என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கட்டண உயர்வை திரும்பபெற"

    • கலெக்டர் அலுவலகத்தில் த.மா.கா. மனு
    • ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ஆர்.ஜே.மூர்த்தி தலைமையில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிறு தொழில் நசிந்து ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டு வரி சொத்து வரியை உயர்த்தியது. இதற்கிடையே வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக ஏழை எளிய நடுத்தர மக்களின் தலையில் பேரிடியாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    மின்சார துறை அமைச்சர் சம்பந்தமே இல்லாமல் மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக சொல்லி மின் கட்டணத்தை உயர்த்தி ஏழை எளிய மக்களை வதைக்கிறது. தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    ×