என் மலர்
வேலூர்
- மனைவி போலீசில் புகார்
- போலீஸ் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 69). அரிசி வியாபாரி. இவர் இன்று காலை இவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
அரிசி வியாபாரி சாவு
அவரது மனைவி சரஸ்வதி இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து மோகனின் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை
இதுகுறித்து போலீசார் மோகன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதாவது காரணமா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திடீரென ஆய்வு செய்தனர்
- ரூ.5 ஆயிரம் வசூல்
வேலூர்:
காட்பாடி காந்தி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
அவரது உத்தரவின் பேரில் மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காட்பாடி காந்தி நகரில் உள்ள கடைகளில் இன்று காலை திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பயன்படுத்திய 5 கடைகளுக்கும் தலா ரூ.200 வீதம் அபராதம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பிளாஸ்டிக் பை பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
- 12 சதவீத வரி விதிக்கப்பட்டதால் வாடகை உயர்த்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேலூர்:
வேலூர் காந்தி ரோட்டில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர் மாநகர தங்கும் விடுதி உரிமையாளர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரூ.ஆயிரத்துக்கு குறைவாக உள்ள விடுதி அறைக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்தத்தை கண்டித்து கோஷமிட்டனர். இது குறித்து ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
வேலூரில் உள்ள விடுதிகளில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நடுத்தர மற்றும் ஏழை நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். நோயாளிகளிடம் குறைந்த அளவு அறை வாடகை வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதால் அறை வாடகை உயர்த்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கின்றனர். ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என கூறினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஞானவேலு, செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் தேஜா மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடவடிக்கை
- பயணிகள் மகிழ்ச்சி
வேலூர்:
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் நிறுத்தப்பட்ட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் ஈரோடு எக்ஸ்பி ரஸ் ரெயில் கடந்த 2 ஆண் டுகளுக்கு பிறகு மீண்டும் கடந்த வாரம் இயக்கப்பட்டது. பின்னர், ஈரோடு ரெயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிகள் காரணமாக மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது.
காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை வரை செல்லும் மின்சார யூனிட் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந் தது. ரெயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் 8 பொதுபெட்டி களுடன் முற்றிலும் முன்ப திவில்லா ரெயிலாக இன்று முதல் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு இன்று காலை 9.30 மணிக்கு புறப் பட்டது. ஜோலார்பேட்டைரெயில் நிலையத்திற்கு காலை 11.45 மணிக்கு சென்றடைகிறது.
ஜோலார் பேட்டையில் இருந்து காட்பாடி வரை செல்லும் மின்சார யூனிட் எக்ஸ்பிரஸ் ெரயில் (06418) இன்று முதல் பிற்பகல் 12.40 மணியளவில் ஜோலார் பேட்டையில் இருந்து புறப்படும்.
இந்த ெரயில் காட்பாடி வந்தடைந்ததும் அப்படியே திருப்பதிக்கு இயக்கப்படுகிறது. பயணிகள் திருப்பதி வரை செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கேத்தாண் டப்பட்டி, வாணியம் பாடி, விண்ணமங்கலம், ஆம்பூர், பச்சக்குப்பம், மேல்பட்டி, வளத்தூர், மேல்ஆலத்தூர், குடியாத் தம், காவனூர், விரிஞ்சி புரம், லத்தேரி ஆகிய 12 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. வழக்கம்போல் தினசரி இயக்கப்படும் இந்த ரெயிலால் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பயணிகள் நலவாரிய தலைவரிடம் பா.ஜ.க.வினர் மனு
- ஏராளமான பொதுமக்கள் பயனடைவார்கள்
குடியாத்தம்:
குடியாத்தம் ெரயில் நிலையத்திற்கு ெரயில்வே பயணிகள் நல வாரியம் மற்றும் சேவை குழுவின் தலைவர் கிருஷ்ணதாஸ் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் வருகை தந்து ஆய்வு செய்தனர்.
