என் மலர்
நீங்கள் தேடியது "Home search service"
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் இல்லம் தேடி சேவை திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, சப்- கலெக்டர் கவிதா, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ், தாசில்தார் வேண்டா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீராபென்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி வரவேற்றார்.
இதில் பள்ளிகொண்டா பேரூராட்சி, 18 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர்.
இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குமாரபாண்டியன், வெங்கடேசன், நகர செயலாளர் ஜாகிர் உசேன், பேரூராட்சி துணைத் தலைவர் வசிம்அக்ரம் , பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






