search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொரப்பாடியில் கால்நடை ஆஸ்பத்திரி கட்ட எதிர்ப்பு
    X

    தொரப்பாடியில் கால்நடை ஆஸ்பத்திரி கட்ட எதிர்ப்பு

    • அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
    • சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தியாகும் என புகார்

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி ஜெயில் அருகே ராம் சேட் நகர் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    பொதுமக்கள் எதிர்ப்பு

    ராம் சேட் நகர் நுழைவு வாயில் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இங்கு கால்நடை ஆஸ்பத்திரி கட்டுவதால் ஏராளமான கால்நடைகள் இங்கு கட்டுவார்கள்.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தியாகும். இப்பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டக்கூடாது.

    புறநகர் பகுதியில் வேறு எங்காவது கட்ட வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆஸ்பத்திரி கட்ட வேறு இடம் காண்பிப்பதாக பொது மக்கள் அதிகாரிகளை அழைத்து சென்றனர்.

    அப்போது அதிகாரிகள் பொதுமக்களிடம் ஆஸ்பத்திரி கட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் அவர்கள் முடிவின்படியே ஆஸ்பத்திரி கட்டப்படும் என தெரிவித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×