என் மலர்
வேலூர்
- காங்கிரஸ் நெசவாளர் அணி வலியுறுத்தல்
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் தனியார் திருமண மண்டபத்தில் மாநில காங்கிரஸ் நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
மாநில நெசவாளர் அணி தலைவர் ஜி.என்.சுந்தரவேல் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர்கள் டி.ஆர்.கோதண்டராமன், டி.கே.கதிரேசன், மாநில நெசவாளர் அணி பொருளாளர் அனகை விமல்காந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எஸ்.எம். தேவராஜ் வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஜவுளிபூங்கா அமைக்கவேண்டும்.இந்த ஜவுளிபூங்காவிற்கு முன்னாள் முதலமைச்சர் குடியாத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெருந்தலைவர் காமராஜர் பெயரவைக்க வேண்டுமென அரசை கேட்டுக் கொள்வது.
நெசவுத் தொழிலுக்கான நூல் சாய மருந்துகள் மீது மத்திய அரசு விதித்துள்ள ஜி எஸ் டி வரியை முற்றிலுமாக நீக்கி கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசை கேட்டுக் கொள்வது.
தமிழக அரசு நெசவாளர்களுக்கான ஓய்வூதியம் தற்போது ரூ.1000 மட்டும் வழங்கி வருகிறது. தற்போதைய விலைவாசி உயர்வுக்கேற்ப நெசவாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரும் அனைவருக்கும் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு நெசவாளர்களுக்கு அறிவித்த 10 சதவீதம் அகவிலைப்படியை ஜனவரி 1-ந் தேதியிட்டு அனைத்து நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், மேலும் அடிப்படைக் கூலி 20 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.தீர்மானங்களை நகர நெசவாளர் அணி தலைவர் கோ.ஜெயவேலு வாசித்தார்.
கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள். நெசவாளர் அணி மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது
- எம்.எல்.ஏ., தாசில்தார் இடத்தை பார்வையிட்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகம் குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது.
சில வருடங்களுக்கு முன்பு புதிதாக தாலுகா அலுவலகம் கட்டிடங்கள் கட்டப்பட்டது. அப்போது அங்கிருந்து சார் பதிவாளர் அலுவலகம் இடிக்கப்பட்டது.
தற்போது வாடகை கட்டிடத்தில் தங்கம் நகர் பகுதியில் இயங்கி வருகிறது.
குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகம் புதியதாக கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குடியாத்தம் அடுத்த கள்ளூரில் அரசுக்கு சொந்தமான தோப்பு புறம்போக்கு இடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்வதற்கான ஆய்வுப்பணிகள் நேற்று நடைபெற்றது.
இதனை அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தாசில்தார் எஸ்.விஜயகுமார் ஆகியோர் இடத்தை பார்வையிட்டனர்.
துணை தாசில்தார் சுபிச்சந்தர், அரசு மருத்துவமனை ஆலோசனைக்குழு உறுப்பினர் கள்ளூர்ரவி, ஒன்றிய குழு உறுப்பினர் தீபிகாபரத், கிராம நிர்வாக அலுவலர் உஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- 304 வகையான உயிரினங்கள் உள்ளது
- புள்ளிமான்கள் இந்த மாதம் 7 குட்டிகளை ஈன்றுள்ளது
வேலூர்:
வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்கா 25 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இது அழகான நீர்வீழ்ச்சியுடன் அமைந்துள்ளது.
மேலும் அமிர்தியில் முதலைகள், கிளி வகைகள், பருந்து, முள்ளம் பன்றி, கடமான், புள்ளி மான்கள் உட்பட 131 மான்கள், மயில், முயல், நாட்டுகொக்கு, பாம்புகள் உள்ளிட்ட 304 வகையான உயிரினங்கள் உள்ளது.
இயற்கை எழில்மிகுந்த அமிர்தி யில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந் தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல் கின்றனர்.
அங்குள்ள விலங்குகள், பறவைகள் போன்றவற்றை குடும்பத்துடன் வந்து கண்டு ரசித்து செல்கின்றனர்.
வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டுப்பாட்டில் உள்ள அமிர்தி பூங்காவிற்கு வெள்ளேரி மான், 6 வகையான பாம்புகள், கேட்டு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரம் அமிர்திக்கு வெள்ளேரி மான், பாம்புகள் வண்டலூரில் இருந்து கொண்டுவரப்பட உள்ளது.
இதற்கிடையே அமிர்தியில் உள்ள புள்ளிமான்கள் இந்த மாதம் 7 குட்டிகளை ஈன்றுள்ளது. அழகிய மான் குட்டிகள் துள்ளிக்குதித்து விளையாடுகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர். செல்போன்களில் செல்பி எடுத்து சென்றனர்.சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.
