என் மலர்
நீங்கள் தேடியது "பல்வேறு முன்னேற்பாடு"
- ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், திங்கட்கிழமை அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
திருவிழா சமயத்தின் போது ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார், குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட ஆட்டோ ஸ்டாண்ட் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30 ஆட்டோ ஸ்டாண்டுகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவிழாவின் போது குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேதாஜி சவுக்கு வரை மெயின் ரோட்டில் ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை திருவிழா முன்னிட்டு கெங்கையம்மன் கோவில் அருகில் உள்ள தெருக்களுக்கு முன்னதாகவே ஆட்டோ போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. திருவிழாவின்போது வெளி மாவட்ட ஆட்டோக்களுக்கும், வெளிமாநில ஆட்டோ களுக்கும் அனுமதி இல்லை.
ஆட்டோ டிரைவர்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும், மது அருந்துதல் கூடாது, டிரைவிங் லைசென்சு ஆட்டோ களுக்கான உரிய சான்றிதழ்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும், ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றக் கூடாது திருவிழாவின்போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆட்டோ டிரைவர்கள் போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.






