search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Penalty for shops"

    • உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
    • எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது

    ஆம்பூர்:

    ஆம்பூரில் சாலையோர கடைகள் மற்றும் சில ஓட்டல்களில் உணவுகள் தரமற்றதாக இருப்பதாக உணவு துறை அதிகாரிக ளுக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஆம்பூர் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஆகியோர் ஆம்பூர் நகராட்சி பகுதியில் உள்ள உமர் ரோட்டில் பானிபூரி கடை, போண்டா கடை மற்றும் தள்ளுவண்டிசிக்கன், மட்டன் சூப் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் 3 தள்ளு வண்டி கடைகளுக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்று இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்று பெற எச்சரித்து நோட்டீஸ் வழங் கப்பட்டது.

    மேலும் 2 கடைகளில் தமிழக அரசு தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து தலா ரூ.2000 வீதம் ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு தள்ளு வண்டி கடையில் ஒருமுறை பயன்படுத்திய எண் ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து சுமார் 3 லிட்டர் எண்ணெய்யை பறிமுதல் செய்து கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் அந்த கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்து ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    தள்ளுவண்டி கடைக்காரர்கள் உணவுப் பொருளில் வண் ணம் சேர்க்காமல், வாழை இலையை பயன்படுத்துவது, சில் வர் பிளேட்டில் உணவு தருவது, பஜ்ஜி போன்றவற்றை கண் ணாடி பெட்டியில் வைத்து விற்பனை செய்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    கோபால்பட்டியில் உள்ள கடைகள் மற்றும் பேக்கரிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அசோக்குமார் தலைமையில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக்கூடாது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய கூடாது. மேலும் மருந்துக் கடைகளில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கக்கூடாது. மருந்துக் கடைகளில் சட்டவிரோதமாக மருத்துவம் பார்த்தல், ஊசி செலுத்துதல் போன்றவை கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    மேலும் எச்சரிக்கை அறிவிப்புகள் இல்லாமல் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    • திடீரென ஆய்வு செய்தனர்
    • ரூ.5 ஆயிரம் வசூல்

    வேலூர்:

    காட்பாடி காந்தி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    அவரது உத்தரவின் பேரில் மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காட்பாடி காந்தி நகரில் உள்ள கடைகளில் இன்று காலை திடீரென ஆய்வு செய்தனர்.

    அப்போது 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பயன்படுத்திய 5 கடைகளுக்கும் தலா ரூ.200 வீதம் அபராதம் செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து பிளாஸ்டிக் பை பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    ×