என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The lights are not lit"

    • வாகன ஓட்டிகள் கடும் அவதி
    • தினமும் அதிகளவிலான வாகனங்கள் சென்று வருகிறது

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லியம்மன் கோவில் அருகே பாலாற்றின் குறுக்கே கடந்த 1973 -ம் ஆண்டு மேம்பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த பாலம் தற்போது ஒரு வழி பாதையாக பயன்படுத்தப்படுகிறது. காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி வரும் வாகனங்கள் இதன் வழியாக இயக்கப்படுகின்றன.

    பழைய பாலாற்று பாலத்தில் எல்.ஈ.டி தெருவிளக்குகள், ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை செய்யவில்லை. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படும் பாலம், அரசு பஸ்கள், பள்ளி வேன்கள், ஆட்டோ, கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உட்பட வாகன ஓட்டிகளுக்கு முக்கிய இணைப்பாக உள்ளது.

    இதன் விளைவாக, பாலம் அதிகபட்ச போக்குவரத்து இயக்கத்தைக் காண்கிறது, குறிப்பாக நெரிசல் நேரங்களில். இந்த பாலத்தில் வரும் அதிகாரிகள், பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க அக்கறை காட்டவில்லை. வாகன ஓட்டிகள் தங்களைத் தாங்களே ஆபத்தில் ஆழ்த்த வேண்டியுள்ளது.

    பிரகாசமான தெருவிளக்குகள் இல்லாமல் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. சேதமடைந்த பாலத்தில் ரூ‌.4.5 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணியின் ஒரு பகுதியாக எல்இடி தெருவிளக்குகள், டைல்ஸ் பதித்த நடைபாதை, எச்சரிக்கை பலகைகள், பிடுமன் கார் ரேஜ்வே போன்ற இந்த வசதிகள் 4 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டது.

    அதன்பிறகு பாலத்தில் பெரிய அளவில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ப்படவில்லை. பாலம் குறுகலாக இருந்ததால், ஆரம்ப ஆண்டுகளில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்கள் விளைபொருட்களுடன் வேலூர், ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை, ஆம்பூர், ஆரணி மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு மாட்டு வண்டிகளில் வந்தனர்.

    அன்றைய காலக்கட்டத்தில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது. இதன் விளைவாக, ஏற்கனவே இருந்த பழைய பாலத்திற்கு இணையாக ஒரு புதிய பாலம் ஏப்ரல் 2010-ல் கட்டப்பட்டது. இப்போது காட்பாடியிலிருந்து வேலூர் நகருக்கு வாகனங்கள் செல்ல பழைய பாலாறு பாலம் ஒரு வழியாக பயன்படுத்தப்படுகிறது.

    பழைய பாலத்தில் பழுதடைந்த தெருவிளக்குகளை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×