search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hotel owners protest"

    • 12 சதவீத வரி விதிக்கப்பட்டதால் வாடகை உயர்த்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வேலூர்:

    வேலூர் காந்தி ரோட்டில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வேலூர் மாநகர தங்கும் விடுதி உரிமையாளர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரூ.ஆயிரத்துக்கு குறைவாக உள்ள விடுதி அறைக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்தத்தை கண்டித்து கோஷமிட்டனர். இது குறித்து ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    வேலூரில் உள்ள விடுதிகளில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நடுத்தர மற்றும் ஏழை நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். நோயாளிகளிடம் குறைந்த அளவு அறை வாடகை வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதால் அறை வாடகை உயர்த்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கின்றனர். ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என கூறினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஞானவேலு, செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் தேஜா மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×