என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் மழை

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் கலவை பகுதியில் 3 வீடுகளும், சோளிங்கர், ஆற்காடு பகுதியில் தலா 1 குடிசை வீடுகளும் இடிந்தன.
    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் கடும் பனி கொட்டுகிறது. சாலைகள் தெரியாத அளவுக்கு பனி கொட்டுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    மழை காரணமாக பாலாறு பொன்னை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து மாவட்டத்திலுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் கலவை பகுதியில் 3 வீடுகளும், சோளிங்கர், ஆற்காடு பகுதியில் தலா 1 குடிசை வீடுகளும் இடிந்தன.

    வேலூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக 2 வீடுகள் இடிந்தன. தொடர்ந்து மழை பெய்து வருகிறது வேலூர் மாவட்டத்திலுள்ள மலட்டாறு அகரம் ஆறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் ஆயிரம் கனஅடி தண்ணீரும் பொன்னை ஆற்றில் 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் வருகிறது. இதனால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 220 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள பூங்கா அணைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 283 ஏரிகள் நிரம்பி உள்ளன.
    Next Story
    ×