என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attempt to snatch the cell phone"

    • 3 பேர் பைக்கில் வந்து துணிகரம்
    • பைக் நிலைத்தடுமாறி தாய் மகன் கீழே விழுந்தனர்

    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த தாய் மகன் இருவரும் பைக்கில் செதுவாலை சென்றனர். பின்னர் அங்கிருந்து நேற்று வீடு திரும்பினார்.

    பைக்கின் பின்னால் தாயார் அமர்ந்திருந்தார். வேலூர் கருகம்பத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது அந்த பெண் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அவர்களை ஒரே பைக்கில் வந்த வாலிபர்கள் பின் தொடர்ந்து சென்றனர். தாய் மகன் இருவரும் கருகம்பத்தூர் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களின் அருகே வாலிபர்கள் சென்று அதில் ஒருவன் திடீரென அந்த பெண்ணின் செல்போனை பறிக்க முயன்றார்.

    உடனே சுதாரித்துக் கொண்ட அவர் செல்போனை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். எனினும் அந்த வாலிபர் இழுத்ததில் பைக் நிலைத்தடுமாறி தாய் மகன் இருவரும் கீழே விழுந்தனர்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வருவதைக் கண்ட வாலிபர்கள் 3 பேரும் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    பின்னர் இருவரையும் மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டப்பகலில் பைக்கில் சென்ற பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×