என் மலர்
வேலூர்
- பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்க கோரி தகராறு
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வீரபாஞ்சாலி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 58). இவரது மனைவி குமாரி(52), இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் அசோக்குமார்(28), பொக்லைன் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குடித்து விட்டு தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தனது பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன் கிராமத்தில் நடந்த திருவிழாவிலும் திருமணம் செய்து வைக்க கோரி மது போதையில் குடும்பதினருடன் சண்டை போட்டு விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்இலை.
இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடினர். பின்னர் ஊருக்கு அருகே உள்ள மாந்தோப்பு பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் அசோக்குமார் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்துள்ளனர். உடனே இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் எச்சரிக்கை
- 85 வாகனங்கள் பறிமுதல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க தொடர் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 6 லாரிகள், 1 பொக்லைன், 14 டிராக்டர், 49 மாட்டு வண்டிகள் என மொத்தம் 85 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில், கடத்தப்பட்ட 37 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, காட்பாடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட மேல்பாடி அருகே பொன்னையாற்றில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள் மற்றும் விருதம்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயநல்லூர் பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு மாட்டு வண்டியை போலீசார் நேற்று பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
எச்சரிக்கை
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் எச்சரித்துள்ளார்.
- ஆந்திராவில் இருந்து சிகிச்சைக்காக வேலூர் வந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்
வேலூர்:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ராம் செட்டி. இவரது மகள் நாக சாய் பிரியா (வயது 23). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஸ்ரீகாந்த் ராம் செட்டிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் சிகிச்சைக்காக ஆந்திராவில் இருந்து ஸ்ரீகாந்த் ராம் செட்டியும், அவரது மகள் நாக சாய்பிரியாவும் வேலூருக்கு வந்தனர்.
அப்போது தோட்டப்பாளையத்தில் உள்ள விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில் நாக சாய்பிரியா தந்தையிடம் கூறிவிட்டு வெளியே சென்றார். வெகு நேரம் ஆகும் மகள் வர வில்லை. இதனால் ஸ்ரீகாந்த் ராம் செட்டி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். அவர் கிடைக்காததால் இது குறித்து வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- மது குடிக்க மனைவி பணம் தராததால் விரக்தி
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் தென்னவன் (வயது 62). இவரது மனைவி சுமதி. தென்னவனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனைவி சுமதியிடம் மது குடிக்க தென்னவன் பணம் கேட்டார். அதற்கு அவர் மறுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மனைவி பணம் தராததால் மன உளைச்சலில் தென்னவன் காணப்பட்டார்.
பின்னர் வீட்டில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட அவரது மனைவி சுமதி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தென்னவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாளை தேரோட்டம் நடக்கிறது
- கூடுதலாக 15 சிறப்பு பஸ் கள் இயக்கப்பட உள்ளது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற திருவிழாவான, குடியாத்தம் கெங்கையம்மன் சிரசுத்திரு விழா தொடங்கி நடந்து வருகிறது.
திரளாக பங்கேற்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் தரப்பில் உள்ளூர் விடு முறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவில் தேரோட்டம் நாளை காலை 8 மணிக்கு நடக்கிறது. திங்கட்கிழமை (15-ந் தேதி) அதிகாலை சிரசு ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த திரு விழாவுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில், வேலூர் மண் டல அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூர் - குடியாத்தம் வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் 30 பஸ்களை தவிர்த்து, கூடுதலாக 15 சிறப்பு பஸ் கள் இயக்கப்பட உள்ளது. இதேபோன்று, ஆம்பூர் - குடியாத்தம், பேரணாம் பட்டு - குடியாத்தம் வழித் தடத்தில் தலா 5 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும், பக்தர்கள் எண் ணிக்கை அதிகமாக இருக் கும் நேரங்களில், அதற்கு ஏற்றவகையில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது
- மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது
குடியாத்தம்:
குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் நம்ம ஊரு சூப்பர் திட்டம், மக்களை தேடி மருத்துவ திட்டம் இணைந்து துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள், களப்பணியாள ர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு துணைத் தலைவர் கே.கே.வி.அருண்முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.திருமலை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்வாணன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அலுவலக மேலாளர் அசோக்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் தலைமையில் மருத்துவர்கள் பிரவீன்குமார், ரூத்கனி மொழி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
முகாமில் 297 பேர் பயன் பெற்றனர் இதற்கான ஏற்பா டுகளை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
- தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு நடந்தது
- திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த ஏரிபுதூர் கிராமத்தில் காலபைரவர் கோவில் உள்ளது.
இங்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தங்களின் வேண்டுதல்களை நிறைவற்றி செல்கின்றனர்.
மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் வெகு சிறப்பாக நடைப்பபெறுவது வழக்கம். அதே போல் நேற்றும் தேய்பிறை முன்னிட்டு யாகசாலைகள். அமைக்கப்பட்டு 108 மூலிகைப் பொருட்கள் மற்றும் திரவியங்கள் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அருகே அமைக்கப்பட்டு இருககும் வினாயகருக்கு பூஜைகள் செய்தனர். பின்பு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஏரிபுதூர் ஊராட்சிமன்ற தலைவர் கீதாவெங்கடேசன் தலைமையில் பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. விழாவில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
- தூத்துக்குடி கும்பலுக்கு வலைவீச்சு
- ராணுவவீரர் வீட்டில் திருடியவர் கைது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த காளபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 58). ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.
இவர் கவுதமபுரம் கிராமத்தில் நடந்த உறவினருடைய துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு வீட்டை பூட்டிக்கொண்டு சென்றார்.
