search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore Fort"

    • தினமும் 10 கிலோ கழிவுகள் தேக்கம்
    • தண்ணீர் பாட்டில் எடுத்த செல்ல அனுமதி

    வேலூர்:

    வேலூர் கோட்டை 137 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கோட்டை வளாகத்தில் மைசூர் வீரர்களின் மஹால்கள் உட்பட 58 கட்டிடங்கள் உள்ளன.

    வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட சராசரியாக 3,000 பார்வையாளர்கள் தினமும் கோட்டைக்கு வருகிறார்கள். இருப்பினும், 10 கிலோவுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள், பெரும்பாலும் பைகள், வளாகத்தில் தேங்கி கிடக்கிறது.

    தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட அலகு, கோட்டை பிளாஸ்டிக் இல்லாத மண்டலங்களாக அறிவித்து ள்ளது. கோட்டையில் பார்வையாளர்களை எச்சரிக்கும் வகையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பலகைகளை வைத்துள்ளது.

    தடையை கடுமையாக அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக, இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கோட்டை வளாகத்திற்குள் பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்ய தொடங்கியுள்ளனர்.

    தற்போது, கோட்டை வளாகத்தில் குப்பை சேகரிக்கும் பணி, வேலூர் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மட்டுமே பார்வையாளர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின் கீழ் மாநகராட்சி மேற்கொண்டுள்ள அழகுபடுத்தும் பணியின் காரணமாக கோட்டைக்கு குறிப்பாக வேலூர் நகரத்திலிருந்து அதிக பார்வையாளர்கள் வருகை தருவதாக ஏஎஸ்ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது, கோட்டை நுழைவாயில் அருகே உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறப்புக் குழுக்கள் காவல்துறையுடன் ஒருங்கிணைத்து வருகின்றன.

    ஏற்கனவே நடைமுறையில் உள்ள பிளாஸ்டிக் தடையை கோட்டை வளாகத்திற்குள் கண்டிப்பாக அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.

    கோட்டை நுழைவாயிலில் சிறப்புக் குழு ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்பதை சரிபார்க்க, அபராதம் விதிப்பது, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கலெக்டர் தேசிய கொடியேற்றினார்
    • நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

    வேலூர்

    வேலூரில் சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றினார்.

    இதனைத் தொடர்ந்து வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு தேசிய கொடியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சமாதான புறாக்களை பறக்கவிட்டனர்.

    விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தினவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. இறுதியில் பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    • சுதந்திர தின அமிர்த பெருவிழா
    • 15 -ந்தேதி வரை மிளிரும் என அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    நாடு முழுவதும் நாட்டின் 75 வது சுதந்திர தினவிழாவை அமிர்தபெருவிழாவாக, பல வகைகளில் தொடர்ந்து கொண்டாடப் பட்டு வருகிறது.

    விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து சிப்பாய் புரட்சி நடந்த வேலுார் கோட்டை வர லாற்று சிறப்புமிக்கது.

    தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கோட்டை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நி லையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, அகழியின் எதிரே உள்ள மதிற்சுவரில், மூவர்ணக்கொடியின் வண் ணத்தை போல் மின்விளக் குகள் அலங்கரிக்கப்பட் டுள்ளது.

    இரவு நேரங்களில் கோட்டையில் ஒளிரும் தேசியக்கொடியின் வண் ணம், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கவர்ந்து வருகிறது. வரும் 15 -ந்தேதி வரை இந்த மின்விளக்கு மூவர் ணக்கொடியின் வண்ணத் தில் கோட்டை மிளிரும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ×