search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தத்தில் கோவை, பெங்களூர் செல்லும் அதிவேக விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்
    X

    பயணிகள் நலவாரிய தலைவரிடம் பா.ஜ.க.வினர் மனு அளித்த காட்சி.

    குடியாத்தத்தில் கோவை, பெங்களூர் செல்லும் அதிவேக விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்

    • பயணிகள் நலவாரிய தலைவரிடம் பா.ஜ.க.வினர் மனு
    • ஏராளமான பொதுமக்கள் பயனடைவார்கள்

    குடியாத்தம்:

    குடியாத்தம் ெரயில் நிலையத்திற்கு ெரயில்வே பயணிகள் நல வாரியம் மற்றும் சேவை குழுவின் தலைவர் கிருஷ்ணதாஸ் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் வருகை தந்து ஆய்வு செய்தனர்.

    அப்போது ெரயில்வே பயணிகள் சேவை குழுவின் தலைவர் கிருஷ்ணதாஸிடம் குடியாத்தம் நகர பாஜக தலைவர் ராஜாசெல்வேந்திரன், பாஜக வேலூர் மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் சுசில்குமார் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அப்போது பாஜக வர்த்தக அணி முன்னாள் மாநில துணைத்தலைவர் பி.என்.எஸ்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    பா.ஜ.க.வினர் அளித்த மனுவில் ஊர்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர் ஆனால் குடியாத்தம் ரயில் நிலையத்தில் சில ெரயில்களே நின்று செல்கிறது கூடுதலாக ெரயில்கள் நின்று செல்ல வேண்டும்.

    ெரயில் நிலையத்தில் இரு மார்க்கத்திலும் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ், சென்னையிலிருந்து கோவை செல்லும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் நின்று செல்ல வேண்டும்.

    அதேபோல் பாலக்காடு சென்னை பழனி எக்ஸ்பிரஸ், சென்னை ஆலப்புழா தன்பாத் எக்ஸ்பிரஸ், மைசூர் திருப்பதி எக்ஸ்பிரஸ், அரக்கோணம் மைசூர் பேசஞ்சர் ெரயில், சென்னை ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ், அரக்கோணம் சேலம் பேசஞ்சர் ஆகிய ெரயில்கள் ஒரு மார்க்கத்தில் மட்டும் குடியாத்தத்தில் நின்று சென்றது. கொரோனா காலத்தில் இந்த ெரயில்கள் குடியாத்தத்தில் நிறுத்தப்படவில்லை.

    தற்போது இந்த ரயில்கள் மீண்டும் குடியாத்தத்தில் நிறுத்த வேண்டும், அந்த ெரயில்களை குடியாத்தத்தில் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    Next Story
    ×