என் மலர்tooltip icon

    வேலூர்

    • பெற்றோர் மிரட்டல் விடுப்பதாக புகார்
    • பாதுகாப்பு கேட்டு சென்றனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தர்மம் பேட்டை திருஞானசம்பந்தர் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 22). பி.எஸ்.சி. பட்டதாரி. பிச்சனூரை சேர்ந்தவர் கணேஷ். இவர் ஆசிரியர் பயிற்சி முடித்து சுயமாக தொழில் செய்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் விவகாரம் தமிழ்செல்வியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் காதல் ஜோடி இருவரும் கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருப்பதிக்கு சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். காதல் ஜோடிக்கு தமிழ்ச்செல்வி பெற்றோர் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் காதல் ஜோடி இருவரும் பாதுகாப்பு கேட்டு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    • சர்க்கரை வியாதியால் அவதியடைந்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஊசூர், ஜி.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 48). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அசோக் குமாருக்கு சர்க்கரை வியாதி இருந்ததால் அவரது வலது காலில் விரல்கள் துண்டிக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்த அசோக் குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.

    கடந்த 16-ந் தேதி அசோக் குமார் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அவரது சகோதரி லலிதா, அசோக் குமாரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அசோக் குமார் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒழுங்காக படிக்குமாறு பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பலவநத்தத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ஜீவரத்தினம் (வயது 14). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். ஜீவரத்தினம் சரிவர படிப்பில் நாட்டம் செலுத்தவில்லை. ஒழுங்காக படிக்குமாறு அவரது பெற்றோர் ஜீவரத்தினத்தை கண்டித்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஜீவரத்தினத்தின் பெற்றோர் வெளியே சென்று விட்டனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஜீவரத்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீண்டும் பெற்றோர் வீட்டிற்கு வந்த பார்த்த போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கே.வி. குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவரத்தினம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் கோவில் உள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று கார்த்திகை பிரதோஷ வழிபாடு நடந்தது.

    இதில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கின்றன
    • நாளை கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட உள்ளது

    வேலூர்:

    கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றியவுடன் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் வீடுகள் தூரம் ஒரே நேரத்தில் தீப விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மகாதீபம் பிரகாசிக்கும் 11 நாட்களும் பொதுமக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அனைத்து இல்லங்களிலும் தீபங்கள் ஒளிரும். இதனையொட்டி திருவண்ணாமலை வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கார்த்திகை தீப விளக்குகள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர்.

    மண்பானைகள், கலைநயமிக்க கைவினைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் களிமண்ணில் வடிவமை க்கப்பட்ட அகல்விளக்குகள் குவிந்திருக்கின்றன. சாலை ஓரங்களிலும் அகல்விளக்கு கடைகள் அமைக்க ப்பட்டுள்ளன.

    விளக்குகள் 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கி ன்றன. மண் குத்துவிளக்கு, தட்டு விளக்கு, சரவிளக்கு, 5 முக விநாயகர் விளக்கு, தேங்காய் வடிவ விளக்கு என்று ஒவ்வொரு விளக்கி ற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

    தற்போது மெழுகு விளக்குகள், கலர் களிமண் விளக்குகள், ரெடிமேட் நெய் விளக்குகள், பீங்கான் விளக்குகள் என பல்வேறு மாடல்களில் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    நாளை கார்த்திகை தீப திருவிழா கொண்டா டப்படுவதால் கார்த்திகை தீப விளக்குகளை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    மேலும் கார்த்திகை தீப திருவிழாவிற்கு புட்டு, கொழுக்கட்டை போன்றவை செய்ய தேவையான பொருட்களும் விற்பனை அதிகரித்து உள்ளது.

    • ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ.25 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது
    • வியாபாரம் களை கட்டியது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடக்கிறது. இங்கு வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    அதன்படி இன்று வழக்கம்போல் ஒடுகத்தூர் ஆட்டு சந்தை கூடியது. விடியற்காலை 5 மணி முதலே ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பல்வேறு வாகனங்களில் தங்களது ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு குவிந்ததால், சற்று நெரிசல் ஏற்பட்டது.

    வியாபாரிகளும் போட்டி, போட்டு கொண்டு ஆடுகளை விற்க தொடங்கினர். ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ.25 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. காலை 11 மணி நிலவரப்படி ரூ.17 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சேண்பாக்கம் ரெயில்வே பாலம் அருகே விபத்து
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று காலை அரசு கழக பஸ் ஒன்று குடியாத்தம் நோக்கி சென்றது.

    வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் முன்பாக சர்வீஸ் சாலையில் பஸ் திரும்பியது.

    அப்போது சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. அப்போது பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பெண் பயணிகள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்கள் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டனர். வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பஸ் இடுபாடுகளை சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த லாரி மற்றும் பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நிலை தடுமாறி அருகில் உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்தது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு வேலூர் ஆவின் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

    அதன் படி இன்று காலை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ஆயிரம் லிட்டர் பாலை, டேங்கர் லாரி மூலம் கொண்டுவரப்பட்டது.

    தெள்ளூர் கூட்ரோடு சிவராஜ் நகர் அருகே லாரி வந்தபோது திடீரென ஒருவர் பைக்கில் குறிக்கே வந்தார். அவர் மீது லாரி மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

    அப்போது லாரி நிலை தடுமாறி அருகில் உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. அப்போது லாரியில் இருந்த பால் கீழே கொட்டி ஆறாக ஓடியது. இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழைக்காலத்தில் பரிதவிக்கும் அவலம்
    • மாற்று இடம் கேட்டு அரசிடம் கோரிக்கை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், வல்லண்டராம் பகுதியில் உள்ள செதுவாலை ஏரியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் 3 தலைமுறையாக இந்த ஏரியில் சிறிய குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர்.