அப்போது ெரயில்வே பயணிகள் சேவை குழுவின் தலைவர் கிருஷ்ணதாஸிடம் குடியாத்தம் நகர பாஜக தலைவர் ராஜாசெல்வேந்திரன், பாஜக வேலூர் மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் சுசில்குமார் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அப்போது பாஜக வர்த்தக அணி முன்னாள் மாநில துணைத்தலைவர் பி.என்.எஸ்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பா.ஜ.க.வினர் அளித்த மனுவில் ஊர்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர் ஆனால் குடியாத்தம் ரயில் நிலையத்தில் சில ெரயில்களே நின்று செல்கிறது கூடுதலாக ெரயில்கள் நின்று செல்ல வேண்டும்.
ெரயில் நிலையத்தில் இரு மார்க்கத்திலும் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ், சென்னையிலிருந்து கோவை செல்லும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் நின்று செல்ல வேண்டும்.
அதேபோல் பாலக்காடு சென்னை பழனி எக்ஸ்பிரஸ், சென்னை ஆலப்புழா தன்பாத் எக்ஸ்பிரஸ், மைசூர் திருப்பதி எக்ஸ்பிரஸ், அரக்கோணம் மைசூர் பேசஞ்சர் ெரயில், சென்னை ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ், அரக்கோணம் சேலம் பேசஞ்சர் ஆகிய ெரயில்கள் ஒரு மார்க்கத்தில் மட்டும் குடியாத்தத்தில் நின்று சென்றது. கொரோனா காலத்தில் இந்த ெரயில்கள் குடியாத்தத்தில் நிறுத்தப்படவில்லை.
தற்போது இந்த ரயில்கள் மீண்டும் குடியாத்தத்தில் நிறுத்த வேண்டும், அந்த ெரயில்களை குடியாத்தத்தில் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
- சட்டமன்ற குழுவினரிடம் பரிந்துரை
- சுமார் 960 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
வேலூர்:
வேலூர் ஜெயிலில் 900-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். உடல் நலக் குறைவு காரணமாக திடீரென கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
இதனை தடுக்க சிறைத்துறை நிர்வாகம் அடிக்கடி மருத்துவ முகாம் நடத்தி வருகிறது.ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் உள்ள மருத்துவமனையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்க கைதிகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அங்குள்ள கைதிகள் சுமார் 960 பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 சதவீதம் கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
ஜெயிலில் நேற்று சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்களிடம் வேலூர் ஜெயிலில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. அதன் மூலம் நோய் பெற வாய்ப்பு உள்ளது. அதனால் கொசுவலை தர வேண்டும் என கைதிகள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். தனி தனியாக கைதிகளுக்கு கொசுவலை கொடுத்தால் அதன் மூலம் அவர்கள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. ஜெயிலில் உள்ள கதவு ஜன்னல்களுக்கு மட்டும் கொசுவலை பொறுத்தலாம் என கூறியுள்ளனர்.
இதனை ஏற்று சட்டமன்ற குழுவினர் ஜெயில் கைதிகள் அறைகளில் உள்ள ஜன்னல் கதவுளுக்கு மட்டும் கொசுவலை பொருத்த பரிந்துரை செய்துள்ளனர்.
வேலூர் ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு மனநிலை பாதிப்புகளை தடுக்க அவர்களுக்கு ஜெயில் வளாகத்தில் விளையாட்டு பயிற்சி அளிக்க வேண்டும். பேட்மிட்டன், இசை பயிற்சி மூலம் கைதிகளின் மனநிலை பாதிப்பை தடுக்க முடியும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர் ஜெயிலில் இருந்து கைதிகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படும் போது அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.இதனை தடுக்க ஜெயிலில் 108 ஆம்புலன்ஸ் போல அனைத்து வசதிகளும் கூடிய ஆம்புலன்சு வசதி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சி.சி.டி.வி. கேமரா செயல்படவில்லை
- குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தொய்வு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் கோட்டா சுப்பையா தெருவில் ஒரு நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் தயாளன் (வயது 60). என்பவர் வேலை செய்து வருகிறார்.
