search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
    X

    அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்த காட்சி

    ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

    • கழிவு நீர் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு
    • பாதியிலேயே திரும்பி சென்றனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள பையூர் ஊராட்சியில், புதிய காலனி பால்வாடி தெருவில் ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு பாலம் அமைக்கப்பட்டது.

    புதிதாக அமைக்கப்பட்ட தரற்ற முறையில் இருப்பதாகவும், கல்வெட்டு பாலத்தின் வழியாக கழிவுநீர் செல்ல வழிவகை செய்யப்படவில்லையாம். இதனால் அந்த பகுதியில் கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று புதியதாக கட்டப்பட்ட கால்வாய் பணியை பார்வையிட அதிகாரிகள் பையூருக்கு வந்தனர்.

    திடீரென்று பொதுமக்கள் திரண்டு சென்று அதிகாரிகளை முற்றுகையிட்டனர். மேலும், கடந்த ஒரு வாரமாக குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் காலரா, டெங்கு போன்ற நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    கல்வெட்டு பாலத்தில் கழிவுநீர் செல்ல வழிவகை செய்யாமலேயே பணி முடிக்கப்பட்டுள்ளது எனக்கூறி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அதிகாரிகள் ஆய்வுப் பணியை முழுமையாக செய்யாமல் பாதியிலேயே திரும்பி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×