என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
- பெற்றோர் மிரட்டல் விடுப்பதாக புகார்
- பாதுகாப்பு கேட்டு சென்றனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தர்மம் பேட்டை திருஞானசம்பந்தர் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 22). பி.எஸ்.சி. பட்டதாரி. பிச்சனூரை சேர்ந்தவர் கணேஷ். இவர் ஆசிரியர் பயிற்சி முடித்து சுயமாக தொழில் செய்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் விவகாரம் தமிழ்செல்வியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் காதல் ஜோடி இருவரும் கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருப்பதிக்கு சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். காதல் ஜோடிக்கு தமிழ்ச்செல்வி பெற்றோர் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் காதல் ஜோடி இருவரும் பாதுகாப்பு கேட்டு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
Next Story






