என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் காலபைரவர்.
அணைக்கட்டு ஏரிபுதூர் கிராமத்தில் காலபைரவருக்கு பூஜை
- தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு நடந்தது
- திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த ஏரிபுதூர் கிராமத்தில் காலபைரவர் கோவில் உள்ளது.
இங்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தங்களின் வேண்டுதல்களை நிறைவற்றி செல்கின்றனர்.
மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் வெகு சிறப்பாக நடைப்பபெறுவது வழக்கம். அதே போல் நேற்றும் தேய்பிறை முன்னிட்டு யாகசாலைகள். அமைக்கப்பட்டு 108 மூலிகைப் பொருட்கள் மற்றும் திரவியங்கள் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அருகே அமைக்கப்பட்டு இருககும் வினாயகருக்கு பூஜைகள் செய்தனர். பின்பு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஏரிபுதூர் ஊராட்சிமன்ற தலைவர் கீதாவெங்கடேசன் தலைமையில் பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. விழாவில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.






