என் மலர்tooltip icon

    வேலூர்

    • அதிகாரிகள் பங்கேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொது கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் எம் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.

    மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பி. விஸ்வநாத், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பா.ரஞ்சித் குமார், எம். விக்னேஷ், வி. சத்யமூர்த்தி, ஜே.நேரு, எஸ். உதயகுமார், சீனிவாசன், ஏ.எஸ்.ராஜீ, கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளரரும் மற்றும் மாணபல்லல குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஜி.பரசுராமன், வழக்கறிஞர் ஆர்.என்.ரகுபதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் உஸ்னரா பர்வீன், எஸ். குமாரி சௌந்தரராஜன் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ரோஜா, ராஜா வனக்குழு தலைவர் எம். எஸ்.சிட்டி பாபு ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.லோகேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

    வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி நந்தகுமார், முன்னாள் நகர மன்ற தலைவரும் தி.மு.க. தலைமை கழக பேச்சாளருமான தா.புவியரசி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் கே. ஜனார்த்தனன், எம்.டேவிட், பேரணாம்பட்டு ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜே சித்ரா ஜனார்தனன், பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் டேவிட், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்எருக்கம்பட்டு டி.விஜயகுமார், பேரணாம்பட்டு நகர மன்றதுணைத் தலைவர்ஆழியார் ஜுபேர் அஹமது, பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இக்கூட்டத்தில்ஒன்றிய நகர கிளைக் கழக தி.மு.க. நிர்வாகிகளான கே.ராகவலுஜி, பிரியா கோபி, எஸ்.ஓவசி முல்லா, எஸ்.தேவன், கே.சீனிவாசன், வி.கருணாகரன், கே.கே. முரளி, பி.சிவக்குமார், வி.பட்டாபி, எம்.அகிலன், ஒன்றிய குழு உறுப்பினர் டி.எம்.டில்லி ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் எஸ்.அமலா சிவாஜி, எஸ்.பாபுஜே ராஜமாணிக்கம், ஸ்ரீ லட்சுமி சந்திரசேகர், வி.பிரசன்னா, தேவி நியூஸ் எம்.ராகசுதா மணிவண்ணன், எம்.மோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ். விஜயகுமார் நன்றி கூறினார்.

    • மூன்றில் ஒரு பங்கு தொகை ரூ.27 லட்சத்தை எர்த்தாங்கல் கிராம பொதுமக்கள் வழங்கு முடிவு செய்தனர்
    • அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் எர்த்தாங்கல் கிராமத்தில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 81 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டப்பட உள்ளது.

    இதற்காக மூன்றில் ஒரு பங்கு தொைகயை எர்த்தாங்கல் கிராம பொதுமக்கள் வழங்கு முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயனிடம் ரூ.27 லட்சத்திற்கான காசோலையை எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவரும் ஒன்றியக்குழு துணை தலைவருமான கே.கே.வி. அருண்முரளி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பழனி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் வழங்கினர்.

    • டெண்டர் விடப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    குடியாத்தம்:

    குடியாத்தம் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கே.கே.வி. அருண்முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், ஆர்.திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் அசோக்குமார் வரவேற்றார்.

    கூட்டம் தொடங்கியதும் துணைத் தலைவர் அருண்முரளி பொதுநிதி இருப்பு கணக்கை தெரிவிக்க வேண்டும் என்றார். அ.தி.மு.க.உறுப்பினர் இமகிரிபாபு கடந்த பல கூட்டங்களாக பொதுநிதி குறித்து கணக்கு கேட்கப்பட்டுள்ளது.

    அதேபோல் 15-வது நிதி, என்.ஆர்.ஜி.எஸ். பணிகள் குறித்தும் பலமுறை கேட் டும் தெரிவிக்கவில்லை. ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இது குறித்து வட்டாரவளர்ச்சி அலுவலர் களை பலமுறை நேரில் கேட் டும் தகவல் இல்லை. இதில் வெளிப்படையான தன்மை இல்லை எனக்கூறி அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து துணைத்தலைவர் அருண்முரளி உறுப்பினர்கள் இமகிரி பாபு,சோபன்பாபு, தியாகராஜன், புரட்சி பாரதம் கட்சியின் குட்டிவெங்கடேசன் உள்பட 8 பேர் வெளிநடப்பு செய்தனர்.

    அதைத்தொடர்ந்து உறுப்பினர் சரவணன் எனது ஊராட் சியான தட்டப்பாறை ஊராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து ஒன்றிக்குழு உறுப்பினரான எனக்கே தெரி யவில்லை. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கி றேன் என்றார்.

