என் மலர்
நீங்கள் தேடியது "Extortion of Rs. 93 thousand from the employee"
- சி.சி.டி.வி. கேமரா செயல்படவில்லை
- குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தொய்வு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் கோட்டா சுப்பையா தெருவில் ஒரு நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் தயாளன் (வயது 60). என்பவர் வேலை செய்து வருகிறார்.
தயாளன் நேற்று மதியம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று நிதி நிறுவனத்தின் கணக்கிலிருந்து ரூ.93 ஆயிரம் எடுத்து க்கொண்டு பையில் போட்டு க்கொண்டு சைக்கிளில் நிதி நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சிவராஜபுரம் பகுதியில் தயாளன் சென்று கொண்டிருந்த போது பின்னாடியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரைப் பார்த்து ஏதோ கேட்டுள்ளனர். அப்போது திடீரென தயாளின் முதுகு அரிப்பு எடுத்துள்ளது.
அதற்குள் மோட்டார் சைக்கிளில் பின்னாடி வந்த மர்ம நபர்கள் அவரது கவனத்தை திசை திருப்பி சைக்கிளில் மாட்டி இருந்த 93 ஆயிரம் ரூபாய் இருந்த பையை எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சென்று விட்டனர்.
இதுகுறித்து நிதி நிறுவனத்தினர் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து டவுன் போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கடையில் பொறுத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் தயாளனை பின் தொடர்ந்து இருவர் வருவது தெரிந்தது.
குடியாத்தம் நகரில் பொதுமக்கள் பங்களிப்போடு காவல்துறையினர் வங்கிகள், பஸ் நிலையம், நகைக்கடை பஜார், தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
ஆனால் சில கேமராக்களே இயங்குகிறது. பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் இயங்கவில்லை. அதனை காவல்துறையினர். இதனால் வரை சீர் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால் நிதி நிறுவன ஊழியரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்க்க முடியவில்லை. இதனால் குற்றவாளிகளின் அடையாளங்களை துப்பு துலக்குவதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.






