என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Enjoyed watching with family"

    • 304 வகையான உயிரினங்கள் உள்ளது
    • புள்ளிமான்கள் இந்த மாதம் 7 குட்டிகளை ஈன்றுள்ளது

    வேலூர்:

    வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்கா 25 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இது அழகான நீர்வீழ்ச்சியுடன் அமைந்துள்ளது.

    மேலும் அமிர்தியில் முதலைகள், கிளி வகைகள், பருந்து, முள்ளம் பன்றி, கடமான், புள்ளி மான்கள் உட்பட 131 மான்கள், மயில், முயல், நாட்டுகொக்கு, பாம்புகள் உள்ளிட்ட 304 வகையான உயிரினங்கள் உள்ளது.

    இயற்கை எழில்மிகுந்த அமிர்தி யில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந் தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல் கின்றனர்.

    அங்குள்ள விலங்குகள், பறவைகள் போன்றவற்றை குடும்பத்துடன் வந்து கண்டு ரசித்து செல்கின்றனர்.

    வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டுப்பாட்டில் உள்ள அமிர்தி பூங்காவிற்கு வெள்ளேரி மான், 6 வகையான பாம்புகள், கேட்டு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரம் அமிர்திக்கு வெள்ளேரி மான், பாம்புகள் வண்டலூரில் இருந்து கொண்டுவரப்பட உள்ளது.

    இதற்கிடையே அமிர்தியில் உள்ள புள்ளிமான்கள் இந்த மாதம் 7 குட்டிகளை ஈன்றுள்ளது. அழகிய மான் குட்டிகள் துள்ளிக்குதித்து விளையாடுகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர். செல்போன்களில் செல்பி எடுத்து சென்றனர்.சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

    ×