என் மலர்
வேலூர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் கலவை பகுதியில் 3 வீடுகளும், சோளிங்கர், ஆற்காடு பகுதியில் தலா 1 குடிசை வீடுகளும் இடிந்தன.
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் கடும் பனி கொட்டுகிறது. சாலைகள் தெரியாத அளவுக்கு பனி கொட்டுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
மழை காரணமாக பாலாறு பொன்னை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து மாவட்டத்திலுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக 2 வீடுகள் இடிந்தன. தொடர்ந்து மழை பெய்து வருகிறது வேலூர் மாவட்டத்திலுள்ள மலட்டாறு அகரம் ஆறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் ஆயிரம் கனஅடி தண்ணீரும் பொன்னை ஆற்றில் 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் வருகிறது. இதனால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 220 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள பூங்கா அணைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 283 ஏரிகள் நிரம்பி உள்ளன.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் லஞ்சம் வாங்கியதாக கைதான வருவாய் ஆய்வாளர் ராசிபுரம் கிளைசிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சூவிழிராஜா. விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் எலச்சிபாளையத்தில் உள்ளது. இந்த நிலத்தை அளவீடு செய்வதற்காக அவர் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் (வயது 48) மனு கொடுத்தார். ஒரு மாத காலமாக நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் பரமேஸ்வரன் காலம் தாழ்த்தி வந்தார்.
இதுகுறித்து சூவிழிராஜா வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் கேட்டார். அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் தான் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து கொடுக்க முடியும் என்று கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சூவிழிராஜா, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை சூவிழிராஜாவிடம் வழங்கினர். அவர் போலீசார் கூறியப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் ரூ.5 ஆயிரத்தை வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் வழங்கினார். அதனை அவர் பெற்றுக் கொண்டார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் பரமேஸ்வரனை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பரமேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராசிபுரம் கிளைசிறையில் அடைக்கப்பட்டார்.

இலங்கை அகதிகள் என்ற போர்வையில் இருந்து எங்களை மாற்றியிருப்பது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று வேலூர் முகாமை சேர்ந்த பெண் கூறினார்.
வேலூர்:
இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்ட தொடக்க விழாவில் மேல்மொணவூர் முகாமை சேர்ந்த லூட்சு மேரி என்பவர் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
கடந்த 31 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறோம். நீண்டகாலமாக எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. சொந்த வீடு என்பது எங்களுக்கு பெரும் கனவாக உள்ளது. சரியான வீடு வசதி இல்லாததால் தூங்க முடியாமல் தவிக்கிறோம். 4 அல்லது 5 பேர் உள்ள குடும்பங்களில் படுக்க கூட இடமில்லை.
சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாததால் விறகு அடுப்பில் சமையல் செய்து பெண்கள் தவிக்கிறார்கள். எங்களுக்கு வீடு, கியாஸ் இணைப்பு போன்றவை கிடைக்க உள்ளது.
வீடு கட்டித்தரப்படும் என்ற அறிவிப்பு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் உங்களில் ஒருவர் என கூறியது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நான் பாதியில் படிப்பை நிறுத்தியவள். வசதி இல்லாததால் பலர் படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
தற்போது பணபலன் அதிகமாக உள்ளதால் கல்வி செலவை அரசே ஏற்கும் என்பதால் இலங்கைத் தமிழர்கள் பலர் படிக்க முடியும். வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறியிருக்கிறார்கள்.
இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மேம்படும். இலங்கை அகதிகள் என்ற போர்வையில் இருந்து எங்களை மாற்றியிருப்பது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

பட்டாசுகளை வெடிக்கும் போது நமது கவனக்குறைவால் பல்வேறு ஆபத்துக்கள் நிகழும்.
திருப்பூர்:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் சார்பாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட உறுதிமொழி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று திருப்பூர் அரசு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரியில் உள்ள குமரன் அரங்கில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முன்னதாக அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், இந்த தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடனும் மிகுந்த கவனத்துடனும் கொண்டாட வேண்டும்.
பட்டாசுகளை வெடிக்கும் போது நமது கவனக்குறைவால் பல்வேறு ஆபத்துக்கள் நிகழும். அதை தடுத்திடவேண்டும். அதிக சத்தமுள்ள பட்டாசுகளை வெடிப்பதால் சாலைகளில் விபத்துகள் நடக்கும்.