    உறுப்பினர் மனோகரன் பேசுகையில் ஆரம்பம் முதலே பொதுநிதி கணக்குகள், நடை பெற்று வரும் பணிகள் குறித்து கேட்கப்பட்டும் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வில்லை. தலைவர் பகுதிக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடை பெறுகிறது என்று கூறி தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    சுரேஷ்குமார் பேசுகையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் பணிகள்தொடங்கப்படவில்லை. பிரேத பரி சோதனை செய்ய வேலூருக்கு கொண்டு செல்வதால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதே போல் சார் பதிவாளர் அலு வலகம் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    சூரியகலா பேசுகையில்:-

    நத்தமேடு பாலம் அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, தற்போது இப்பணிகள் செய்ய ரூ.50 லட்சம் ஆகும் என்கிறார்கள். கூடுதலாக ரூ.20 லட்சம் ஒன்றிய பொதுநிதியிலிருந்து வழங்க வேண்டும். தீபிகாபரத்பேசுகையில்:-

    கள்ளூர் பகுதியில் பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து பேசிய ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் பணிகள் வெளிப்படை தன் மையாக நடைபெற்று வரு கிறது. பழுதடைந்த மேல் நிலை நீர்த்தேக்கதொட்டிகள் மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட கட்டிடங்கள் குறித்து உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்.

    அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குடியாத்தம் சார்பதிவாளர் அலுவல கத்தை நகரின் மையப்பகு தியில் உள்ள கொண்ட சமுத்திரம் கால் நடை மருத்துவமனை பகுதி யில் அமைக்க வேண்டும். அங்குள்ள கால்நடை மருத்துவமனையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்.

    மோர்தானா பகுதியில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் மாட்டுகொட்டகை, ஆட்டுக் கொட்டகை உள்ளிட்ட வைக்கு வேளாண்மைதுறை, கால்நடைத்துறை சார்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்
    • இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நாடகமும் நடக்கிறது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

    குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு கூழ் ஊற்றுதலும் இரவு பெருமாள் சாமி உற்சவம் நடைபெற்றது.

    இன்று காலை அம்மன் சிரசு திருவிழா தொடங்கியது. கெங்கையம்மன் சிரசு பவனி வந்தது. கோவிலை அடைந்தது தொடர்ந்து கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பின் குடியாத்தம் நகரம் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நாடகமும், நாளை காளியம்மன் திருவிழாவும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் தர்மகர்த்தா, ஊர் பெரிய தனகாரர்கள் உள்பட விழா குழுவினர் கிராம மக்கள் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    • உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் இந்த பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி நேற்று தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் விஜயகுமார், நெடுமாறன், துணை தாசில்தார்கள் சுபிச்சந்தர் டி.ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் கே.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமாபந்தி மேலாளர் கலைவாணி அனைவரையும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஜமாபந்தி முதல் நாளான நேற்று பரதராமி, குடியாத்தம் நகரம், பிச்சனூர், கொண்டசமுத்திரம், செதுக்கரை, தாட்டிமானபல்லி, கல்லப்பாடி, ராமாலை, புட்டவாரிபல்லி, டி.பி.பாளையம், ரங்கசமுத்திரம், வீரிசெட்டிபல்லி, வரதாரெட்டிபல்லி, வி.டி.பாளையம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கேட்டு 60 பேர் மனு அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நில அளவை வட்ட துணை ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் சங்க குடியாத்தம் வட்ட தலைவர் எம்.செந்தில், செயலாளர் ஆர்.சசிகுமார், பொருளாளர்கள் காந்தி, வெங்கடாஜலபதி, ரகு, ஜெயமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.80 லட்சத்துக்கு மேல் கால்நடைகள் விற்பனை
    • வியாபாரிகள் தகவல்

    வேலூர்:

    தீவன தட்டுப்பாடு குறைந்து வரும்நிலையில், பொய்கை கால்நடை சந்தைக்கு செவ்வாய்க்கி ழமை கால்நடைகள் வரத்து அதிகரித் திருந்தது. வேலூர் மாவட்டம், பொய் கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கி ழமை நடைபெறும் கால்நடைச் சந் தையில் உள்ளூர் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங் களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற் பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்தச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை வர்த்த கம் நடைபெறும்.

    இந்த நிலையில், வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பிப்ரவரி இறுதி வாரத்துக்குப் பிறகு கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதி கரித்து வந்தது. குறிப்பாக, கடந்த ஏப் ரல் மாதத்தில் அதிகபட்சமாக 104.5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப் பம் பதிவாகியிருந்தது. இதனால் ஏற்பட்ட தீவன பற்றாக்குறையால் பொய்கை சந்தையில் கால்நடை வர்த் தகம் கடந்த இரு மாதங்களாகவே சரிந்து காணப்பட்டது.

    இந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வேலூர் மாவட் டம் முழுவதும் பரவலாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

    இதன்காரணமாக தீவன புற்கள் விளைச்சல் ஏற்பட்டதை அடுத்து கடந்த இரு வாரங்களாக பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்துள்ளது.

