என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government breakfast"

    • 16-ந் தேதி திட்டம் தொடங்குகிறது
    • நாளை சோதனை முறையில் உணவு வழங்க ஏற்பாடு

    வேலூர்:

    தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படு ம்என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டம் வருகிற 16-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக அனைத்து பகுதிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    வேலூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 48 அரசு தொடக்கப் பள்ளிகளில் 3,469 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளி குழந்தைகளுக்கு உணவு சமைப்பதற்காக காட்பாடி காந்தி நகர் சத்துவாச்சாரி கஸ்பா ஆகிய இடங்களில் ஸ்மார்ட் சமையலறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    தற்காலிக இடங்களில் தற்போது உணவு சமைத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு எப்படி உணவு கொண்டு செல்வது என்பது குறித்து வாகனங்கள் இயக்கி இன்று பரிசோதிக்கப்பட்டது.

    உணவு தயாரிப்பு மையங்களில் இருந்து வாகனங்கள் எந்த வழியாக சென்று பள்ளிகளுக்கு உணவுகளை சப்ளை செய்ய வேண்டும் என சோதனை முறையில் செய்து காட்டினர்.

    நாளை பள்ளி குழந்தைகளுக்கு சோதனை முறையில் உணவு வழங்கப்படுகிறது.

    ×