தயாளன் நேற்று மதியம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று நிதி நிறுவனத்தின் கணக்கிலிருந்து ரூ.93 ஆயிரம் எடுத்து க்கொண்டு பையில் போட்டு க்கொண்டு சைக்கிளில் நிதி நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சிவராஜபுரம் பகுதியில் தயாளன் சென்று கொண்டிருந்த போது பின்னாடியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரைப் பார்த்து ஏதோ கேட்டுள்ளனர். அப்போது திடீரென தயாளின் முதுகு அரிப்பு எடுத்துள்ளது.
அதற்குள் மோட்டார் சைக்கிளில் பின்னாடி வந்த மர்ம நபர்கள் அவரது கவனத்தை திசை திருப்பி சைக்கிளில் மாட்டி இருந்த 93 ஆயிரம் ரூபாய் இருந்த பையை எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சென்று விட்டனர்.
இதுகுறித்து நிதி நிறுவனத்தினர் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து டவுன் போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கடையில் பொறுத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் தயாளனை பின் தொடர்ந்து இருவர் வருவது தெரிந்தது.
குடியாத்தம் நகரில் பொதுமக்கள் பங்களிப்போடு காவல்துறையினர் வங்கிகள், பஸ் நிலையம், நகைக்கடை பஜார், தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
ஆனால் சில கேமராக்களே இயங்குகிறது. பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் இயங்கவில்லை. அதனை காவல்துறையினர். இதனால் வரை சீர் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால் நிதி நிறுவன ஊழியரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்க்க முடியவில்லை. இதனால் குற்றவாளிகளின் அடையாளங்களை துப்பு துலக்குவதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
- 184 மாணவ-மாணவிகள் நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெரும் போதே வேலைவாய்ப்புக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
- இந்தியாவிலேயே முதன்முறையாக அமேசான் நிறுவனம் வி.ஐ.டி. மாணவ, மாணவிகள் 110 பேருக்கு தொழில் பயிற்சி வழங்கியுள்ளது.
வேலூர்:
வி.ஐ.டி.யில் 2023 ஆம் கல்வியாண்டின் வேலைவாய்ப்பு முகாம் கடந்த 12-ந் தேதி தொடங்கியது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் சர்வதேச பெரு நிறுவனங்களான மைக்ரோசாப்ட் டி.இ.ஷா, மோர்கன் ஸ்டான்லி ஏர்.பி.என்.பி. மற்றும் மீடியா.நெட் பங்கு பெற்றன.
வி.ஐ.டி. வேலூர், சென்னை, அமராவதி (ஆந்திரபிரதேசம்) மற்றும் போபால் (மத்திய பிரதேசம்) மாணவ-மாணவிகளை வேலைவாய்ப்பு முகாம்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டன.
இதில் வேலை வாய்ப்புக்கான முதல்கட்டமாக நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள், வேலைக்குத் தேவைப்படும் திறன்கள், மாணவ, மாணவிகளுக்கு தேவையான மனித வளப்பயிற்சி நேரடியாகவும், இணையம் மூலமாகவும் தேர்வுகள் நடைபெற்றன.
முதற்கட்ட தேர்வு முடிவுகளை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் வெளியிட்டார், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் 45 மாணவ-மாணவிகளை தேர்வு செய்தது. அதேபோல் டி.இ.ஷா, மோர்கன் ஸ்டான்லி, ஏர் பி.என்.பி. மீடியா.நெட் ஆகிய நிறுவனங்களும் மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கின.
மோட்டார் க்யூ என்ற நிறுவனம் அமித் அகர்வால், ஷ்ரதக் பரத்வாஜ் ஆகிய 2 மாணவர்களுக்கு ஆண்டுக்கு 1 கோடியே 2 லட்சம் சம்பளத்திற்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பு முகாமின் முதல் கட்டத்தில் தொடர்ச்சியாக பெரு நிறுவனங்களான அமேசான், டெக்சஸ் இன்ஸ்ட்ரூமென்ட், வால்மார்ட் லேப்ஸ் போன்ற நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெற உள்ளன.
