என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் பறிக்க முயற்சி"

    • மகாதேவி போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை சவுரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லய்யா. இவரது மகள் மகாதேவி (வயது 21). இவர் போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் போத்தனூர் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் திடீரென மகாதேவி அருகில் வந்து அவரது கையில் இருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்தார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் செல்போனை இருக்க பிடித்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர் மகாதேவியை கீழே தள்ளிவிட்டு தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டி செல்போனை கேட்டார்.

    பயந்து போன அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் இதுகுறித்து மகாதேவி போத்தனூர் போலீசில் புகார்அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரக்களை ஆய்வு செய்து செல்போன் பறிக்க முயற்சி செய்த அந்த வாலிபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 3 பேர் பைக்கில் வந்து துணிகரம்
    • பைக் நிலைத்தடுமாறி தாய் மகன் கீழே விழுந்தனர்

    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த தாய் மகன் இருவரும் பைக்கில் செதுவாலை சென்றனர். பின்னர் அங்கிருந்து நேற்று வீடு திரும்பினார்.

    பைக்கின் பின்னால் தாயார் அமர்ந்திருந்தார். வேலூர் கருகம்பத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது அந்த பெண் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அவர்களை ஒரே பைக்கில் வந்த வாலிபர்கள் பின் தொடர்ந்து சென்றனர். தாய் மகன் இருவரும் கருகம்பத்தூர் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களின் அருகே வாலிபர்கள் சென்று அதில் ஒருவன் திடீரென அந்த பெண்ணின் செல்போனை பறிக்க முயன்றார்.

    உடனே சுதாரித்துக் கொண்ட அவர் செல்போனை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். எனினும் அந்த வாலிபர் இழுத்ததில் பைக் நிலைத்தடுமாறி தாய் மகன் இருவரும் கீழே விழுந்தனர்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வருவதைக் கண்ட வாலிபர்கள் 3 பேரும் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    பின்னர் இருவரையும் மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டப்பகலில் பைக்கில் சென்ற பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 வாலிபர்கள் கைது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப் - இன்ஸ் பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம் பள்ளி பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப் போது நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும் படியாகச் சுற்றித்திரிந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் , முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியதால், போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் . இருவரும் , வாணியம்பாடி அருகில் உள்ள ஜாப்ராபாத் பகுதியைச் சேர்ந்த இம்ரான் மகன் முகமது பைசான் (வயது 22), முஸ்லிம்பூர் பகுதியைச் சேர்ந்த சையத்ரகுமான் மகன் நிஜாஸ் சாஹிப் ( 19 ) எனத் தெரிய வந்தது.

    கடந்த 26 - ந்தேதி கொத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்பழக னின் மனைவி பவித்ரா தன்னுடைய தந்தையான ராமமூர்த் தியோடு மோட்டார்சைக்கிளில் வெலக்கல்நத்தம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பர்கூரை நோக்கி சென்று கொண் டிருந்தார் . அப்போது அந்த வழியாக வந்த முகமது பைசானும், நிஜாஸ்சாஹிப்பும் மோட்டார்சைக்கிளில் சென்று பவித்ரா வின் செல்போன், கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றதாகக் கூறினர்.

    இதையடுத்து முகமது பைசான், நிஜாஸ்சாஹிப் ஆகி யோரை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×