அதிக சத்தமுள்ள பட்டாசுக்களை வெடிக்க வேண்டாம் என்றார். பிறகு மருத்துவமனைகள் அமைந்துள்ள அமைதி பகுதிகளில் வெடிகளை வெடிக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி சவுந்தர்யாவின் பெற்றோர் திருநாவுக்கரசு, ருக்மணி ஆகியோரை சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி திருநாவுக்கரசு. இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு 4 மகள்கள். இதில், 3 பேருக்குத் திருமணம் ஆகி அவர்களது குடும்பத்தாருடன் வசித்து வருகின்றனர். 4-வது மகள் சவுந்தர்யா (17). வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தார்.
இதைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்பில் சேர சவுந்தர்யா நீட் தேர்வுக்குத் தயாரானார். கடந்த 12-ம் தேதி காட்பாடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்ட நீட் தேர்வு மையத்தில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். தேர்வு முடிந்து வீட்டுக்குத் திரும்பிய சவுந்தர்யா, தன் தாயார் ருக்மணியிடம் வேதியியல், இயற்பியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், அதனால் நீட் தேர்வைத் தான் சரியாக எழுதவில்லை என்றும் தேர்ச்சி முடிவு எப்படி இருக்குமோ? எனவும் கவலையுடன் தெரிவித்து அழுதார்.
மாணவிக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி, தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை எனக்கூறி அவரைத் தேற்றினர். பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் மாணவி சவுந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூரில் இன்று இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். அவர் அண்ணா சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார்.
அப்போது நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி சவுந்தர்யாவின் பெற்றோர் திருநாவுக்கரசு, ருக்மணி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். முதலமைச்சரிடம் தங்களது மகள் இல்லாததால் தவிக்கிறோம். அரசு உதவி செய்ய கோரி மனு அளித்ததாக திருநாவுக்கரசு, ருக்மணி ஆகியோர் தெரிவித்தனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரியும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ஒரே பணியாளர் வருகைப் பதிவேட்டின் கீழ், ஒரே இடத்தில், ஒன்றாக, குறிப்பிட்ட நாட்களுக்கு பணியாற்றியவர்களுக்கான ஊதியம் ஒரு சில பிரிவினருக்கு 15 முதல் 20 நாட்களுக்குள் அளிக்கப்பட்டு விடுவதாகவும், ஒருசில பிரிவினருக்கு இரண்டு மாதங்கள் ஆகின்றன என்றும், இதன் காரணமாக பணியாளர்களிடையே சந்தேகமும், கசப்பு உணர்வும் ஏற்படுவதாகவும், இது குறித்து ஊராட்சி அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், அனைவருக்குமான ஊதியம் ஒன்றாகத்தான் சமர்ப்பிக்கப்படுகிறது என்றும், ஆனால் அதற்கான ஊதியம் பிரித்து அனுப்பப்படுவதாகவும், இந்தப் பிரச்சனை ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், பீகார், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலவுவதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.
இது குறித்து தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சித்துறை மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரிந்ததற்கான ஊதியம் மற்ற பிரிவினரைக் காட்டிலும் ஜூன் மாதத்தில் தாமதமாக கிடைத்ததாக ஏராளமான புகார்கள் வந்திருப்பதாக கூறியுள்ளார் என பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இது மிகவும் வருத்தம் அளிக்கும் செயல் ஆகும்.
இந்த நிலை நீடித்தால் இதனால் ஏற்படும் பின் விளைவுகள் கடுமையாக இருப்பதோடு, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்து விடும்.
ஊதியத்தை ஒரு பிரிவினருக்கு முன்னதாகவும் மற்றொரு பிரிவினருக்கு தாமதமாகவும் அளித்தால் பணிபுரிபவர்களிடையே மனக்கசப்பை உண்டாக்குவதோடு, தாமதமாக ஊதியம் பெறுபவர்களின் பணிபுரியும் ஆர்வமும் குறைந்துவிடும்.
இந்தியாவில் உள்ள பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களுக்கு சரியாக எவ்வளவு நிதியுதவி அளிக்கப்படுகிறது என்பதை கண்டறியும் பொருட்டு மத்திய அரசு புதிய முறையை நடப்பாண்டு முதல் செயல்படுத்தி உள்ளது தான் இதற்கு காரணம்.