- கலெக்டர் அறிவுறுத்தல்
- ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது
வேலுார்:
ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற வசதியாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, தபால் துறை யின் கீழ் செயல்படும் 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' மூலம், பள்ளிகளி லேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இப்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள 'ஸ்மா ர்ட் போன்' மற்றும் பயோ மெட்ரிக் சாத னம் மூலம், தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை மட்டும் பயன்படுத்தி, விரல்ரேகை மூலம் ஆதார் இணைப் புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்கி கொள்ளலாம்.
இந்த வசதி ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- குண்டர் சட்டத்தில் கைது
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் தொரப்பா டியைச் சேர்ந்தவர் லோகேஷ் குமார் (வயது 30). இவர் கடந்த மார்ச் மாதம் வேலப்பாடியில் உள்ள வங்கி கிளையில் 15 பவுன் தங்க நகைகளை அடமானம் வைக்க சென்றார்.
அவரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் லோகேஷ் குமார் வைத்திருந்த நகை பையை பறித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரம்பலூரைச் சேர்ந்த செந்தில்குமார்(37), சேலத்தைச் சேர்ந்த ஈஸ்வரன்(23), திருச்சியைச் சேர்ந்த ராஜசேகர்(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கே.வி.குப்பம் அடுத்த காளாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன்(21), இவர் 42 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பனமடங்கி போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், கலெக்டர் குமாரவே ல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, செந்தில்குமார், ஈஸ்வரன், ராஜசேகர், கதிரவன் ஆகிய 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டனர்.
- 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு அனுப்பினர்
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் கடிதம் அனுப்பினர்.
மாநில அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. பின், அந்த தடை விலக்கப்பட்டது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ம.க.வினர் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். வேலூர் கருகம்புத்தூரி இன்று கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
கிழக்கு மாவட்டம் வடக்கு ஒன்றியம் சார்பில் நடந்த போராட்டத்தில் பா.ம.க.வினர் பொதுமக்களுடன் ஊர்வலமாக சென்று அங்குள்ள தபால் நிலையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதியரசர் பாரதிதாசன் ஆகியோருக்கு இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சுமார் 2 ஆயிரம் கடிதங்கள் அனுப்பினர்.
இந்தப் போராட்டத்திற்கு வேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜலகண்டேஸ்வரன் தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் என்.டி. சண்முகம், மாவட்டச் செயலாளர் கே.எல்.இளவழகன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மாவட்ட தலைவர் பி.கே. வெங்கடேசன், மாவட்டத் துணைத் தலைவர் ஆர். பி. சம்பத், துணைச் செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் பயன்கள் மற்றும் உரிமைகள் தொடர்பாக பேசினர்.
இதில் அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் சதீஷ், ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- டிப்பர் லாரி மோதியது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் அருகே உள்ள நெல்வாய் கிராமம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுமான்.
இவருடைய மகன் குகன் (வயது 8). அடுக்கம்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான்.
நேற்று அவரது தாத்தா தனபால் என்பவருடன் சைக்கிள் சப்தலிபுரம் அல்லி வரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி சைக்கிள் மீது மோதியது.
இதில் சிறுவன் குகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குகன் பரிதாபமாக இறந்தான்.
பாகாயம் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகன ஓட்டிகள் அவதி
- மீண்டும் அந்த சாலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை தடுப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
கிரீன் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்து வதற்காக சென்னை மார்க்கமாக வேலூருக்கு வரும் வாகனங்கள் சென்னை சில்க்ஸ் அருகே சர்வீஸ் சாலையில் திரும்புவதற்கு பதிலாக தடுப்புகள் அமைத்து வாகனங்கள் நேராக அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோல் காட்பாடி செல்லும் வாகனங்கள் நேஷனல் தியேட்டர் அருகே இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சாலையில் தடுப்புகளை அமைத்து பெட்ரோல் பங்க் அருகே சென்று சர்வீஸ் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
கிரீன் சர்க்கிள் அகலம் அதிகமாக இருக்கிறது. அதனை குறைக்க வேண்டும் மேலும் தோட்டப்பாளையம் சென்னை சில்க்ஸ் சர்வீஸ் ரோட்டில் இருந்து வருபவர்கள் மீண்டும் கலெக்டர் அலுவலகம் செல்வதற்கு வசதியாக கிரீன் சர்க்கிள் ஒரு பகுதி உடைக்கப்பட்டு அதில் சாலை உருவாக்கப்பட்டது. அதன் வழியாக வாகனங்கள் சென்று வந்தன.
இந்த நிலையில் கடந்த முன் 2 நாட்களுக்கு முன்பு அந்தப் பாதையை போலீசார் தடுப்புகளை வைத்து அடைத்துள்ளனர்.
கிரீன் சர்க்கிளை உடைத்து போடப்பட்ட சாலை மூடப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி வழியாக சென்று வந்த வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மீண்டும் அந்த சாலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
- அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தபோது விபரீதம்
- மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் மேட்டுக்களம் பகுதியைச் சேர்ந்தவர் பரத்பாண்டியன் (வயது 24) கூலி வேலை செய்து வந்தார்.
