என் மலர்tooltip icon

    வேலூர்

    • கதவுகளை உடைத்து துணிகரம்
    • மர்மகும்பல் குறித்து விசாரணை

    வேலூர்:

    பேரணாம்பட்டை அடுத்த எம்.வி.குப்பம் - புதூர் கிரா மத்தை சேர்ந்தவர் வில்சன் டேவிட் (வயது 55).

    இவர் கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரி யாராக உள்ளார். இவரது மனைவி இவாஞ்சலின் மின்னி ( 50 ) , ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை ஆசிரியை இவாஞ்ச லின் மின்னி வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். பாதிரியார் வில்சன் டேவிட் , அவரது மகன் மீகா ( 22 ) ஆகியோர் காலை 11 மணி யளவில் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தனர்.

    பின்னர் சில மணி நேரம் கழித்து மகன் மீகா வீடு திரும் பினார் . கேட்டை திறந்த போது வீட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்ற போது அறையில் பீரோக் களில் வைக்கப்பட்டிருந்த 3 நெக்லஸ்கள், 6 வளையல்கள் , ஒரு ஆரம் உள்பட 30 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு , சப் - இன்ஸ்பெக் டர் பிரபாகரன் மற்றும் மேல் பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி னர் . வேலூர் கைரேகை மற்றும் தடவியல் நிபுணர் லலிதா சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய் தார் . வேலூரிலிருந்து மோப்ப நாய் சிம்பா வரவழைக்கப்பட்டது.

    தனிப்படை அமைப்பு

    திருட்டு நடந்த இடத்தை மீண்டும் மீண்டும் சுற்றி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. நகையை திருடிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த மற்ற துணிகள் ஏதும் சிதறாமல் தங்க நகைகளை மட்டுமே நோட்டமிட்டு கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சம் என கூறப்படுகிறது.

    மர்ம கும்பல் பாதிரியார் வீல் சண்டேவிட் வீட்டின் வெளி கேட் பூட்டை உடைக்காமல் சுவர் ஏறி குதித்து முன் பக்கம் மற்றும் பின் பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்று கைவரிசை காட்டி இருக்கலாம் என கருதப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து மேல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாதிரியார் வீட்டில் நகை கொள்டிளையடித்த கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
    • வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    அவரது தாயார் பத்மாவதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக்கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோலில் உள்ள நளினி தனது தாயார் பத்மாவுடன் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.

    தொடர்ச்சியாக 6 முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்று ஜெயிலுக்கு திரும்ப இருந்தார்.

    இந்நிலையில் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நளினியின் தாயார் பத்மா நளினிக்கு மேலும் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து நளினிக்கு 7-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    • பள்ளிகளுக்கு குடிநீர் வசதி எழுது பொருட்கள் மேஜை போன்றவற்றை வாங்கித் தந்தேன்.
    • கடந்த 2010-ம் ஆண்டு முதல் பிச்சை எடுத்து வருகிறேன்.

    வேலூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 72). பிச்சை எடுத்து வருபவரான இவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு வந்தார்.

    பின்னர் தான் பிச்சை எடுத்து வைத்திருந்த ரூ.10 ஆயிரம் நிதியை அவர் அங்குள்ள வங்கி கிளை மூலம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் வகையில் அனுப்பி வைக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கி நிவாரணத்தொகையை வழங்கினார்.

    கடந்த 2010-ம் ஆண்டு முதல் பிச்சை எடுத்து வருகிறேன். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பல்வேறு பள்ளிகளுக்கு குடிநீர் வசதி எழுது பொருட்கள் மேஜை போன்றவற்றை வாங்கித் தந்தேன்.