இதில் உள்ள சாதக பாதகங்களை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு. நேற்றுகூட முதல்-அமைச்சர் இத்திட்டத்தின் கீழ் நிலுவையாக உள்ள 1,178 கோடி ரூபாயை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
ஆனால் மத்திய அரசு தற்போது பின்பற்றி வரும் நடைமுறையில் உள்ள சாதக, பாதகங்களைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை.
எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரியும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து, அனைத்துப் பிரிவினரிடமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டு அதிமுக அரசு இலங்கை தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இலங்கை தமிழர்கள் பற்றி எந்த கவலையும் படவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
வேலூர்:
இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பல்வேறு காலகட்டங்களில் செய்திருந்தாலும் 6-வது முறையாக ஆட்சி அமைத்துள்ள தி.மு.க. அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இந்த விழாவிற்கு வந்து உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் பெருமைப்படுகிறேன்.
ஒரு அடையாளத்திற்காக தான் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் என அழைக்கிறேன். தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான்.
அந்த அடிப்படையில் இனத்தால் மொழியால் பண்பாட்டால் நாகரிகத்தால் நாம் அனைவரும் ஒன்றுபட்டவர்கள். நாம் அனைவரும் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள்.
கடல்தான் நம்மை பிரிக்கிறது. நீங்கள் விட்ட கண்ணீர் தான் நம்மை இணைத்தது.
தமிழர்களுக்காக குரல் கொடுத்த இயக்கம் திமுக. 1983-ம் ஆண்டு ஈழத் தமிழர்கள் வரத் தொடங்கினர். அவர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டன. சிலர் வெளியே தங்கினார்கள். 1997 ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அதன் மூலம் இலங்கை தமிழர்கள் ஓரளவு பயன் அடைந்தார்கள்.
ஆனால் கடந்த 10 ஆண்டு அதிமுக அரசு இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இலங்கை தமிழர்கள் பற்றி எந்த கவலையும் படவில்லை.
இலங்கை தமிழர்களுக்காக மீண்டும் திட்டங்களை தொடங்கியுள்ளோம். அவர்கள் அகதிகள் அல்ல அவர்களுக்காக நாம் இருக்கிறோம்.

கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபோது 1997-98-ம் ஆண்டு 3594 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டன.
1998-1999-ம் ஆண்டில் 3 ஆயிரத்து 826 வீடுகள் கட்டப்பட்டன. 2009-ம் ஆண்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
தமிழர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள 106 முகாம்களை அமைச்சர்கள் ஆய்வு நடத்தி உடனடியாக அங்குள்ள அடிப்படைத் தேவைகள் என்ன அவர்களுக்கு என்ன செய்து தர வேண்டும் என்பது குறித்து அறிக்கை தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முகாம்களில் உள்ள 19,046 இலங்கை தமிழர்களின் குடும்பங்களுக்கு 7469 வீடுகள் கட்டித்தரவும், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முகாம்களில் உள்ள மாணவர்களின் என்ஜினீயரிங் முதுகலை படிப்பு கல்விக்கட்டணம் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும்.
இலங்கை தமிழர்களுக்கான மாதாந்திர பணபலன் உயர்த்தி வழங்கப்படும். அலுமினிய பாத்திரங்களுக்கு பதிலாக சில்வர் பாத்திரங்கள் வழங்கப்படும்.
இலங்கை தமிழர்கள் நலனுக்காக 12.41 கோடி, துணிகளுக்கு ரூ.3 கோடி எவர்சில்வர் பாத்திரங்களுக்கு 2.47 கோடி கியாஸ் சிலிண்டருக்கு 8.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள மக்களுக்கு அரிசி மானியத் தொகையை அரசே ஏற்று இலவசமாக வழங்கப்படும்.
முகாமில் உள்ள மாணவர்கள் இலவச கல்விக்காக 4.35 கோடி, சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க 6.15 கோடி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று 294 சதுர அடியில் 3 ஆயிரத்து 510 புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. குடிநீர் மின்சாரம் சாலை வசதி கழிவுநீர் வசதி உள்ளிட்டவற்றுக்ககு ரூ.30 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இது முடிவல்ல. மீதம் உள்ள 105 முகாம்களிலும் பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்காக நாங்கள் இருக்கிறோம்.
