என் மலர்tooltip icon

    வேலூர்

    • குறைந்த மதிப்பெண் பெற்றதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த பாகாயம் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் விமல் ராஜ். இவரது மகள் நித்தியா (வயது 18). இவர் இடையன் சாத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவில் நித்தியா குறைந்த மதிப்பெண் பெற்று உள்ளார். இதனால் விரக்தி அடைந்த நித்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நித்தியா தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்ட அவரது பெற்றோர் கதறி துடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தீயணைப்பு துறை வீரர்கள் போராடி பாம்பை பிடித்தனர்
    • வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர். இவரது வீட்டில் 4-அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்து விட்டது.

    இதை கண்ட பாபு அவரது குடும்பத்தினரும் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டனர்.

    பேரணாம்பட்டு தீயணைப்பு நிலைய இயக்குனர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் உடனடியாக தீயணைப்பு துறை வீரர்கள் பாபுவின் வீட்டிலிருந்த சாரை பாம்பை பிடித்து பேரணம்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • வீடுகளின் கூரைகள் பறந்தன, மாட்டு கொட்டகைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டது
    • மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா ஊராட்சியில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    இந்த சூறைக்காற்றால் போடியப்பனூர், ராகிமானப்பல்லி ஆகிய கிராமங்களில் ஏராளமான மின்கம்பங்கள் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    வீடுகளின் கூரைகள் பறந்தன, மாட்டு கொட்டகைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

    சூறைக்காற்றால் சேதம் ஏற்பட்ட பகுதிகளை குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது பாதிக்கபட்ட விவசாயிகளிடம் சேதம் குறித்து கேட்ட றிந்தனர். பாதிக்கப்பட்டவர்க ளிடம் உடனடியாக சேதம் மதிப்பீட்டு கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வருவாய்த்துறை, வேளாண்மை துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர்.

    இப்பகுதியில் உடனடியாக மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.

    ஆய்வின் போது ஒன்றியக்குழு உறுப்பினர் கோதண்டன், ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • மர்ம கும்பல் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென அசோக்குமார் வாகனத்தை மறித்து அவரை தாக்கினர்.
    • ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் பைக், செல்போன் ஆகியவற்றை பறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் திருவலம் அடுத்த இ.பி. கூட்ரோட்டில் உள்ள அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று பணி முடிந்து கடையில் மது விற்பனை மூலம் வசூலான ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தனது பைக்கில் காட்பாடி நோக்கி சென்றார்.

    அவரை பின்தொடர்ந்து மர்ம கும்பல் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென அசோக்குமார் வாகனத்தை மறித்து அவரை தாக்கினர். இதில் நிலைகுலைந்த அசோக்குமார் அடி தாங்காமல் கீழே விழுந்தார்.

    அவரிடம் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் பைக், செல்போன் ஆகியவற்றை பறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    அசோக் குமார் இது குறித்து டாஸ்மாக் அதிகாரி மற்றும் திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவம் நடந்து இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரித்தனர்.

    மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவலம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    • யாக சாலை பூஜைகள் ஜூன் 21-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளன
    • விழா நடத்துவதற்கு 13 துணைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

    வேலூர்:

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. கோபுர கலசங்கள், கொடி மரங்களுக்கு தங்க முலாம் பூசுதல், வெள்ளிக் கவசங்களை மெருகேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    வேலூர் கோட்டை ஸ்ரீஅகிலாண்ேடஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு கடந்த 1982, 1997, 2011 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் மீண்டும் வரும் ஜூன் 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி கடந்த மாதம் கோவில் கலசங்கள், கொடிமரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டன. தொடர்ந்து வரும் ஜூன் 7-ந்தேதி பஞ்சமூர்த்திகளுக்கு பாலாலயம் செய்யப்பட உள்ளது. பின்னர் யாக சாலை பூஜைகள் ஜூன் 21-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளன.

    இதைத் தொடர்ந்து ஜூன் 25-ந்தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவையொட்டி கோட்டை ஜலகண்டேஸ்வரர்கோவில் ராஜகோபுரத்தில் உள்ள அனைத்து கலசங்கள், சாமி, அம்மன் சந்நிதிகளில் உள்ள கொடிமரங்கள் ஆகியவற்றுக்கு தங்க முலாம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதனிடையே சாமிகளுக்கு அலங்காரம் செய்வதற்கான வெள்ளிக் கவசங்கள் மெருகேற்றி புதுப்பிக்கும் பணியும் நடைெபற்று வருகிறது.