    இதுவரை ரூ.50 லட்சத்து 60 ஆயிரம் வரை வழங்கியுள்ளேன். இந்த நிதியை பல்வேறு கலெக்டர்கள் மூலம் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன். தற்போது இலங்கை தமிழர்களுக்காக ரூ.10 ஆயிரம் நிதியை அனுப்பி வைத்துள்ளேன் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆசிரிகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
    • ஆசிரியர்களுக்கு உரிமை கொடுக்காவிட்டால் மாணவர்கள் மோசமான நிலைக்கு போவார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் 77 வகையாக நெறிமுறைகளை கல்வித்துறை பிறப்பித்துள்ள நிலையில், இதுதொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசரியர்கள் சங்க செய்தித் தொடர்பு செயலாளர் சேகர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    ஆசிரியர்களுக்கு இப்போது பணிச்சுமை அதிகமாக உள்ளது. அதனை குறைக்க வேண்டும். ஆசிரிகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பெஞ்சை உடைப்பது, டேபிளை உடைப்பது என மாணவர்களின் பழக்கவழக்கம் மோசமாக சென்றுகொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்றால் மாணவர்களை கண்டிப்பதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் இதைவிட மோசமான நிலைக்கு போவார்கள். ஆசிரியர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால், எல்லா ஆசிரியர்களும் பயமில்லாமல் வேலை செய்வார்கள். மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பயப்படுவார்கள், சரியாக படிப்பார்கள்.

    இன்றைய நிலைமை எப்படி இருக்கிறதென்றால், ஆசிரியர்கள்தான் மாணவர்களை பார்த்து பயப்படுகிறார்கள். எந்த மாணவன் என்ன செய்வானோ, எந்த மாணவன் அடிப்பானோ, எந்த மாணவன் எதாவது பிரச்சனை ஏற்படுத்துவானோ? என்ற பயத்துடனேயே ஆசிரியர்கள் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆசிரியர்கள் இப்போது பெரும்பாலும் சொந்த வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடியிருக்க வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • 1500 பெண்கள் பங்கேற்பு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் ஏராளமானோர் மனு கொடுத்தனர்.

    இதில் 1500 பெண்கள் கலெக்டர் அலுவலக வாசலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேலூர் அடுத்த அரியூரில் வக்பு வாரிய நிர்வாகத்தில் பல ஏக்கர் நிலங்கள் உள்ளது. அந்த பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு குடியிருக்க வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

    பின்னர் அவர்கள் இது சம்பந்தமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மனு கொடுத்த பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் த.மா.கா. மனு
    • ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ஆர்.ஜே.மூர்த்தி தலைமையில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிறு தொழில் நசிந்து ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டு வரி சொத்து வரியை உயர்த்தியது. இதற்கிடையே வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக ஏழை எளிய நடுத்தர மக்களின் தலையில் பேரிடியாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    மின்சார துறை அமைச்சர் சம்பந்தமே இல்லாமல் மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக சொல்லி மின் கட்டணத்தை உயர்த்தி ஏழை எளிய மக்களை வதைக்கிறது. தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் முற்றிலும் எரிந்தது
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள மூஞ்சூர் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.இவர் இன்று காலை சென்னைக்கு புறப்பட்டார்.

    அவரை பஸ் ஏற்றி விடுவதற்காக அவரது மகன் கணேசன் ஸ்கூட்டரில் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார்.

    தந்தையை பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு கணேசன் வீட்டிற்கு புறப்பட்டார். கிரீன் சர்க்கிள் அருகே உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகம் அருகே சென்ற போது திடீரென அவரது ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கீழே குதித்து தப்பினார். கண்ணி மைக்கும் நேரத்தில் ஸ்கூட்டர் மளமளவென எரிய தொடங்கியது. இது குறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் வருவதற்குள் ஸ்கூட்டர் முழுவதுமாக எரிந்து நாசமானது. நடுரோட்டில் ஸ்கூட்டர் எரிந்ததால் கிரீன் சர்க்கிளில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஸ்கூட்டர் எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்தது
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

    வேலூர்:

