என் மலர்
வேலூர்
- அரசு விழாவில் மின்சாரம் தடைபட்டதால் நடவடிக்கை
- 10 நிமிடங்கள் கடந்தும் மின்சாரம் வரவில்லை
வேலூர்:
காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.
தொடர்ந்து காட்பாடி அரசு பெண்கள் பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதிலும் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு சைக்கிள் வழங்கி பேசினார்.
அப்போது 70 ஆண்டுகளுக்கு முன்பு தான் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்ற நினைவு குறித்தும் தனக்கு பாடம் கற்றுத்தந்த ஆசிரியர் குறித்து மாணவர்களிடம் மிகுந்த ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் திடீரென மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் அமைச்சர் துரைமுருகன் இருக்கையில் சென்று அமர்ந்து விட்டார். உடனே கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் மின்வாரிய அதிகாரிகளை பதட்டத்துடன் தொடர்பு கொண்டனர்.
10 நிமிடங்கள் கடந்தும் மின் இணைப்பு வரவில்லை. இதனால் அமைச்சர் துரைமுருகன் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் காட்பாடி, தாராப்படவேடு ஆகிய பகுதி துணை மின் நிலைய உதவி பொறியாளர்கள் கிரண்குமார், சிட்டிபாபு ஆகிய 2 பேரை காட்பாடி வடுகன்தாங்கல் துணை மின் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் மின்வாரிய ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 195 பேரை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்
- தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை வேலூர் மாவட்ட பாஜக சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ஜெகன், எஸ்.எல். பாபு, மகேஷ், பொருளாளர் தீபக், துணைத் தலைவர்கள் சரவணகுமார், யுவராஜ் செயலாளர்கள் ஜெகன், சுகுணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி மற்றும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க கோரியும் மாநகராட்சி சீர்கேட்டை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். வேலூர் மாநகராட்சியில் முறைகேடு நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டி கோஷம் எழுப்பினர்.
பா.ஜ.க. போராட்டத்தை யொட்டி மாநகராட்சி அலுவலக கேட் மூடப்பட்டது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பாஜகவினரை தடுத்து நிறுத்தினர். இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றி சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 195 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
- 16-ந் தேதி திட்டம் தொடங்குகிறது
- நாளை சோதனை முறையில் உணவு வழங்க ஏற்பாடு
வேலூர்:
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படு ம்என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டம் வருகிற 16-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக அனைத்து பகுதிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
வேலூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 48 அரசு தொடக்கப் பள்ளிகளில் 3,469 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி குழந்தைகளுக்கு உணவு சமைப்பதற்காக காட்பாடி காந்தி நகர் சத்துவாச்சாரி கஸ்பா ஆகிய இடங்களில் ஸ்மார்ட் சமையலறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
தற்காலிக இடங்களில் தற்போது உணவு சமைத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு எப்படி உணவு கொண்டு செல்வது என்பது குறித்து வாகனங்கள் இயக்கி இன்று பரிசோதிக்கப்பட்டது.
உணவு தயாரிப்பு மையங்களில் இருந்து வாகனங்கள் எந்த வழியாக சென்று பள்ளிகளுக்கு உணவுகளை சப்ளை செய்ய வேண்டும் என சோதனை முறையில் செய்து காட்டினர்.
நாளை பள்ளி குழந்தைகளுக்கு சோதனை முறையில் உணவு வழங்கப்படுகிறது.
- வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் எதிரொலியாக நடந்தது
- 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அதிகாரிகள் ஆய்வு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் கடந்த புதன்கிழமை வரலாறு காணாத அளவில் பெருத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் குடியாத்தம்-காட்பாடி ரோடு நான்கு முனைசந்திப்பு பகுதியில் இருந்து சேம்பள்ளி கூட்ரோடு வரை பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கானோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
போக்குவரத்து நெரிசல் எதிரொலியாக மறுநாள் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பகுதியில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாது சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஆக்கிரமிப்புகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
போக்குவரத்து நெரிசல் குறித்தும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் சென்றுவர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்
அதன் எதிரொலியாக சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது, கடைகளில் முன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கலெக்டர் ஓரிரு தினங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைதொடர்ந்து நேற்று குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி சாலையின் இருபுறமும் கடைகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இப் பணிகளை குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 17 ஆலைகளில் திடீர் சோதனை
- கடத்தலில் ஈடுபட்ட 23 பேர் கைது
வேலூர்:
தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்துகின்றனர். அங்குள்ள அரசி ஆலைகளில் பாலீஷ் செய்யப்படும் அரிசி மீண்டும் தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
இந்த முறைகேட்டை தடுக்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.