184 மாணவ-மாணவிகள் நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெரும் போதே வேலைவாய்ப்புக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
மைக்ரோசாப்ட்- 22, டி.இ.ஷா-2, பிடிலிடி முதலீடு நிறுவனம்-24, ஜே.பி. மோர்கன்-82, வெல்ஸ் பார்கோ-8, இன்போசிஸ்-7, தி மேத்-32 மற்றும் ஸ்னைடர் எலக்ட்ரிக்-7.
ஆண்டுக்கு 10 லட்சத்திற்கும் மேல் சம்பளம் உள்ள வேலைவாய்ப்புகள் 175 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வழங்கும் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஷெல், ஆரக்கள், பிலிப்கார்ட், மேக் மை ட்ரிப், நீல்சன் சாப்ட் லேப்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன.
இந்தியாவிலேயே முதன்முறையாக அமேசான் நிறுவனம் வி.ஐ.டி. மாணவ, மாணவிகள் 110 பேருக்கு தொழில் பயிற்சி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டி.சி.எஸ். நிறுவனம் நடத்திய தேசிய தகுதித்தேர்வில் 4630 மாணவ-மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர். முதுகலை எம்.டெக்., எம்.சி.ஏ., மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் மார்ச் மாதம் தொடங்கியது.
இதில் 88 பெருநிறுவன நிறுவனங்கள் 1204 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி உள்ளது.
வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் வேலைவாய்ப்பு வழங்கிய நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
- பஸ்கள் இயக்கப்படும் இடங்களை அடிக்கடி மாற்றுவதால் பயணிகள் கடும் அவதி
- திருப்பதி பஸ்களை புதிய பஸ்நிலையத்தில் இருந்து இயங்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்தார்.
ஆனாலும் இறுதி கட்டப்பணிகள் முடிவடையாததால் அங்கிருந்து இன்னும் பஸ்கள் இயக்கப்படவில்லை.
சென்னை செல்லும் பஸ்கள் மட்டும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வேலூர் பழைய பஸ் நிலையம் மற்றும் மக்கான் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. மக்கான் பஸ் நிலையத்தில் இருந்து சித்தூர் திருப்பதி மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் திருவண்ணாமலை திருச்சி ஆரணி விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தன. திடீரென இந்த பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட சித்தூர், திருப்பதி மற்றும் திருவண்ணாமலை, திருச்சி, ஆரணி, விழுப்புரம் பஸ்கள் அனைத்தும் நாளை முதல் மக்கான் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒரு முறை பஸ் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டபோது பயணிகள் மக்கான் பஸ் நிலையத்திற்கு சென்று ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் அதே பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.இதனால் தற்போது பழைய பஸ் நிலையத்தில் இருந்து சித்தூர் திருப்பதி செல்லும் பயணிகள் மக்கான் தற்காலிக பஸ்நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாறி மாறி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
திருவண்ணாமலை திருச்சி ஆரணி விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தின் வழியாகவே செல்லும்.இதனால் அந்த பகுதிகளுக்கு செல்லும் பொது மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் சித்தூர் திருப்பதி செல்லும் பயணிகள் அவதி அடைய நேரிடும். தென் மாவட்டங்களில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்கள் வேலூர் வழியாகவே சென்று வருகிறார்கள்.அவர்களுக்கு இந்த போக்குவரத்து மற்றும் தெரியாததால் அலைக்கழிப்பு ஏற்படும்.
