என் மலர்
நீங்கள் தேடியது "Selling more goats in the market"
- ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ.25 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது
- வியாபாரம் களை கட்டியது
அணைக்கட்டு:
ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடக்கிறது. இங்கு வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
அதன்படி இன்று வழக்கம்போல் ஒடுகத்தூர் ஆட்டு சந்தை கூடியது. விடியற்காலை 5 மணி முதலே ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பல்வேறு வாகனங்களில் தங்களது ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு குவிந்ததால், சற்று நெரிசல் ஏற்பட்டது.
வியாபாரிகளும் போட்டி, போட்டு கொண்டு ஆடுகளை விற்க தொடங்கினர். ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ.25 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. காலை 11 மணி நிலவரப்படி ரூ.17 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