இதன் தொடர்ச்சியாக ஆந்திர மாநிலத்தையொட்டிய கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை அதிகரிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனுமதியுடன் பொது விநியோக திட்டத்துக்காக அரிசி அரவை செய்யும் 17 ஆலைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, முத்தரசிகுப்பம் சோதனைச்சாவடிகள் மற்றும் பள்ளிகொண்டா சங்கச்சாவடிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை விடிய, விடிய வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விரைவில் முழு வீச்சில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கவுள்ளனர். இதற்கான பணிகளால் விவசாயிகளிடம் இருந்து முறையாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? அரிசி அரவை ஆலைகளில் நெல் மூட்டைகள் பதுக்கப்படுகிறதா? விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்கிறார்களா? என்றும் கண்காணிக்க உள்ளனர்.
''ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 32 வழக்குகளில் 23 பேர் கைது செய்யப்பட்டு, 74 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 9 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வரும் நாட்களில் கடத்தலை தடுக்க திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு தலா ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 4 காவலர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தனித்தனியாக செயல்படும்போது அரிசி கடத்தல் நடவடிக்கை குறையும்.
ஆந்திர மாநிலத்துக்கான அரிசி கடத்தல் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் சோதனையில் ஈடுபட்டோம். பல நேரங்களில் நாங்கள் இருப்பதை தெரிந்துகொண்டு அவ் வழியாக கடத்தல் வாகனங்கள் செல்வது தடை செய்யப்படுகிறது.
இதை முறியடிக்க விரைவில் 'ஸ்பை கேமரா' பயன்படுத்த உள்ளோம். இதை ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொருத்திவிட்டு நாங்கள் ரகசியமாக காண்காணிக்க முடியும்'' என தெரிவித்தனர்.
- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
- திடீரென மின்சாரம் தடைபட்டதால் அதிகாரிகளும், எம்.எல்.ஏ.க்களும் மின்துறைக்கு போன் போட்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. உடனே அதிகாரிகளும், எம்.எல்.ஏ.க்களும் மின்துறைக்கு போன் போட்டனர். இருந்தும் 10 நிமிடம் வரை மின்சாரம் வரவில்லை. இதனால் விழாவை பாதியில் முடித்துக்கொண்டு அமைச்சர் துரைமுருகன் புறப்பட்டு சென்றார்.
- ரூ.1.17 லட்சத்தை மீட்டு தர கோரி மகளிர் சுய உதவி குழுவினர் மனு
- போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பள்ளிகொண்டா அருகே ஈடியர் பாளையத்தை சேர்ந்த பெண்கள் சிலர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தை சேர்ந்த சுமார் 14 பெண்கள் ஒன்றிணைந்து மகளிர் சுய உதவிக் குழு ஒன்று கடந்த 2019 -ம் ஆண்டு ஆரம்பித்தோம். 2020 -ம் ஆண்டு எங்கள் குழுவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் எடுத்தார்.
சில மாதங்கள் அதற்கான வட்டி செலுத்தினார். பின்னர் அவர் வட்டியும் செலுத்தவில்லை, வாங்கிய தொகையும் திருப்பி கொடுக்கவில்லை. தற்போது நாங்கள் அனைவரும் அந்த தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த உறுப்பினரிடம் கேட்கச் சென்றால் அவர் தலைமறைவாகிவிட்டார்.
பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை
- சோதனைகள் தீவிரபடுத்தப்ப்படும் என அதிகாரிகள் அறிவிப்பு
வேலூர்:
கர்நாடாகா, ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புல னாய்த்துறை டி.ஜி.பி ஆபாஷ் குமார் அவர்களின் உத்தரவின் பேரில், கண்காணிப்பாளர் கீதா மேற்பார்வையில் வேலூர் துனை கண்காணிப்பாளர் நந்தகுமார், ஆய்வாளர் சதீஷ் தலைமையிலான போலீசார் வேலூரை சுற்றி உள்ள சோதனை சாவடிகளில் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்,
அதேபோல் நெல் அரவை ஆலைகளில் எதாவது கலப்படம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் இது போன்று சோதனைகள் தீவிரபடுத்தப்ப்படும் என்று தெரிவித்தனர்.
- நாளை சோதனை முறையாக வழங்கப்படுகிறது
- மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு
வேலூர்:
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த திட்டம் வருகிற 16-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக அனைத்து பகுதிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
வேலூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 48 அரசு தொடக்கப் பள்ளிகளில் 3,469 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சமையலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நாளை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் சோதனைக்கு கொண்டுவரப்படுகிறது.
முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு தினந்தோறும் இந்த பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 3 பேர் பைக்கில் வந்து துணிகரம்
- பைக் நிலைத்தடுமாறி தாய் மகன் கீழே விழுந்தனர்
வேலூர்:
வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த தாய் மகன் இருவரும் பைக்கில் செதுவாலை சென்றனர். பின்னர் அங்கிருந்து நேற்று வீடு திரும்பினார்.