    கோவில் வளாகத்திலேயே அதற்கான வடிவமைப்பாளர்கள் மூலம் இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு 13 துணைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த குழுவினர் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமான 2 ஆண்டில் பரிதாபம்
    • தாய் இல்லாமல் குழந்தை கதறல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ெரயில் நிலையம் அருகே உள்ள பரசுராமன்பட்டி வைஷ்ணவி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் மருத்துவ பிரதிநிதியாக உள்ளார்.

    இவரது மனைவி இளவரசி (வயது 24). 2 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இன்று அதிகாலையில் வீட்டில் இளவரசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து சென்ற டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் - இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் இளவரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தற்கொலை சம்பவம் குறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் ஆகி 2 ஆண்டுகள் மட்டும் ஆவதால் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தி வருகிறார்.

    காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது.

    அவரது ஆண் குழந்தை தாயைக் காணாது அழுதபடி இருப்பது காண்போரின் மனதை கலங்கச் செய்தது.

    • மின்கம்பங்கள் சாய்ந்ததால் 4 கிராமங்கள் இருளில் மூழ்கியது
    • வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் மழை பெய்தது சில இடங்களில் சுமாரான மழையும் சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது.

    குடியாத்தம் அடுத்த மோர்தானா, ஜங்காலப்பல்லி, ராகிமானல்லி, போடியப்பனூர் ஆகிய கிராமங்களில் நேற்று மதியம் மழை பெய்தது.

    போடியப்பனூர் ராகிமானபல்லி ஆகிய கிராமப் பகுதிகள் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சூறைக்காற்று வீசியதால் ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்தன, பல ஆண்டுகள் வயது முதிர்ந்த ஏராளமான மரங்களும் சாய்ந்தன, ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன.

    ஓடுகள் காற்றில் பறந்தன, ஏராளமான மாட்டு கொட்டைகளும், குடிசைகளும் கூரைகள் காற்றில் பறந்தன சுமார் அரைமணி நேரம் சூறைக்காற்று ராகிமானப்பள்ளி மற்றும் போடியப்பனூர் பகுதியில் ருத்ர தாண்டவம் ஆடியது.

    சேதம் ஏற்பட்ட பகுதிகளில் மோர்தானா ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் இந்த சூறைக்காற்று வீசியதாலும் மழை பெய்தாலும் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மோர்தானா ஊராட்சிக்குட்பட்ட மோர்தானா, ஜங்காலப்பல்லி, ராகிமானல்லி, போடியப்பனூர் ஆகிய கிராமங்களில் பல மின்கம்பங்கள் சாய்ந்தன.

    பல இடங்களில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்தும் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால் சீர் செய்ய சில நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. இதனால் 4 கிராமங்களும் இருளில் மூழ்கியது.

    மேலும் இப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் தொடர்புக்காக செல்போன் டவர்கள் இல்லாததாலும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது.

    மின்சாரம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு பேரில் நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • பெண்வேடமணிந்து தாலிகட்டி நேர்த்திகடன்
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த புலிமேடு கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கூத் கோவில் சிரசு திருவிழா கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    அன்று முதல் மகாபாரத சொற்பொழிவும், இசைக்கவி நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. தொடர்ந்து 14-ம் நாளான நேற்று முன்தினம் இரவு புஷ்பரத தேரில் கிராம் தேவதை உற்சவர் ஊர்வலம் நடந்தது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று காலை கூத்தாண்டவர் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுமார் 200-க்கும் மேற்ப்பட்ட ஆண்கள், பெண்வேடமணிந்து தாலிக்கட்டி கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பிற்பகல் 2 மணிக்கு மணப்பெண் ஊர்வலமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து விழாவில், உடலில் எலுமிச் பழம் கோர்த்துக்கொண்டு ஊர்வலமாக வந்து கொக்கலிக்கட்டை ஆட்டம், மற்றும் பக்தர்கள் பல்வேறு வேடங்களில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இரவு 7 மணிக்கு சிரசு இறக்குதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பெண்வேடம் அணிந்து தாலிகட்டிக்கொண்ட அணைவரும் ஒப்பாரி வைத்து அழுதுக்கொண்டு தாலிகயிற்றினை கட்டினர்.

    இதனையடுத்து 8 நாட்கள் கோவில் நடை அடைக்கப்பட்டு 8 -ம் நாள் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கோவில் திறந்து காரியம் செய்யப்படும். என கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.

