என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 6,883 பேர் நீட் தேர்வு எழுதினர்
    X

    வேலூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் கம்மலை கழட்டிய காட்சி.

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 6,883 பேர் நீட் தேர்வு எழுதினர்

    • கடும் சோதனைக்கு பிறகு அனுமதி
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு

    வேலூர்:

    இந்திய அளவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ துறையில் சேருவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு (நீட்) இன்று நடந்தது.

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 6,883 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.

    வேலூர் சாய்நாதபுரம் வி.வி.என்.கே.எம். சீனியர் செகன்டரிபள்ளி, டி.கே.எம். மகளிர் கலைக்கல்லூரி, ஸ்ரீபுரம் நாராயணி சீனியர் செகண்டரி பள்ளி, சன்பீம் மெட்ரிக்பள்ளி, சிருஷ்டி மெட்ரிக்பள்ளி, சிருஷ்டி வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி, கிங்ஸ்டன் என்ஜினீயரிங் கல்லூரி, சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி பள்ளி, வாணியம்பாடி மருதர்கேசரி ஜெயின் கல்லூரி, ராணிப்பேட்டை டி.ஏ.வி. பெல்பள்ளி, சோளிங்கர் வித்யாபீடம் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.

    காலை 11 மணி முதல் தேர்வர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.மாணவ-மாணவிகள் முழுபரிசோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் சென்றனர். தேர்வு மையங்களுக்கு சென்று வர வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பஸ்நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் இருந்து காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    செல்போன், புளூடூத், இயர்போன்கள், மைக்ரோபோன்கள், போன்ற எந்தவொரு தகவல் தொடர்பு சாதனமும்.ஆபரணங்கள் கைக்கடிகாரம், வளையல் கேமரா போன்றவை மற்றும் எழுது பொருட்கள் தகவல் எலக்ட்ரானிக் சாதனம், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட், தொப்பி போன்ற பிற பொருட்கள்.

    எந்த உணவுபொருளும் திறக்கப்பட்டது அல்லது பேக் செய்யப்பட்டது போன்றவற்றுக்கு அனுமதி இல்லை. தேர்வு மையத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×