என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வேலூர் கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
  X

  75-வது சுதந்திர தினத்தையொட்டி வேலூர் கோட்டை கொத்தளத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்.

  வேலூர் கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கலெக்டர் தேசிய கொடியேற்றினார்
  • நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

  வேலூர்

  வேலூரில் சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றினார்.

  இதனைத் தொடர்ந்து வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு தேசிய கொடியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

  தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சமாதான புறாக்களை பறக்கவிட்டனர்.

  விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

  நிகழ்ச்சியில் நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தினவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. இறுதியில் பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

  Next Story
  ×