என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி மீது பஸ் மோதி விபத்து"

    • சேண்பாக்கம் ரெயில்வே பாலம் அருகே விபத்து
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று காலை அரசு கழக பஸ் ஒன்று குடியாத்தம் நோக்கி சென்றது.

    வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் முன்பாக சர்வீஸ் சாலையில் பஸ் திரும்பியது.

    அப்போது சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. அப்போது பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பெண் பயணிகள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்கள் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டனர். வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பஸ் இடுபாடுகளை சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த லாரி மற்றும் பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×