இன்று காலையில் பரத்பாண்டியன் தனது வீட்டு அருகே உள்ள நிலத்திற்கு சென்றார். அப்போது நிலத்தில் மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் பரத்பாண்டியன் மின்கம்பியை மிதித்தார்.
அதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நீண்ட நேரம் ஆகியும் மகன் வராததால் அவரது பெற்றோர் நிலத்துக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது பரத்பாண்டியன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கும் மின்வாரி யத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் டவுன் போலீசார் பரத் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்கம்பி அறுந்து விழுந்து வாலிபர் இறந்த சம்பவம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
- போலீஸ் ரோந்து வாகனங்களையும் அதில் உள்ள வசதிகளையும் கேட்டறிந்தார்
- இ பீட் செயலியை போலீசார் முழுமையாக கற்க பயிற்சி அளிக்க அறிவுரை
வேலூர்:
தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. சங்கர் வேலூர் காவல் சரகத்தில் 2 நாள் ஆய்வுப்பணியை மேற்கொண்டார்.
நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வேலூர் மாநகர் பகுதியில் திடீர் ஆய்வு செய்தார்.
தமிழக- ஆந்திர எல்லையில் அமைந்துள்ள காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். வாகன தணிக்கை மற்றும் சோதனை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அதன் தொடர்ச்சியாக சித்தூர் பஸ் நிலையத்திலும் இரவு நேர வாகன தணிக்கையை ஆய்வு செய்தார்.
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து வாகனங்களையும் அதில் உள்ள வசதிகளையும் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து வேலூரின் முக்கிய பகுதியான மண்டி தெருவில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் முறையாக பணி செய்கிறார்களா என்று முக்கிய தெருக்களில் நடந்து சென்று ஆய்வு செய்தார்.
அப்போது ஒரு சில போலீசார் இ பீட் செயலியை முழுமையாக பயன்படுத்த திணறியதை அறிந்தார்.
இ பீட் செயலியை அனைத்து வகையான போலீசார் முழுமையாக கற்கும் வண்ணம் அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் ஏ.டி.ஜி.பி. சங்கர் கூறியதாவது:-
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்துவதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கடந்த கஞ்சா வேட்டைகளின் போது திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் சப்ளையர்களை கண்டறிந்து அவர்கள் மீது கவனம் செலுத்தி வருகிறோம்.
காவல்துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை அனைத்து போலீசாரும், அதிகாரிகளும் அறிந்து இருக்க வேண்டும்.
இதன் மூலம் மேலும் சிறப்பாக பணி செய்ய முடியும். இதற்காக தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்பட வேண்டியது அவசியம்.
வேலூர் மாநகரில் அதிகப்படியான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களிலும் அதிகப்படியான வாகன தணிக்கை இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரோந்து போலீசார் சிறப்பாக பணியை செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- சாலை குண்டும், குழியுமாக உள்ளது
- ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை
வேலூர்:
காட்பாடி அடுத்துள்ள 66 புதூர் கிராமத்துக்கு சாலை வசதி கோரி தேங்கிய மழைநீரில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த 66 புதூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாய தொழிலை மட்டுமே நம்பியுள் ளனர். அங்குள்ள பஜனை கோவில் தெரு உள்ளிட்ட சில தெருக்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை அமைக்கப்படவில்லை.
மேலும், கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளது.
இது தொடர்பாக கிராம ஊராட்சி மற்றும் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கடுவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கிராமத்துக்கு செல்லும் குண்டும், குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதி ஏற்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த 66 புதூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் நேற்று நூதன போராட்டத்தில் பட்டனர்.
அப்போது எங்கள் கிராமத்துக்கு விைரவில் சாலை அமைத்து கொடுக்க வேண்டும். கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு காண வேண்டும்.
இல்லாவிட்டால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
- ேபாலீசார் விசாரணை
- ரவுடி கைது
வேலூர் :
வேலூர் கோட்டை பின்புறம் நவநீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவzணன். இவர் நேதாஜி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்று காலை மார்க்கெட்டில் பலாப்பழம் அறுத்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த வேலூர் எஸ்.எஸ்.கே. மானியம் பகுதியை சேர்ந்த ரவுடியான திருமலைக்கும், சரவணனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திருமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணனை வெட்ட முயன்றார்.
இதனால் உயிருக்கு பயந்த சரவணன் திருமலையிடம் இருந்து தப்பி ஓடினார். இருப்பிணும் விடாமல் துரத்திச் சென்ற திருமலை பழைய மீன் மார்க்கெட் அருகே சரவணனை மடக்கிப் பிடித்து கத்தியால் கழுத்தில் குத்தினார்.
இதில் காயம் அடைந்த சரவணன் அங்கிருந்து தெற்கு போலீஸ் நிலையத்திற்கு பயந்து ஓடினார்.
பின்னர் காயமடைந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலையை கைது செய்தனர். மேலும் திருமலையை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.






