டு வருகிறாய் என கேள்வி எழுப்பினார்.
மேலும் இது குறித்து தனது தந்தையிடமும் தெரிவித்துள்ளார். சுதிஷாவின் தந்தையும் மணிகண்டனை கண்டித்தார்.
இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன் நேற்று இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