    விழாவில் ஒன்றிய கவுன்சிலர் ஈட்டிகுமார், பிச்சாண்டி, முன்னாள்ஊராட்சி தலைவர் அண்ணாமலை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முரளி, முருகன், எழுமிச்சம்பழம் குத்திக்கொண்டு பா.ம.க. நிர்வாகி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் உட்பட புலிமேடு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • 50 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
    • தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணியில் போக்கு வரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

    வேலுார்:

    வேலுார் மாவட்டத்தில் பழமையும் பாரம்பரியமும் கொண்ட பிரசித்திபெற்ற திருவிழாவான, வேலங் காடு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன்கிழமை சிறப்பாக நடக்கும்.

    அதன்படி, இந்த ஆண்டு திருவிழா, வரும் 10-ந் தேதி நடக்கவுள்ளது. இதில் பங் கேற்கும் பக்தர்கள் சிரம மின்றி சென்றுவரும் வகை யில், வேலுார் - வேலங் காடு வழித்தடம் மற்றும் குடியாத்தம் - வேலங்காடு வழித்த டத்தில் தலா 25 வீதம் மொத்தம் 50 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும், பக்தர்கள் எண் ணிக்கை அதிகமாக இருக்கும் நேரங்களில், அதற் கேற்ப கூடுதலாக சிறப்புபஸ்கள் இயக்கவும், மண்டல அரசு போக்கு வரத்து கழகம் தரப்பில் திட்டமிடப் பட்டுள்ளது.

    அதோடு, வேலங்காடு பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது தொடர்பான நடவடிக்கையில், போக்கு வரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனாலும், இதற்கு தேவையான இடத்தை ஒதுக்கீடு செய்வதில், திரு விழா கமிட்டியினர் எந்த முயற்சியும் மேற்கொள்வ தில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இதனால், அந்த பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதில், ஒவ்வொரு ஆண்டும் போக் குவரத்து துறையினர் கடும் சிரமப்படுகின்றனர்.

    அதே நேரம், பக்தர்கள் தேவைக்காக ஏதாவது ஏற்பாடு செய்து, சிறப்பு பஸ்களை இயக்கி ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    • கொரோனா காலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
    • தற்போது உலக சுகாதார மையம் கொரோனா இல்லாத காலமாக அறிவித்துள்ளது. இதற்கு அறிவியலும் காரணம் ஆன்மீகமும் காரணம்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள நாராயணி பீடத்தின் 31-வது ஆண்டு விழா இன்று நடந்தது.

    யாக பூஜையில் சக்தி அம்மா கலந்து கொண்டு பூஜைகள் செய்தார். யாக சாலை பூஜையில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    ஆன்மீகம் தழைக்க வேண்டும் ஆன்மீகம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆன்மீகத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது.

    சமீப காலமாக தமிழுக்கும், ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லை என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. ஆன்மீக வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

    ஆன்மீகத்தோடு கூடிய தமிழ், தமிழுடன் கூடிய ஆன்மீகம் தான் நமது தமிழகத்திற்கு வளர்ச்சியை தரும்.

    ஆன்மீகத்தை தவறாக சனாதன தர்மம் வர்ணாசிரமம் என்று தூய்மையான ஆன்மீகத்திற்கு தவறான கருத்து முன் நிறுத்தப்படுகிறது. ஆன்மீகத்தில் எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது.

    இதிகாசங்களிலும் நமது சரித்திரங்களிலும் அனைவரும் சமம் என்றே கூறுகிறது. மதமும் அப்படித்தான் சொல்கிறது.

    ஆனால் இந்து மதம் ஏற்றத்தாழ்வுகளையும் தீண்டாமையையும் தான் முன்னிறுத்துவதாக கருத்து தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இல்லை.

    தமிழக முதலமைச்சருக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். நாங்கள் யாரையும் பேதமின்றி பார்ப்பதில்லை என்று கூறுகிறீர்கள்.

    ஆனால் ஆன்மீக அன்பர்களாகிய எங்களுக்கு ஏன் தீபாவளி மற்றும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுவதில்லை என்று கேட்டேன். அதற்கு இன்று வரை அவரிடம் இருந்து பதில் வரவில்லை.

    அனைவரும் இணைந்து பணியாற்றுவது நமது தமிழக ஆன்மீக கலாச்சாரம் ஆகும்.

    கொரோனா காலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    தற்போது உலக சுகாதார மையம் கொரோனா இல்லாத காலமாக அறிவித்துள்ளது. இதற்கு அறிவியலும் காரணம் ஆன்மீகமும் காரணம்.

