search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scooter on fire"

    • கண்ணிமைக்கும் நேரத்தில் முற்றிலும் எரிந்தது
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள மூஞ்சூர் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.இவர் இன்று காலை சென்னைக்கு புறப்பட்டார்.

    அவரை பஸ் ஏற்றி விடுவதற்காக அவரது மகன் கணேசன் ஸ்கூட்டரில் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார்.

    தந்தையை பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு கணேசன் வீட்டிற்கு புறப்பட்டார். கிரீன் சர்க்கிள் அருகே உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகம் அருகே சென்ற போது திடீரென அவரது ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கீழே குதித்து தப்பினார். கண்ணி மைக்கும் நேரத்தில் ஸ்கூட்டர் மளமளவென எரிய தொடங்கியது. இது குறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் வருவதற்குள் ஸ்கூட்டர் முழுவதுமாக எரிந்து நாசமானது. நடுரோட்டில் ஸ்கூட்டர் எரிந்ததால் கிரீன் சர்க்கிளில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஸ்கூட்டர் எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×