நீங்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. என்னை உங்களுடைய உடன்பிறப்பாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஜன்னல் மூடினால் இன்னொரு ஜன்னல் திறக்கும்.
இலங்கை தமிழர்களுக்காக எப்போதும் தி.மு.க. கதவை திறந்து வைத்துள்ளது. இலங்கை தமிழர்களுக்காக இந்த அரசு எப்போதும் துணை நிற்கும்.

110 விதியின் கீழ் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என அறிவித்தேன். அதனை செயல்படுத்தும் நாள் இந்த நாள். அதற்காக பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்...இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டம்- மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் புதன்கிழமை நடைபெறும்.
காங்கயம்:
காங்கயத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 3-ந்தேதி நடைபெற உள்ளதாக காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் புதன்கிழமை நடைபெறும்.
அதன்படி இந்த மாதத்துக்கான குறைதீர்க்கும் கூட்டம் சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே மின் பயனீட்டாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முதற்கட்டமாக ரூ.142.16 கோடி மதிப்பீட்டில் 3510 புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வேலூர்:
தமிழகத்தில் முகாம்களில் வாழும் 19,046 இலங்கை தமிழர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் 3,510 வீடுகள் கட்டும் திட்டத்தை ரூ.142.16 கோடி மதிப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மேல்மொணவூரில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் ரூ.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டுத்திடலில் இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மாஸ்தான் தலைமை தாங்கினார்.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வரவேற்று பேசினார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முதற்கட்டமாக ரூ.142.16 கோடி மதிப்பீட்டில் 3510 புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். ரூ.30 கோடி மதிப்பிலான இதர அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கான அடிக்கல் நாட்டுதல் 3 பேருக்கு உயர்த்தப்பட்ட வீதத்தில் பணக்கொடை ஆணை, 4 பேருக்கு இலவச கைத்தறி துணிகள், 2 பேருக்கு இலவச எவர் சில்வர் பாத்திரங்கள், 3 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கினார். 3 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அனுமதி சான்று மற்றும் உபகரணங்கள் வழங்கினார்.
என்ஜினீயரிங் மாணவி ஒருவருக்கு இலவச கல்விக்கான முழு கல்வி கட்டண காசோலை வழங்கினார். கல்லூரி மாணவ-மாணவிகள் 5 பேருக்கு உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகை காசோலை வழங்கினார். 13 சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதிக்கான காசோலை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, கதிர்ஆனந்த் எம்.பி., கலெக்டர் குமாரவேல்பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் அரசு செயலாளர் பொது மற்றும் நல்வாழ்வு துறை ஜகந்நாதன் நன்றி கூறினார்.

தமிழகத்தில் 106 முகாம்களில் வசிக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகள் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டுத்திடலில் இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மாஸ்தான் தலைமை தாங்கினார்.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வரவேற்று பேசினார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முதற்கட்டமாக ரூ.142.16 கோடி மதிப்பீட்டில் 3510 புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். ரூ.30 கோடி மதிப்பிலான இதர அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கான அடிக்கல் நாட்டுதல் 3 பேருக்கு உயர்த்தப்பட்ட வீதத்தில் பணக்கொடை ஆணை, 4 பேருக்கு இலவச கைத்தறி துணிகள், 2 பேருக்கு இலவச எவர் சில்வர் பாத்திரங்கள், 3 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கினார். 3 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அனுமதி சான்று மற்றும் உபகரணங்கள் வழங்கினார்.
என்ஜினீயரிங் மாணவி ஒருவருக்கு இலவச கல்விக்கான முழு கல்வி கட்டண காசோலை வழங்கினார். கல்லூரி மாணவ-மாணவிகள் 5 பேருக்கு உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகை காசோலை வழங்கினார். 13 சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதிக்கான காசோலை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, கதிர்ஆனந்த் எம்.பி., கலெக்டர் குமாரவேல்பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் அரசு செயலாளர் பொது மற்றும் நல்வாழ்வு துறை ஜகந்நாதன் நன்றி கூறினார்.
வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு மேற்பார்வையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள்...தீபாவளி சிறப்பு ரெயில்களில் ரூ.140 வரை கட்டணம் அதிகரிப்பு
விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வரும் நிலையில் மழையால் சாகுபடிக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து அழுகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிதம்பரம், பண்ருட்டி விருத்தாசலம் திட்டக்குடி காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்றும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. கடலூர் நகராட்சி சார்பில் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்ததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. மேலும் இந்த பலத்த மழையால் சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்பட்டு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தொடர்ந்து பண்டிகை காலத்தில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
இந்த மழையால் சாலையோர வியாபாரிகள் மற்றும் பட்டாசு கடைகள் என அனைத்து இடங்களிலும் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. மேலும் விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த மழையால் சாகுபடிக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து அழுகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் 228 ஏரிகள் உள்ள நிலையில் 22 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது மீதம் உள்ள ஏரிகள் அனைத்தும் விரைந்து நிரம்பி வருகின்றனதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வேலூர்:
தமிழகம் முழுவதும் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் குடியிருப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட உள்ளது.
இதற்கான தொடக்க விழா மற்றும் வேலூர் மேல்மொணவூரில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
விழாவில் மேல்மொணவூரில் வசிக்கும் 220 இலங்கை அகதிகள் குடும்பங்கள் உள்பட 3,510 குடியிருப்பு வீடுகள் கட்டும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
பின்னர் மேல்மொணவூர் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் ரூ.48 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் சாலைவசதி, கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி, 162 பேருக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர், கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, பணக்கொடை உயர்த்தி வழங்குதல், சுயஉதவிக்குழுக்களுக்கு உயர்த்தப்பட்ட சுழல்நிதி வழங்குதல், புத்தாடைகள், பாத்திரங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னையில் இருந்து காரில் வேலூருக்கு புறப்படுகிறார். இரவு 7 மணியளவில் வேலூருக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் அவர் வேலூர் அண்ணாசாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார். அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. இரவு அங்கேயே தங்குகிறார். நாளை நிகழ்ச்சி முடிந்ததும் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வேலூர் சரக டி.ஐ.ஜி. பாபு தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வகுமார் (வேலூர்), தீபாசத்யன் (ராணிப்பேட்டை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), வருண்குமார் (திருவள்ளூர்) ஆகியோர் மேற்பார்வையில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முதல்-அமைச்சர் காரில் வருவதால் சென்னை-பெங்களூரு சாலையோரம் வேலூர் மாவட்ட பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழாவில் நலத்திட்ட உதவிகள் பெறும் இலங்கை அகதிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டன. ஆனாலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களின் உடல் வெப்பநிலை விழா தொடங்கும் முன்பாக பரிசோதனை செய்யப்படும்.
அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றால் மட்டுமே முதல்-அமைச்சரிடம் இருந்து நலத்திட்ட உதவிகள் பெற அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகள் விழாவில் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அருகே 15 வயது மாணவி கற்பழிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கைதான 5 வாலிபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான 17 வயது சிறுவன் ஏற்கனவே சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மகரஜோதி (31) என்பவர் சிறுமியிடம் பழகினார். பின்னர் திருமண ஆசை காட்டி அந்த சிறுமியை அவர் பலாத்காரம் செய்தார்.
இந்த விவரத்தை மகரஜோதி தனது நண்பர்களான முத்து முருகன் (19), பிரவின்குமார் (19), ஜெயபிரகாஷ் (10), நாகராஜ் (19) ஆகியோரிடம் தெரிவித்தார். இதனை கேட்ட மகரஜோதியின் நண்பர்கள் 4 பேரும் சிறுமியை மிரட்டி வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தனர்.
இதற்கிடையே சிறுமியை அந்த பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் காதலித்தார். அந்த சிறுவனும் மாணவியை கற்பழித்தார்.
இந்தநிலையில் மாணவி கர்ப்பம் அடைந்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தங்கள் மகளை சீரழித்த 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அந்த 6 பேர் மீதும் வழக்குப்பதிவு அவர்களை கைது செய்தனர்.
பள்ளி மாணவியை மிரட்டி கற்பழித்தவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு செல்வநாயகம், டி.எஸ்.பி. தமிழ்மணி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து மாணவியை பலாத்காரம் செய்த மகரஜோதி, நாகராஜ், முத்துமுருகன், ஜெயபிரகாஷ், பிரவின்குமார் ஆகிய 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான 17 வயது சிறுவன் ஏற்கனவே சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.