என் மலர்
வேலூர்
- 23 வீடுகள் சுவர் இடிப்பு
- கலெக்டர் உத்தரவு
வேலூர்,
வேலூர் மக்கான் அம்பேத்கர் நகர் பகுதியில் மழைக்காலங்களில் மழை நீர் செல்ல வழி இல்லாத நிலை உள்ளது. இதனால் கழிவு நீரோடு மழை நீர் சேர்ந்து அந்த பகுதியில் தேங்கியது.
அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். இதை யடுத்து மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் சில வீடுகளில் பாதி பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, அம்பேத்கர் நகர் பகுதியில் மெயின் தெருவில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக அந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள ஆக்கிரமப்புகள் அகற்றப்பட்டது.
சுமார் 23 வீடுகளின் ஆக்கிரமிப்பு அகற்றி உள்ளோம். விரைவில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படும் என்றனர்.
- சுழற்சி முறையில் பணி
- காவலர்களுக்கு செய்முறை விளக்கம்
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்து மற்றும் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் உத்தரவின் பேரில் 5 நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணிப்புரியும் போலீஸ் எண்ணிக்கையை 30 ஆக அதிகப்படுத்தி மும்முறை சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு விபத்து நேரத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக எவ்வாறு முதலுதவி வழங்க பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் விபத்துக்குள்ளாகும் வாகனங்களில் திடீர் தீ விபத்து ஏற்படும் சமயங்களில் தீயினை எவ்வாறு அணைப்பது மற்றும் தீக்காயம் அடைந்தவர்களை எப்படி பாதுகாப்பாக கையாள்வது என்பதை பற்றிய வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பான்களை வைத்து துரிதமாக தீயினை எப்படி அணைப்பது என்பதை பற்றிய பயிற்சி எடுக்கப்பட்டது. மேலும் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் குற்றங்களை தடுப்பதை குறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி)மருத்துவர் பிரசன்ன குமார் விரிவான செய்முறைகளை செய்து காண்பித்தார்.
வேலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தீயணைப்பு வீரர்கள் மூலம் நெடுஞ்சாலை ரோந்துப்பணி காவலர்களுக்கு செய்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சியும் அளிக்கப்பட்டது.
ரோந்து பிரிவினரின் முக்கியத்துவம் குறித்தும், பொதுமக்களின் உயிரையும் உடைமையும் காப்பது குறித்த விரிவான அறிவுரைகளை வழங்கினர்.
காயமடைந்தவர்களை முதலுதவி செய்து மீட்பதற்கான போன்ற உபகரணங்களை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் வழங்கினார்.
- 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்
- அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
வேலூர்,
வேலூர் தொரப்பாடி ஜெயில் அருகே ராம் சேட் நகர் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
ராம் சேட் நகர் நுழைவு வாயில் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இங்கு கால்நடை ஆஸ்பத்திரி கட்டுவதால் ஏராளமான கால்நடைகள் இங்கு கட்டுவார்கள் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தியாகும்.
இதனால் இப்பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டக்கூடாது. புறநகர் பகுதியில் வேறு எங்காவது கட்ட வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை ஆஸ்பத்திரி கட்ட அதிகாரிகள் நில அளவீடு செய்ய சென்றனர். ஆஸ்பத்தி 2-வது நாளாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
செய்வது அறியாது தவித்த பொதுமக்கள் சிறிது நேரத்திற்கு பின்னர் அவர்களாகவே கலைந்து சென்றனர்.
- பணம் பறிக்க முயற்சி
- சைபர் கிரைம் போலீசில் புகார்
குடியாத்தம்,
குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டு ள்ளது.
அதன் மூலம் நட்பு வட்டாரத்தில் உள்ள நபர்களுக்கு நகரமன்ற தலைவர் சவுந்தர்ராஜன் கேட்பது போல் பணம் தேவை என தகவல் அனுப்பி உள்ளனர்.
உடனடியாக இந்த மோசடி சம்பவம் குறித்து சவுந்தர்ராஜன் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தியிடம் புகார் அளித்தார். வேலூரில் உள்ள சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்க உள்ளார்.
மோசடி நபர்கள் குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து முக்கிய நபர்களின் பெயர்களில் முகநூல் பக்கங்களை தொடங்கி பணம் கேட்டு மோசடிகளையும் அரங்கேற்றி வருவது தெரியவந்தது.