    தடுப்பூசியும் இறைவனின் ஆசியும் சேர்ந்தால்தான் வாழ்வில் நமக்கு நல்ல உடல் நலத்தை தரும். எல்லா பதவிகளுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கவர்னரை தான் தேடித்தேடி சந்தித்து மனு கொடுத்தார்கள்.

    சம்பந்தமில்லாதவர்கள் என்றால் ஏன் அவரை தேடிச் சென்று மனு கொடுக்க வேண்டும்.

    புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நாங்கள் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். எங்களுக்கு தான் அதிகாரம் உள்ளது. நீங்கள் என்ன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா என்று கேட்கிறார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் மக்களுக்கு சேவை செய்பவர்களும் இருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட சேவை செய்யாமல் உள்ளனர்.

    மக்களிடம் உண்டியல் குலுக்கி எனக்கு சிறப்பு விமானம் வாங்கி தருவதாக நாராயணசாமி கூறுகிறார். இதற்கு ஏன் மக்களிடம் கையேந்த வேண்டும். நீங்கள் சேர்த்து வைத்த பணத்திலே எனக்கு வாங்கி கொடுக்கலாம்.

    புதுச்சேரி மக்களும் ஐதராபாத் மக்களும் வசதியாக இருக்க வேண்டும் என்று நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    இது அவருக்கு தெரியாதா. நான் செல்வதாக இருந்தால் சிறப்பு விமானத்தில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, மக்களோடு மக்களாகவே செல்வேன்.

    புதுச்சேரிக்கும் ஐதராபாத்திற்கும் விமான சேவை வந்ததே நாராயணசாமிக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடுவழியில் நின்ற சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 15 நிமிடம் கால தாமதமாக மீண்டும் புறப்பட்டு சென்றது.
    • ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டு வந்தது.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே செல்லும் போது முன்பதிவு செய்யப்பட்ட எஸ் 8 பெட்டியில் இருந்த ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் ரெயில் நடுவழியில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

    தகவல் அறிந்ததும் டிக்கெட் பரிசோதகர் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் அபாய சங்கிலி இழுக்கப்பட்ட பெட்டிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அங்கிருந்தவர்கள் அபாய சங்கிலி பிடித்த இழுத்தது யார் என தெரியாது என கூறினர்.

    மேலும் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் உரிய பதில் கூறவில்லை. நடுவழியில் நின்ற சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 15 நிமிடம் கால தாமதமாக மீண்டும் புப்பட்டு சென்றது.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடும் சோதனைக்கு பிறகு அனுமதி
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு

    வேலூர்:

    இந்திய அளவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ துறையில் சேருவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு (நீட்) இன்று நடந்தது.

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 6,883 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.

    வேலூர் சாய்நாதபுரம் வி.வி.என்.கே.எம். சீனியர் செகன்டரிபள்ளி, டி.கே.எம். மகளிர் கலைக்கல்லூரி, ஸ்ரீபுரம் நாராயணி சீனியர் செகண்டரி பள்ளி, சன்பீம் மெட்ரிக்பள்ளி, சிருஷ்டி மெட்ரிக்பள்ளி, சிருஷ்டி வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி, கிங்ஸ்டன் என்ஜினீயரிங் கல்லூரி, சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி பள்ளி, வாணியம்பாடி மருதர்கேசரி ஜெயின் கல்லூரி, ராணிப்பேட்டை டி.ஏ.வி. பெல்பள்ளி, சோளிங்கர் வித்யாபீடம் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.

    காலை 11 மணி முதல் தேர்வர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.மாணவ-மாணவிகள் முழுபரிசோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் சென்றனர். தேர்வு மையங்களுக்கு சென்று வர வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பஸ்நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் இருந்து காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    செல்போன், புளூடூத், இயர்போன்கள், மைக்ரோபோன்கள், போன்ற எந்தவொரு தகவல் தொடர்பு சாதனமும்.ஆபரணங்கள் கைக்கடிகாரம், வளையல் கேமரா போன்றவை மற்றும் எழுது பொருட்கள் தகவல் எலக்ட்ரானிக் சாதனம், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட், தொப்பி போன்ற பிற பொருட்கள்.

    எந்த உணவுபொருளும் திறக்கப்பட்டது அல்லது பேக் செய்யப்பட்டது போன்றவற்றுக்கு அனுமதி இல்லை. தேர்வு மையத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×