இந்த நிலையில் பகல் 12 மணியளவில் அவருடைய இரும்பு கதவை மர்ம நபர் ஒருவர் உடைத்து வீட்டின் உள்ளே சென்றார்.
இதனை பக்கத்து வீட்டில் வசிப்பவர் கண்டு கூச்சலிட்டார். இதை அறிந்த மர்ம நபர் வீட்டின் சுவர் மீது ஏறி தப்பி ஓடி அருகில் இருந்த காட்டுப் பகுதியில் தலைமறைவாகினார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவரை போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜா (வயது 33) என்பது தெரிய வந்தது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 5-க்கும் மேற்பட்ட கும்பல் குழுவாக வந்துள்ளது. குடியாத்தம் பகுதியில் தங்கும் விடுதியில் தங்கி சுற்றுப்புற பகுதிகளில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து பள்ளிகொண்டா போலீசார் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீடுகளில் தீவிர சோதனை செய்தனர். போலீசார் வருவதை அறிந்த மர்மகும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் மாவட்ட முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வீட்டில் திருடி பிடிபட்ட முத்து ராஜாவை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.
- தனிப்படை போலீசார் கொள்ளையர்களைப் பிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
- தாமோதரன் மீது காஞ்சிபுரம் சித்தூர் போலீஸ் நிலையங்களில் கொலை வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் திருவலம் அடுத்த இ.பி. கூட்ரோட்டில் உள்ள அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணி முடிந்து கடையில் மது விற்பனை மூலம் வசூலான ரூ. 2 லட்சத்து 57ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தனது பைக்கில் காட்பாடி நோக்கி சென்றார்.
அவரை பின்தொடர்ந்து மர்ம கும்பல் 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென அசோக்குமார் வாகனத்தை மறித்து அவரை தாக்கினர்.
அவரிடம் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் பைக், செல்போன் ஆகியவற்றை பறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
திருவலம் போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து 3 பேரை தேடி வந்தனர்.
தனிப்படை போலீசார் கொள்ளையர்களைப் பிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
திருவலம் பகுதியில் உள்ள கேமராவில் கொள்ளையர்கள் 3 பேர் உருவங்கள் பதிவாகி இருந்தது. இதன்மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் அவர்கள் ஏற்கனவே வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சரவணன் என்கிற குட்லு ( வயது 32), காஞ்சிபுரம் சிறு காவேரிப்பாக்கம் தாமோதரன் (23) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான சரவணன் மீது சென்னை முக்தியால்பேட்டை, திருத்தணி, சித்தூர் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
தாமோதரன் மீது காஞ்சிபுரம் சித்தூர் போலீஸ் நிலையங்களில் கொலை வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்
- கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்
வேலூர்:
திருப்பத்தூரை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று அலமேலு மங்காபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
நேற்று இரவு நிகழ்ச்சி முடித்துக்கொண்டு திருப்பத்தூர் செல்வதற்காக அலமேலு மங்காபுரத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏற்கனவே 3 பெண்கள் இருந்தனர்.
அந்த ஆட்டோவில் ஏறி பஸ் நிலையம் சென்றார். கிரீன் சர்க்கிளில் உள்ள ஓட்டல் அருகே 3 பெண்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி சென்றனர்.
பின்னர் பஸ் நிலையத்திற்கு சென்ற பெண் ஆட்டோவுக்கு கட்டணம் தருவதற்காக தனது பையை திறந்து பார்த்தார். அப்போது பையில் இருந்த 1½ பவுன் செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் பெண்ணை அங்கு அனுப்பி வைத்தனர்.
வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
- பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்
வேலூர்:
வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
அணைக்கட்டு ஒன்றியம் முழுவதும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்து, டிராக்டர்கள் மூலம் சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்துகின்றனர் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
விவசாயிகள் காலத்திற்கு ஏற்றவாறு பயிர் செய்வதற்கு உண்டான விழிப்புணர்வை தோட்டக்கலை துறையினர் ஏற்படுத்த வேண்டும்.
பிரதம மந்திரியின் விவசாயின் தனிநபர் கடன் ரூ.4 லட்சம் குறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு ஆர்கானிக் உரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். விவசாயிகள் ஏரியில் வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். கத்திரிக்காய், தக்காளி, செண்டுமல்லி உள்ளிட்ட உயர்ந்த வகை விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
அமாவாசை பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் கிராமப்புறங்களுக்கு வரும் அரசு டவுன் பஸ்கள் திடீரென நிறுத்தப்படுவதால் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே தொடர்ந்து அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், திங்கட்கிழமை அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
திருவிழா சமயத்தின் போது ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார், குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட ஆட்டோ ஸ்டாண்ட் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30 ஆட்டோ ஸ்டாண்டுகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவிழாவின் போது குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேதாஜி சவுக்கு வரை மெயின் ரோட்டில் ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை திருவிழா முன்னிட்டு கெங்கையம்மன் கோவில் அருகில் உள்ள தெருக்களுக்கு முன்னதாகவே ஆட்டோ போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. திருவிழாவின்போது வெளி மாவட்ட ஆட்டோக்களுக்கும், வெளிமாநில ஆட்டோ களுக்கும் அனுமதி இல்லை.
ஆட்டோ டிரைவர்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும், மது அருந்துதல் கூடாது, டிரைவிங் லைசென்சு ஆட்டோ களுக்கான உரிய சான்றிதழ்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும், ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றக் கூடாது திருவிழாவின்போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆட்டோ டிரைவர்கள் போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.