    அ.தி.மு.க., சார்பில், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலை வாசி உயர்வு உள்ளிட்ட தி.மு.க., அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ சதீஷ்குமார், சி‌கே.சிவாஜி, தாஸ், பி.எஸ் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அணைக்கட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வேலழகன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி தலைவர் புகழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் பாபுஜி, ஆனந்தன், நகர செயலாளர்கள் கோவிந்தன், ஜோதி குமார், உமாபதி உட்பட ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

    • மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அணைக்கட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வேலூர்:

    அ.தி.மு.க., சார்பில், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலை வாசி உயர்வு உள்ளிட்ட தி.மு.க., அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ சதீஷ்குமார், சி‌கே.சிவாஜி, தாஸ், பி.எஸ் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அணைக்கட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வேலழகன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி தலைவர் புகழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் பாபுஜி, ஆனந்தன், நகர செயலாளர்கள் கோவிந்தன், ஜோதி குமார், உமாபதி உட்பட ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே நகர செயலாளர் டி.டி. குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் கே.சி. வீரமணி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் டாக்டர் திருப்பதி, துணை செயலாளர்கள் லீலா சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் ஆரணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் அமைச்சர் சேவூர். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் தூசி. மோகன் முக்கூர் சுப்பிரமணியன், மாநில செய்தி தொடர்பாளர் பாபுமுருகவேல், முன்னாள் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், நகர மன்ற துணைத் தலைவர் பாரி.பாபு, நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சங்கர், கோவிந்தராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

    தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை நகர செயலாளர் சந்தோஷம் வரவேற்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சம்பத், சந்திரசேகர், விகேஆர்.சீனிவாசன் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ், மாவட்ட ஜெ பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார் ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், பெல் கார்த்திகேயன், வாலாஜா நகர செயலாளர் மோகன் மற்றும் முன்னாள் நகரமன்ற தலைவர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 23-ந்தேதி பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டு விவசாயி படுகாயம் அடைந்தார்.
    • விவசாயியை சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரகாசத்திற்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி புதுவசூர் பேங்க் நகரை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 66) விவசாயி.

    இவர் கடந்த 23-ந்தேதி அந்த பகுதியில் பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரகாசத்திற்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்‌.

    இன்று காலை அவரது கிட்னி சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கும், கண்கள் வேலூர் சி.எம்.சி.க்கும் தானமாக வழங்கப்பட்டது.

    பிரகாசத்திற்கு கலா என்ற மனைவி பாலாஜி, ராஜசேகரன் என்ற மகன்கள் உள்ளனர்.

    • குறைந்த விலையில் தங்க நாணயம் வழங்குவதாக மோசடி
    • கலெக்டர் அலுவலகத்தில் 1,500 பேர் மனு கொடுத்தனர்

    வேலூர்:

    தமிழகம் முழுவதும் தனியார் நிறுவனம் ஒன்று குறைந்த விலையில் தங்க நாணயம் வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று மோசடி செய்துள்ளது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அந்த நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    அதேபோல் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட் டது. பொதுமக்கள் தாங்கள் இழந்த பணத்தை திரும்பி பெறு வதற்காக அந்தந்த மாவட்டங்களில் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

    அதன்படி, வேலூர் கலெக்டர் அலுவலகத்திலும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. நேற்று வரை 1,500 பேர் மனுக்கள் கொடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் அபேஸ்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த அன்பூண் டியை சேர்ந்தவர் லதா. இவர் கடந்த மே மாதம் குடும்பத் தினருடன் வெளியே சென்றிருந்தபோது மர்மநபர்கள் வீட் டின் கதவை உடைத்து 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை திருடினர். லதா குடும்பத்தினர் திடீரென வீடு திரும்பியa தால் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வீட்டின் அருகே விட்டு விட்டு தப்பி யோடினார்கள்.

    இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து மோட்டார் சைக்கிள் பதி வெண் மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.

    அதில், கள்ளக்குறிச்சி மாவட் டம் சின்னசேலம் தாலுகா செஞ்செட்டிநத்தல் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 24) நகை, பணம் திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். வெங்கடேசனி டம் இருந்து 14 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×