    இவர்கள் அமைத்துள்ள இந்த சிறிய குடிசையில் உள்ளேயே சமையல் செய்வதோடு, அதிலேயே படுத்து உறங்குவது என இவர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் குடியிருக்கும் பகுதி ஏரி என்பதால் மழை பெய்யும் போதெல்லாம் இந்த ஏரி நிரம்பி இவர்கள் கட்டியிருக்கும் குடிசைக்குள் தண்ணீர் புகுந்து முழுமையாக சூழ்ந்து விடுகிறது.

    அப்போது குழந்தைகளுடன் அந்தப் பகுதி மக்கள் பரிதவிக்கின்றனர். அந்த சமயத்தில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து விட்டால், வெளியேறும் வரை அதிலேயே மிகவும் சிரமத்துடன் வாழும் பரிதாப நிலை நீடிக்கிறது.

    மழைக்காலங்களில் நோய் தொற்று காரணமாகவும், விஷ பூச்சி கடித்து குழந்தை உயிரிழந்தது என அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

    விறகு வெட்டியும், சாலைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, அதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு இவர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

    3 தலைமுறையாக ஏரியில் வசிக்கும் இவர்கள், மாற்று இடம் கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இவர்கள் வாழ்வதற்கு ஏற்றது போல் மாற்று இடம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • வேலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
    • போலி நகையை அடகு வைத்து கடன் பெற்ற வழக்கு

    வேலூர்:

    வேலூர் அண்ணாசாலையில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 2008- ஆண்டு காலக்கட்டத்தில் உதவி மேலாளர்களாக தர்மராஜ் (வயது 69), கிறிஸ்டோபர் (60) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

    இந்த வங்கியில் வேலூர் வேலப்பாடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (60) என்பவர் வங்கி கணக்கு வைத்திருந்தார். அவர் வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.11 லட்சத்து 81 ஆயிரம் கடன் பெற்றார்.

    இதையடுத்து வங்கி சார்பில் ஆய்வு செய்யப்பட்டதில் அவர் வைத்த நகைகள் போலியானது என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலி நகைகளை வைத்து கடன்பெற்றதாக சீனிவாசன் மீது வேலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    விசாரணையில் சீனிவாசனுக்கு உடந்தையாக உதவி மேலாளர்களான தர்மராஜ், கிறிஸ்டோபர் ஆகியோர் செயல்பட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு வேலூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது. இந்தநிலையில் மாஜிஸ்திரேட்டு திருமால் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் இந்திரா மிசையல் ஆஜராகி வாதாடினார்.

    இந்த வழக்கில் சீனிவாசனுக்கு ஒரு குற்றப்பிரிவுக்கு தலா 2 ஆண்டு வீதம் 5 பிரிவுகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு பிரி வுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வீதம் 5 பிரிவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், அவருக்கு உடந்தையாக இருந்த வங்கி உதவி மேலாளர்கள் இருவருக்கும் ஒரு பிரிவுக்கு தலா 2 ஆண்டு வீதம் 7 பிரிவுகளுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்ட னையும், ஒரு பிரிவுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 7 பிரிவுக்கு ரூ.70 ஆயிரம் அபராதமும் விதிக் கப்பட்டது. இந்த தண்ட னையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

    • பராமரிப்பு பணி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
    • செயற்பொறியாளர்கள் தகவல்

    வேலூர்:

    வேலூர் மின்பகிர்மான வட்டம் சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்புநகர், ஸ்ரீராம்நகர், டபுள்ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை, சி.எம். சி.காலனி, எல்.ஐ.சி.காலனி, காகிதப்பட்டறை, இ.பி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்ப டுகிறது.

    அதேபோல வடுகந்தாங்கல் பகுதியிலும் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணி கள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பி.கே.புரம், கே.வி.குப்பம், செஞ்சி, லத்தேரி, திருமணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இந்த தகவலை செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய அற்புதராஜ், பரிமளா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • உதவி கலெக்டர் விசாரணை
    • வீட்டிற்கு சென்று வட்டி, கடன் தொகையை கேட்டு அடிக்கடி தொந்தரவு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பிச்சனூர் காளியம்மன்பட்டி சாமியார் மலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 28), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோனிஷா (23). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    தினேஷ்குமார், மோனிஷா ஆகிய இருவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளனர். அந்த பெண் கந்து வட்டி வசூலித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ரூ.15 ஆயிரத்திற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ரூ.1,500 வட்டியாக செலுத்தி வந்துள்ளனர். கூலி வேலை செய்து வருவதால் தினேஷ்குமாரால் வட்டி கட்ட முடியாமல் மீண்டும் கடன் வாங்கி உள்ளார்.

    இந்த நிலையில் கந்துவட்டிக்கு கடன் கொடுத்த அந்த பெண் அடிக்கடி தினேஷ்கு மார் வீட்டிற்கு சென்று வட்டி மற்றும் கடன் தொகையை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததுடன், தெருவில் நின்று ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த மோனிஷா வீட்டில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட தினேஷ்குமார் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் மோனிஷாவின் தற்கொலை குறித்து குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார்.

    அப்போது கந்துவட்டி கேட்டு ஆபாசமாக பேசியதால் தற்கொலை செய்து கொண்ட தாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் உறுதியளித்தார்.

    ×