இந்த போலியான பேஸ்புக் மோசடிகள் குறித்து போலீசார் கூறியதாவது
குடியாத்தம் பகுதி பொதுமக்கள் இதுபோல் மோசடியான பேஸ்புக்கில் வரும் பணம் சம்பந்தமான பதிவுகளுக்கு சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு உறுதி செய்த பின்னர் பணத்தை அனுப்புமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். அவசர உதவி எண் 1930 என் உள்ளது இந்த எண்ணை தொடர்பு கொண்டு இணையவழி குற்றத்தடுப்பு குறித்து ஆலோசனை கேட்டுப் பெறலாம் மேலும் இதுபோல் ஏமாற்றப்பட்டவர்கள் உடனடியாக இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுத்து மீட்டுத்தர உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளன
- 17 மின்கம்பங்கள் சேதம்
- நடவடிக்கை எடுக்க உதவி கலெக்டர், எம்.எல்.ஏ. உறுதி
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா ஊராட்சியில் சில தினங்களுக்கு முன்பு சூறைக்காற்று வீசியது.
இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் நாசமாயின. வீடுகள், மாட்டு கொட்டகைகள், மரங்கள், 17 மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் பல பகுதிகள் மின்தடை ஏற்பட்டது.
சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், அமலுவிஜயன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் உடனடியாக நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், சேதம் அடைந்த வாழை மரங்களுக்கு உரிய கணக்கெடுக்கு நடந்த பின் அதற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.
அனைத்து பகுதிகளிலும் விரைவாக மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.
ஆய்வின் போது தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம் கார்த்திகேயன்,
ஆர். திருமலை, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- வேலூர் பழைய மீன் மார்க்கெட்டில் தகராறு
- போலீஸ் நிலையத்துக்குள் ஓடி உயிர் தப்பினார்
வேலூர்:
வேலூர் எஸ்.எஸ்.கே. மானியம் பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது 26). பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
வேலூர் கோட்டை பின்புறம் நவநீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் நேதாஜி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர் இன்று காலை மார்க்கெட்டில் பலாப்பழம் அறுத்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த திருமலைக்கும், சரவணனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திருமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணனை வெட்ட முயன்றார்.
இதனால் உயிருக்கு பயந்த சரவணன் திருமலையிடம் இருந்து தப்பி ஓடினார். இருப்பினும் விடாமல் துரத்திச் சென்ற திருமலை பழைய மீன் மார்க்கெட் அருகே சரவணனை மடக்கிப் பிடித்து கத்தியால் கழுத்தில் குத்தினார்.
கத்திக்குத்தில் காயம் அடைந்த சரவணன் அங்கிருந்து தெற்கு போலீஸ் நிலையத்திற்கு ஓடினார். அங்கிருந்த போலீசார் திருமலையை மடக்கி பிடித்து வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கத்திக்குத்தில் காயமடைந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டப் பகலில் வியாபாரி ஒருவரை ரவுடி ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய சம்பவம் வேலூரில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
- கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை
- ெஜயிலில் அடைப்பு
வேலூர்:
வேலூர் மாவட்டம் வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகன் சுதர்சன் (வயது 19). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ரவி (36). இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
இருவரும் குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையின் பேரில் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இருவரிடமும் குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கான நகலை வேலூர் ஜெயிலில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.
- மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் நடந்தது
- இலவசமாக மருந்து, மாத்திரைகளை வழங்கினர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி உத்தரவின் பேரில் விருதம்பட்டியில் உள்ள வார்டு அலுவலகத்தில் இன்று காலை மருத்துவ முகாம் நடைபெற்றது.
மாநகராட்சியில் வேலை செய்யும் நிரந்தர ஊழியர்கள், தொகுப்பூதிய ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு திட்ட மேலாண்மை ஊழியர்கள், டெங்கு கொசு தடுப்பு பணி ஊழியர்கள் 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
மாநகராட்சி ஊழியர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனை செய்து இலவசமாக மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
முகாமில் 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
- குடியாத்தம் சிரசு திருவிழாவை முன்னிட்டு நடவடிக்கை
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ் வாய்ந்த ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் சிரசு ஊர்வல திருவிழா 15-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துக்கொள்ள வசதியாக, சிரசு ஊர்வல திருவிழா நடைபெறும் நாளான வருகிற 15-ந் தேதி வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
அதற்கு பதிலாக (24.06.2023) சனிக்கிழமை அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாகவும், (25.06.2023) ஞாயிற்றுக்கிழமை அச்சக பணியாளர்களுக்கு வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.
