என் மலர்
வேலூர்
- சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஆந்திர மாநிலம், குப்பம் ஆர்.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரது மகன் நிதின் (வயது 30). இவர் நேற்று வீட்டில் இருந்து கோவிலுக்கு செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு இவருக்கு சொந்தமான காரில் வேலூர் நோக்கி சென்றார்.
பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா ஓட்டல் எதிரே வந்த போது கார் பழுதடைந்துள்ளது. இதனால் அவர் காரை ஓட்டல் அருகில் நிறுத்திவிட்டு மெக்கானிக்கை அழைப்பதற்காக எதிரே உள்ள சாலையை கடக்க முயன்றார்.
அப்போது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் நிதின் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த நிதின் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிதின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
- சிறப்பு பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு
- உபரி நீரை மலர் தூவி வரவேற்றனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக ஏரி மற்றும் குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருவது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
அதன்படி பள்ளிகொண்டா அருகே உள்ள இறைவன்காடு மற்றும் கந்தனேரி ஆகிய 2 ஏரிகள் முழுவதுமாக நிரம்பி இன்று காலை கோடிப்போனது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் ஏரி நிரம்பி வழியும் இடத்தில் ஒன்றுகூடி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். மேலும் மதகின் வழியே வெளியேறும் உபரி நீரை மலர் தூவி வரவேற்றனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் கலந்து கொண்டு, மலர் தூவி வரவேற்றார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, தி.மு.க ஒன்றிய செயலா ளர்கள் குமாரபாண்டியன், வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது
- அறுசுவை உணவு பரிமாறப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், சாத்துமதுரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவிலில் முருகர் திருக்கல்யாணம் நடந்தது.
இதற்கு கிராம கனாச்சாரி சிவலிங்கம், கிராம நாட்டான்மைதாரர் துளசிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமிராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் முருகனடிமை ஜம்பு என்கிற சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இதில்முருகருக்கு பட்டு வேட்டி ஆடை, அம்பாளுக்கு பட்டுப்புடவை மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தேவசேனா, வள்ளி- முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மொய் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பணம் மற்றும் நகைகளை மொய் எழுதினர். இதைத் தொடர்ந்து அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
- திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடரும் குளறுபடி
- கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
காட்பாடியை அடுத்த சேர்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டின் கீழ் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 74 கலை, அறிவியல் உறுப்பு கல்லூரிகள் உள்ளன.
நவம்பர் முதல் வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வரும் பல்கலைக்கழகப் பருவத் தேர்வின் போது முதுநிலை கணிதவியல் துறைக்கான 3-ம் ஆண்டு பருவத் தேர்வில் சிக்கலான பகுப்பாய்வு, கட்டமைப்பியல், வேறு பட்ட வடிவவியல் ஆகிய பாடங்களுக்கு 2021-ம் ஆண்டு வெளியான வினாத்தாள்கள் அப்படியே 2023 என ஆண்டை மட்டும் மாற்றி மறுபதிப்பு செய்து அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து பல்கலைக் கழக நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் ஒரு வினாத்தாள் குளறுபடி சம்பவம் வெளியாகி உள்ளது.
அதன்படி, தற்போது நடை பெற்று வரும் பருவத் தேர்வில் முதுநிலை கணிதவியல் 2-ம் ஆண்டில் ரியல் அனலைசிஸ் பாடத்தில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறு தேர்வில் அளிக்கப்பட்ட வினாத்தாள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பருவத் தேர்வின்போது அளிக்கப்பட்ட வினாத்தாளை அப்படியே மாதத்தை மட்டும் மாற்றி அச்சிட்டு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பல்கலைக்கழகம், அதன் கட்டுப்பாட்டிலுள்ள உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து வினாத்தாள் குளறுபடி விவகாரம் வெளியாகி வருவதை யடுத்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வு நடைமுறைகள், அவற்றில் காணப்படும் நிர்வாக முறைகேடுகள் குறித்து அரசு விரிவான விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
- எதிர்பாராத விதமாக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூதாட்டி தவறி விழுந்தார்.
- குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றின் குறுக்கே சந்தப்பேட்டை பகுதியில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நீலாம்மாள் (வயது 65).
இவர் இன்று காலை பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் அருகில் நடந்து சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூதாட்டி தவறி விழுந்தார்.
இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் மூதாட்டியை மீட்க முயன்றனர். முடியாததால் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மூதாட்டியை பிணமாக மீட்டனர்.
இதனையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பெரிய வஞ்சரம் மீன் ரூ.1000 விற்பனை செய்யப்பட்டது
- மீன்களின் விலையும் கனிசமாக குறைந்துள்ளன
வேலூர்:
கார்த்திகை மாதம் பிறந்ததால் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர்.
மேலும் நேற்று கந்த சஷ்டி விழா முடிந்து இன்று சாமிக்கு திருக்கல்யாணம் நடப்பதால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்தனர்.
இதனால் ஞாயிற்றுக்கிழமை எப்போதும் அதிக அளவில் கூட்டம் அலைமோதும் வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீன்களின் விலையும் கனிசமாக குறைந்துள்ளன.
பெரிய வஞ்சரம் மீன் ரூ.1000, சிறிய வஞ்சரம் மீன் ரூ.500, இறால் ரூ.350 முதல் ரூ.450, கட்லா ரூ.160, நண்டு ரூ.350 முதல் ரூ.450, மத்தி ரூ.140 முதல் ரூ.160, ஷீலா ரூ.350 என மீன் இன்று விற்பனை செய்யப்பட்டது.
- உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பரிதாபம்
- பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி அடுத்த சேவூரை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 75). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகள் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில்.இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதியடைந்தார். தற்போது அதிக அளவில் பனிப்பொழிவு இருப்பதால் கதிர்வேலுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தி அடைந்த கதிர்வேல் நேற்று இரவு வீட்டிலிருந்த மண் எண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
உடல் முழுவதும் தீ பரவியது. இதனால் கதிர்வேல் வலியால் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதிர்வேல் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
அதற்குள் கதிர்வேல் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதிர்வேல் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கதிர்வேல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தீக்குளித்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விளையாடி கொண்டிருந்தபோது விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்;
காட்பாடி அடுத்த திருவலம், ஆரிமுத்து மேட்டூர், நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகள் ரேச்சல் (வயது 2½). நேற்று மாலை ரேச்சிலின் தாய் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.
சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிகொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே வாளியில் இருந்த தண்ணீரில் சிறுமி விளையாடினார்.
அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி தவறி வாளியில் உள்ள தண்ணீரில் விழுந்தார். இதில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக ரேச்சல் இறந்தார்.
நீண்ட நேரத்திற்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியின் தாய் குழந்தை வாளியில் உள்ள தண்ணீரில் மூழ்கிக் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தையை மீட்டு பார்த்தபோது மகள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. மகளின் உடலை பார்த்து தாய் கதறி துடித்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வேலூர் கோட்டை அகழியில் பிணம் வீச்சு
- ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த போது சிக்கினார்
வேலூர்:
வேலூர் கோட்டை அகழியில் கடந்த செப்டம்பர் மாதம் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடு க்கப்பட்டது. இந்த வழக்கில் துப்புதுலக்கிய தனிப்படை போலீசார் கொலை செய்யப்பட்டவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா பெத்தசா ரிபல்லியை சேர்ந்த சிரஞ்சீவி (வயது 35) என்பது தெரிய வந்தது. இவர் பழைய குற்றவாளியாகவும். போலீஸ் இன்பார்மராக வும் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சிரஞ்சீவி ரேணிகுண்டா போலீஸ் சரகத்தில் நடந்த செல்போன் திருட்டு வழக்கில், சிறையில் அறிமுகமான தனது நண்பர்களான சென்னை வியாசர் பாடியை சேர்ந்த அஜீத்,மாரிமுத்துவை போலீசில் காட்டிக்கொடுத்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் அவர்கள் 2 பேரும் தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து சிரஞ்சீவியை தந்திரமாக அவனது காதலியான ஜெயஸ்ரீ மூலம் அழைத்து வந்து வேலூர் கோட்டை அகழியில் கொலை செய்து வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் பரத்(எ)பரதன். அப்பு, ஜெயஸ்ரீ ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மாரிமுத்துவும் அவரது கூட்டாளி பத்ரியும் ஏற்கனவே வேறு வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் உள்ளனர்.
இந்த கொலை வழக் கில் தொடர் புடைய மிட் டாய் (எ) அஜீத், விக்கி மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை தேடி வந்த நிலையில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் சுற்றி வந்த 17 வயது சிறுவன் கடந்த 11-ந் தேதி தேதி கைது செய்யப்பட்டான்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப் பட்டு வந்த முக்கிய குற்ற வாளியான வேலூரை சேர்ந்த மிட்டாய் (எ) அஜீத் (24) என்பவனை காட்பாடி ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த போது வடக்கு போலீசார் கைது செய்தனர்.
- தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த ரஜாபுரம் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (வயது 35) இவர் வழக்கம்போல் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டினுள் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஒடுகத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பது இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டில் புகுந்த 6 அடி நீளமுடைய சாரைபாம்பை லாவகமாக பிடித்தனர்.
பிடிபட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அருகே உள்ள காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.
- 24 கைதிகள் சென்று இருந்தனர்
- நன்னடத்தை அடிப்படையில் பல பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்
வேலூர்:
வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில், தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1.500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் ஆயுள் தண்டனை பெற்று 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள், நன்னடத்தை அடிப்படை யில் ஜெயிலில் பல பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தண்டனை கைதிகள் தீபாவளி பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், பரோல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பரோலில் 24 கைதிகள் சென்று இருந்தனர். பரோல் முடிந்த நிலையில் அவர்கள் அனைவரும் மீண்டும் ஜெயிலுக்கு திரும்பினர்.
- தீ தடுப்பு கருவிகளை பயன்படுத்துவது குறித்து நடந்தது
- செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்
வேலூர்:
பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் துறை சட்ட விதிமுறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் மாணவர் படை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, ஊரீசு பள்ளியில் 8, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தீயணைப்பு நிலைய செயல்பாடுகளை தெரிந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கு நிலைய அலுவலர் பொறுப்பு அரசு விளக்கம் அளித்தார்.
மேலும் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு கருவிகளை எவ்வாறு கையாளும் முறை. தீ விபத்திற்கு எந்த கருவிகளை பயன்படுத்த வேண்டும் என செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். இதில் உடற்கல்வி ஆசிரியர் அமிர்தராஜ், தொரப்பாடி பள்ளி ஆசிரியர் அனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.






