என் மலர்
நீங்கள் தேடியது "போலி நகையை அடகு வைத்து கடன்"
- வேலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
- போலி நகையை அடகு வைத்து கடன் பெற்ற வழக்கு
வேலூர்:
வேலூர் அண்ணாசாலையில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 2008- ஆண்டு காலக்கட்டத்தில் உதவி மேலாளர்களாக தர்மராஜ் (வயது 69), கிறிஸ்டோபர் (60) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இந்த வங்கியில் வேலூர் வேலப்பாடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (60) என்பவர் வங்கி கணக்கு வைத்திருந்தார். அவர் வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.11 லட்சத்து 81 ஆயிரம் கடன் பெற்றார்.
இதையடுத்து வங்கி சார்பில் ஆய்வு செய்யப்பட்டதில் அவர் வைத்த நகைகள் போலியானது என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலி நகைகளை வைத்து கடன்பெற்றதாக சீனிவாசன் மீது வேலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
விசாரணையில் சீனிவாசனுக்கு உடந்தையாக உதவி மேலாளர்களான தர்மராஜ், கிறிஸ்டோபர் ஆகியோர் செயல்பட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு வேலூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது. இந்தநிலையில் மாஜிஸ்திரேட்டு திருமால் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் இந்திரா மிசையல் ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கில் சீனிவாசனுக்கு ஒரு குற்றப்பிரிவுக்கு தலா 2 ஆண்டு வீதம் 5 பிரிவுகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு பிரி வுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வீதம் 5 பிரிவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், அவருக்கு உடந்தையாக இருந்த வங்கி உதவி மேலாளர்கள் இருவருக்கும் ஒரு பிரிவுக்கு தலா 2 ஆண்டு வீதம் 7 பிரிவுகளுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்ட னையும், ஒரு பிரிவுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 7 பிரிவுக்கு ரூ.70 ஆயிரம் அபராதமும் விதிக் கப்பட்டது. இந்த தண்ட னையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.






