search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public debate"

    • கழிவு நீர் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு
    • பாதியிலேயே திரும்பி சென்றனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள பையூர் ஊராட்சியில், புதிய காலனி பால்வாடி தெருவில் ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு பாலம் அமைக்கப்பட்டது.

    புதிதாக அமைக்கப்பட்ட தரற்ற முறையில் இருப்பதாகவும், கல்வெட்டு பாலத்தின் வழியாக கழிவுநீர் செல்ல வழிவகை செய்யப்படவில்லையாம். இதனால் அந்த பகுதியில் கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று புதியதாக கட்டப்பட்ட கால்வாய் பணியை பார்வையிட அதிகாரிகள் பையூருக்கு வந்தனர்.

    திடீரென்று பொதுமக்கள் திரண்டு சென்று அதிகாரிகளை முற்றுகையிட்டனர். மேலும், கடந்த ஒரு வாரமாக குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் காலரா, டெங்கு போன்ற நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    கல்வெட்டு பாலத்தில் கழிவுநீர் செல்ல வழிவகை செய்யாமலேயே பணி முடிக்கப்பட்டுள்ளது எனக்கூறி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அதிகாரிகள் ஆய்வுப் பணியை முழுமையாக செய்யாமல் பாதியிலேயே திரும்பி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
    • சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தியாகும் என புகார்

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி ஜெயில் அருகே ராம் சேட் நகர் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    பொதுமக்கள் எதிர்ப்பு

    ராம் சேட் நகர் நுழைவு வாயில் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இங்கு கால்நடை ஆஸ்பத்திரி கட்டுவதால் ஏராளமான கால்நடைகள் இங்கு கட்டுவார்கள்.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தியாகும். இப்பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டக்கூடாது.

    புறநகர் பகுதியில் வேறு எங்காவது கட்ட வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆஸ்பத்திரி கட்ட வேறு இடம் காண்பிப்பதாக பொது மக்கள் அதிகாரிகளை அழைத்து சென்றனர்.

    அப்போது அதிகாரிகள் பொதுமக்களிடம் ஆஸ்பத்திரி கட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் அவர்கள் முடிவின்படியே ஆஸ்பத்திரி கட்டப்படும் என தெரிவித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • முதலீட்டாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆவணங்களை பெற முயற்சி
    • 100-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு

    நெமிலி:

    தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் பொதுமக்களிடம் வட்டி தருவதாக கூறிய ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ஏராளமானோர் பணம் டெபாசிட் செய்தனர்.

    அந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு பணத்தை திருப்பி தரவில்லை என புகார்கள் வந்த தால் ஆருத்ரா நிதி நிறுவனம் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் நெமிலியை அடுத்த சயனபுரம் கிராமத்தை சேர்ந்த யோகானந்தம் மற்றும் சதீஷ் ஆகியோர் நிறுவனத்தின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு பொது மக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் திரட்டி வழங்கி உள்ளனர்.

    இவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள நிலையில், ஆவணங்களை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டி முதலீட்டாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆவணங்களை பெற முயற்சித்தனர்.

    அப்போது, நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற் பட்டோர் யோகானந்தம் மற்றும் சதீஷ் ஆகியோரை முற்று கையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகு தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நிதி நிறுவன மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத் தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை முழுமை யாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என தெரிவிக்கப்பட்டது.

    ×