பைக்கின் பின்னால் தாயார் அமர்ந்திருந்தார். வேலூர் கருகம்பத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது அந்த பெண் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அவர்களை ஒரே பைக்கில் வந்த வாலிபர்கள் பின் தொடர்ந்து சென்றனர். தாய் மகன் இருவரும் கருகம்பத்தூர் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களின் அருகே வாலிபர்கள் சென்று அதில் ஒருவன் திடீரென அந்த பெண்ணின் செல்போனை பறிக்க முயன்றார்.
உடனே சுதாரித்துக் கொண்ட அவர் செல்போனை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். எனினும் அந்த வாலிபர் இழுத்ததில் பைக் நிலைத்தடுமாறி தாய் மகன் இருவரும் கீழே விழுந்தனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வருவதைக் கண்ட வாலிபர்கள் 3 பேரும் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
பின்னர் இருவரையும் மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டப்பகலில் பைக்கில் சென்ற பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வாகன ஓட்டிகள் மறியல்
- 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வருவதால் ஆத்திரம்
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை தடுப்பதற்காக நேற்று முன்தினம் வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
போக்குவரத்து மாற்றம்
வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய பஸ் நிலைய பணிகள் நிறைவடையாததால் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய மீன் மார்க்கெட் அருகில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. புதிய பஸ் நிலைய பணிகள் நிறைவடைந்த ததைடுத்து கடந்த வாரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பஸ்கள் செல்லியம்மன் கோவில் எதிரே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.
மேலும் பஸ் நிறுத்தம் அருகே ரோட்டிலேயே ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர் இதனால் காட்பாடி வேலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை போக்குவரத்து போலீசார் யாரும் கண்டு கொள்வது இல்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்து வதற்காக சென்னை மார்க்கமாக வேலூருக்கு வரும் வாகனங்கள் சென்னை சில்க்ஸ் அருகே சர்வீஸ் சாலையில் திரும்புவதற்கு பதிலாக தடுப்புகள் அமைத்து வாகனங்கள் நேராக அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோல் நேஷனல் தியேட்டர் அருகே இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சாலையில் தடுப்புகளை அமைத்து பெட்ரோல் பங்க் அருகே சென்று சர்வீஸ் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் குறுகிய சர்வீஸ் சாலையில் சென்றதால் வேலூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் கிரீன் சர்கிள் வழியாக வாக னங்கள் இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.
இந்த நிலையில் இன்று காலை சென்னை சில்க்ஸ் சர்வீஸ் சாலையில் தடுப்புகளை அமைத்ததால் சுமார் 2 கி.மீ தூரம் வாகனங்கள் சுற்றி வர வேண்டியதால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சா லையில் வாகனங்களை நிறுத்திவிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் போக்குவரத்து மாற்றம் குறித்து தங்களுக்கு தெரியாததால் கலெக்டர் அலுவலக அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்த தாகவும், போக்குவரத்து மாற்றத்தால் சிரமம் அடைந்து உள்ளதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை பைக்கில் முட்டி தள்ளினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்ததைக் கண்ட வாகன ஓட்டிகள் மறியலை கைவிட்டு தங்களது வாகனங்களை எடுத்துக் கொண்டு சென்றனர்.
போக்குவரத்து மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சா லையில் மறியலில் ஈடுபட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தாக்கியதால் இறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் சுதாகர் (வயது 26) கட்டிடம் மேஸ்திரி வேலை செய்து வந்தார்.
விபத்து
கடந்த புதன்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் சுதாகர் தனது வீட்டிலிருந்து குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பெரும்பாடி அருகே உள்ள துரைப்பட்டி என்ற கிராமத்துக்கு அருகே வரும்போது லட்சுமி (65) என்ற பெண் மீது மோதியதாக கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சுதாகர் குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
லட்சுமி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சுதாகரின் தாயார் பொன்னியம்மாள் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் எனது மகன் சுதாகர் மோட்டார் சைக்கிளில் வரும்போது விபத்து ஏற்பட்டதாகவும் அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் எனது மகன் சுதாகரை சரமாரியாக தாக்கியதால் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறியுள்ளார்.
இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் சுதாகர் பரிதாபமாக இறந்தார். அந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இறந்து போன சுதாகரின் உறவினர்கள் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீசாரிடம் விபத்து என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய வேண்டும்.
விபத்து நடந்த போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதால்தான் சுதாகர் இறந்துவிட்டார் என கூறினார்கள்.
இதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி கிராம மக்களிடம் சுதாகரின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கையின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார்.
இறந்துபோன சுதாகருக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.