உள்ளூர் விடுமுறை அன்று கருவூலங்களிலும், சார்நிலை கருவூலங்க ளிலும் அரசு பாது காப்புக்கான அவசர அலுவலக பணிகளை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- குறைந்தபட்சம் தமிழகத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்த வராக இருத்தல் வேண்டும்
- வருகிற 31-ந்தேதி கடைசி நாள்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
சமுதாய வளர்ச்சிக்குச் சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.
முதல்-அமைச்சர் மாநில 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படவுள்ளது.
விருதிற்கான விண்ணப்பம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதிகள்:-
15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் (1.04.2022) அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் (31.03.2023) அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.
கடந்த நிதியாண்டில் அதாவது 1.04.2022 முதல் 31.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் தமிழகத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்த வராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்).
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்ப டக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 31-ந்தேதி மாலை 4 மணிக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரை 74017 03483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவர் அவர் கூறியுள்ளார்.
- அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
- சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தியாகும் என புகார்
வேலூர்:
வேலூர் தொரப்பாடி ஜெயில் அருகே ராம் சேட் நகர் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
ராம் சேட் நகர் நுழைவு வாயில் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இங்கு கால்நடை ஆஸ்பத்திரி கட்டுவதால் ஏராளமான கால்நடைகள் இங்கு கட்டுவார்கள்.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தியாகும். இப்பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டக்கூடாது.
புறநகர் பகுதியில் வேறு எங்காவது கட்ட வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆஸ்பத்திரி கட்ட வேறு இடம் காண்பிப்பதாக பொது மக்கள் அதிகாரிகளை அழைத்து சென்றனர்.
அப்போது அதிகாரிகள் பொதுமக்களிடம் ஆஸ்பத்திரி கட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் அவர்கள் முடிவின்படியே ஆஸ்பத்திரி கட்டப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- தினமும் 10 கிலோ கழிவுகள் தேக்கம்
- தண்ணீர் பாட்டில் எடுத்த செல்ல அனுமதி
வேலூர்:
வேலூர் கோட்டை 137 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கோட்டை வளாகத்தில் மைசூர் வீரர்களின் மஹால்கள் உட்பட 58 கட்டிடங்கள் உள்ளன.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட சராசரியாக 3,000 பார்வையாளர்கள் தினமும் கோட்டைக்கு வருகிறார்கள். இருப்பினும், 10 கிலோவுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள், பெரும்பாலும் பைகள், வளாகத்தில் தேங்கி கிடக்கிறது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட அலகு, கோட்டை பிளாஸ்டிக் இல்லாத மண்டலங்களாக அறிவித்து ள்ளது. கோட்டையில் பார்வையாளர்களை எச்சரிக்கும் வகையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பலகைகளை வைத்துள்ளது.
தடையை கடுமையாக அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக, இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கோட்டை வளாகத்திற்குள் பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்ய தொடங்கியுள்ளனர்.
தற்போது, கோட்டை வளாகத்தில் குப்பை சேகரிக்கும் பணி, வேலூர் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மட்டுமே பார்வையாளர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின் கீழ் மாநகராட்சி மேற்கொண்டுள்ள அழகுபடுத்தும் பணியின் காரணமாக கோட்டைக்கு குறிப்பாக வேலூர் நகரத்திலிருந்து அதிக பார்வையாளர்கள் வருகை தருவதாக ஏஎஸ்ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது, கோட்டை நுழைவாயில் அருகே உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறப்புக் குழுக்கள் காவல்துறையுடன் ஒருங்கிணைத்து வருகின்றன.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள பிளாஸ்டிக் தடையை கோட்டை வளாகத்திற்குள் கண்டிப்பாக அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.
கோட்டை நுழைவாயிலில் சிறப்புக் குழு ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்பதை சரிபார்க்க, அபராதம் விதிப்பது, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