எனவே திருப்பதி சித்தூர் செல்லும் பஸ்களை தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தின் ஒரு பகுதியிலிருந்து இயக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை செல்லும் பஸ்கள் இயக்கப்படுவது போல திருப்பதி சித்தூர் பஸ்களை மட்டுமாவது தற்போது புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- பயணிகள் மேம்பாட்டு குழு ஆய்வு
- ரூ.365 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளது
வேலூர்:
தென்னக ரெயில்வேயின் சென்னை கோட்டத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ரெயில்வே சந்திப்பாக காட்பாடி ரெயில்வே சந்திப்பு உள்ளது. தினமும் இங்கு 120 ரெயில்கள் வரை நின்று செல்கின்றன. நாள்தோறும் 30 ஆயிரம் பயணிகள் வரை வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நாட்டில் உள்ள ரெயில் நிலையங்களை அவற்றின் பழமை மாறாமல் சர்வதேச தரத்தில் மேம்படுத்த இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக நாடு முழுவதும் 50 ரெயில் நிலை யங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்கள் அடங் கியுள்ளன. இதற்காக ரூ.1,800 கோடியில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதில் காட்பாடி ரெயில் நிலையம் ரூ.365 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. ரெயில் நிலையத்தின் தற்போதைய முகப்பு தோற்றம் முற்றிலும் மாறுகிறது. ரெயில் நிலையம் வேலூர் சித்தூர் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் இந்த சாலையை கடப்பதை தவிர்க்கும் வகையில் அமைகிறது. அதற்கேற்ப சாலை வசதியும் செய்யப்பட உள்ளது.
தற்போதுள்ள 5 பிளாட் பாரங்களுடன் கூடுதலாக 2 புதிய பிளாட்பாரங்கள் நவீன முறையில் அமைகிறது. மேலும் பயணிகள் பிளாட்பாரங்களுக்கு செல்லும் இப்போதுள்ள நடைமேம்பாலத்துடன், மற்றொரு நடைமேம்பாலம் கூடுதலாக அமையும் 2 பிளாட்பாரங்களுடன் சேர்த்து 7 பிளாட்பாரங்களுக்கும் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. அதேபோல் சரக்கு ரெயிலுக்கான ஒரு பிளாட்பாரம் நவீனமாக மாற்றப்படுகிறது.
இத்திட்டத்துக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி மே மாதம் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் தென்னக ரெயில்வே கமிட்டி சேர்மன் பி.கே.கிருஷ்ண தாஸ் தலைமையில் 9பேர் கொண்ட குழுவினர் டபுள்டெக்கர் ரெயில் மூலம் நேற்று காட்பாடி ரெயில் நிலையம் வந்தனர்.
இங்கு அனைத்து பிளாட்பாரங் கள், பயணிகள் தங்கும் அறை, கழிவறை, பார்க் கிங் வசதி, டிக்கெட் புக்கிங் வசதி, ரெயில்வே உணவகம், குழந்தைகளுக்கான உதவி மையம், சிசிடிவி கேமராக்கள், அவற்றின் கட்டுப்பாட்டு அறை, ரெயில்வே பாதுகாப்புப்படை ஸ்டேஷன், லிப்ட் வசதி, நகரும் படிக்கட்டு வசதிகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ரெயில் நிலைய அதிகாரிகள், பொறியாளர்களிடம் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.365 மதிப்பிலான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினர்.
- செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. பேட்டி
- போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக மேம்பாலம் கட்டுவதற்கான வரைபடத்தையும் பார்வையிட்டு ஆய்வு
வேலூர்:
தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ தலைமையில் சிந்தனைச் செல்வன், பிரகாஷ் வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகிய உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் நேற்று வேலூருக்கு வந்தனர். அவர்கள் சத்துவாச்சாரி பெருமுகை பாலாற்றில் பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர்.
வரைபடம் ஆய்வு
வேலூர் ஆவின் நிறுவனம் மற்றும் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மேம்பாலம் கட்டுவதற்கான வரைபடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வேலூர் கோட்டையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
இன்று காலையில் வேலூர் ஜெயிலுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. கூறியதாவது
வேலூர் ஜெயிலில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.சிறைத்துறை சார்பாக சில புகார்கள் வந்துள்ளன. ஜெயிலில் மனித உரிமை நிலை நாட்ட வேண்டும். அங்குள்ள மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்.
உணவு உறுதி செய்ய வேண்டும். சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உணவு வழங்க பரிந்துரை செய்துள்ளோம்.
ஜெயிலில் டாக்டர் செவிலியர் பற்றாக்குறை உள்ளது.மேலும் இங்கு உள்ள கைதிகள் கொசுக்கடியால் அவதி அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு கொசு வலை வழங்க பரிந்துரை செய்துள்ளோம்.மற்ற ஜெயில் களை விட வேலூர் ஜெயில் தூய்மையாகவும் நன்றாக பராமரிக்கவும் செய்கிறார்கள்.
கைதிகள் மனம் திருந்தும் வகையில் ஜெயில் வளாகத்திற்குள் சில ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதனை கண்டு நெகிழ்ச்சி அடைந்தோம்.
சில தவறுகளால் வாழ்க்கையை தொலைத்து கைதிகளாக மாறி உள்ளவர்களுக்கு மனித உரிமை மீறக் கூடாது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க சட்டமன்றத்தில் வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாகன ஓட்டிகள் கடும் அவதி
- தினமும் அதிகளவிலான வாகனங்கள் சென்று வருகிறது
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லியம்மன் கோவில் அருகே பாலாற்றின் குறுக்கே கடந்த 1973 -ம் ஆண்டு மேம்பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த பாலம் தற்போது ஒரு வழி பாதையாக பயன்படுத்தப்படுகிறது. காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி வரும் வாகனங்கள் இதன் வழியாக இயக்கப்படுகின்றன.
பழைய பாலாற்று பாலத்தில் எல்.ஈ.டி தெருவிளக்குகள், ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை செய்யவில்லை. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படும் பாலம், அரசு பஸ்கள், பள்ளி வேன்கள், ஆட்டோ, கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உட்பட வாகன ஓட்டிகளுக்கு முக்கிய இணைப்பாக உள்ளது.
இதன் விளைவாக, பாலம் அதிகபட்ச போக்குவரத்து இயக்கத்தைக் காண்கிறது, குறிப்பாக நெரிசல் நேரங்களில். இந்த பாலத்தில் வரும் அதிகாரிகள், பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க அக்கறை காட்டவில்லை. வாகன ஓட்டிகள் தங்களைத் தாங்களே ஆபத்தில் ஆழ்த்த வேண்டியுள்ளது.
பிரகாசமான தெருவிளக்குகள் இல்லாமல் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. சேதமடைந்த பாலத்தில் ரூ.4.5 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணியின் ஒரு பகுதியாக எல்இடி தெருவிளக்குகள், டைல்ஸ் பதித்த நடைபாதை, எச்சரிக்கை பலகைகள், பிடுமன் கார் ரேஜ்வே போன்ற இந்த வசதிகள் 4 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டது.
அதன்பிறகு பாலத்தில் பெரிய அளவில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ப்படவில்லை. பாலம் குறுகலாக இருந்ததால், ஆரம்ப ஆண்டுகளில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்கள் விளைபொருட்களுடன் வேலூர், ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை, ஆம்பூர், ஆரணி மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு மாட்டு வண்டிகளில் வந்தனர்.
அன்றைய காலக்கட்டத்தில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது. இதன் விளைவாக, ஏற்கனவே இருந்த பழைய பாலத்திற்கு இணையாக ஒரு புதிய பாலம் ஏப்ரல் 2010-ல் கட்டப்பட்டது. இப்போது காட்பாடியிலிருந்து வேலூர் நகருக்கு வாகனங்கள் செல்ல பழைய பாலாறு பாலம் ஒரு வழியாக பயன்படுத்தப்படுகிறது.
பழைய பாலத்தில் பழுதடைந்த தெருவிளக்குகளை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