    அதன்படி, இந்த வாரம் செவ்வாய்க் கிழமைநடைபெற்ற சந்தைக்கு கறவை

    மாடுகள், காளைகள், உழவு மாடுகள் என 1,500-க்கும் மேற்பட்ட மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடுகள். கோழி கள் விற்பனைக்காக கொண்டு வரப் பட்டிருந்தன. அவற்றை வாங்க வியா பாரிகளும், விவசாயிகளும் ஆர்வம் காட்டினர். இதன்காரணமாக, இந்த வாரம் ரூ. 80 லட்சத்துக்கு மேல் கால்ந டைகள் விற்பனை நடைபெற்றிருப்ப தாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தி.மு.க. கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு
    • சாலை, கால்வாய், குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை புகார்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் சாதாரண கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் ரத்தினசாமி, துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தி.மு.க., அதிமுக, பாமக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான திமுக கவுன்சிலர் தங்களது வார்டுகளில் சாலை, கால்வாய், குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை.

    பாதாள சாக்கடை பணிகள் நிறைவடையாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    குடிநீர் தொட்டி பம்பு ஆப்ரேட்டர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் தராததால் தண்ணீர் விட மறுக்கின்றனர். இதனால் பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருவதாகவும் சரமாரி குற்றச்சாட்டுகள் எழுப்பினர்.

    கவுன்சிலர்கள் வைத்த குற்ற சாட்டுகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என மேயர் சுஜாதா, கமிஷனர் ரத்தினசாமி ஆகியோர் உறுதி அளித்தனர்.

    • உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்
    • இதயம் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது

    வேலூர்:

    திருவள்ளுவர் மாவட்டம் ,வீரமங்கலம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எபிநேஷன் (வயது 48). இவர் திருத்தணி அருகே உள்ள அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

    கடந்த 21-ந் தேதி மருதாலம் கூட்டு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர்கள் பின்னால் வந்த மணல் லாரி எபிநேஷன் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட எபிநேஷன் படுகாயம் அடைந்தார்.

    அருகில் இருந்தவர்கள் எபிநேஷனை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டை சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எபிநேஷன் நேற்று மூளை சாவு அடைந்தார்.

    அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து எபிநேஷனின் இதயம் நுரையீரல் சென்னை எம் ஜி எம் ஆஸ்பத்திரிக்கும் கல்லீரல், இடது புற சிறுநீரகம் ராணிப்பேட்டை சிஎம்சி ஆஸ்பத்திரிக்கும் வலது புற சிறுநீரகம் சென்னை அப்போலோ ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

    மூளை சாவு அடைந்த எபிநேசனுக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், பால் ஆபிரகாம், கிரேஸ்சன், கத்ரின் ரோஸ் என 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

    • தகராறு கைகலப்பாக மாறியது
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்து கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வர் ரங்கநாதன் இவருக்கு முனிரத்தினம் (வயது 49), அண்ணாதுரை (32) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். முனிரத்தினம் ஸ்ரீபுரம் பகுதியில் வேலை செய்து வருகின்றார். அண்ணா துரை எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் அண்ணாதுரை மனைவி கீதாவிடம், குடும்பச் செலவிற்காக முனிரத்தினம் 5 பவுன் நகையை வாங்கி அடகு வைத்துள்ளார். அடகு வைத்து மூன்று ஆண்டுகளாகியும் நகையை திருப்பி தராததால் விடுமுறையில் வந்த அண்ணாதுரை, அண்ணன் முனிரத்தினத்திடம் இது குறித்து கேட்டுள்ளார்.

    இதில் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இந்த நிலையில் கணவரை தாக் குவதை தடுக்க வந்த கீதாவை மண்வெட்டியால் தலைப்பகு தியில் முனிரத்தினம் தாக்கியுள்ளார். இதில் பலத்தகாயம டைந்த கீதா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து கீதா பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முனிரத்தினத்தை கைது செய்தனர்.

    • ஏராளமானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு
    • போலீசார் பயனாளிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலூர் கோட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மத்திய, மாநில மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் 160 அடுக்குமாடி குடியிருப்புகள் வேலூர் தொரப்பாடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இந்த திட்டத்தில் பயன்பெற 824 பயனாளிகள் கலெக்டரின் பரிந்துரையின் பேரில் ஒப்புதல் பெறப்பட்டது. பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் குடியிருப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என்றும், மேலும் பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.2 லட்சத்து 39 ஆயிரம்- வரைவோலையாக கடந்த மாதம் 28-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    அதன்பேரில் 367 பேர் மட்டுமே குறிப்பிட்ட தேதிக்குள் வரைவோலை செலுத்தினர்.

    இந்த நிலையில் தொரப்பாடியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு குலுக்கள் முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி இன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் லினோலியா, தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு நிர்வாக பொறியாளர் கீதா தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் கணேசன் தாசில்தார் செந்தில் பயிற்சி ஏ எஸ் பி பிரசன்னா குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது.

    குலுக்களில் கலந்து கொள்ள ஏராளமானோர் திரண்டு வந்ததால் அவர்களுடைய டோக்கன் பெறுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் வரவழைக்கப்பட்டு பயனாளிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    • தமிழ், ஆங்கிலத்தில் அளிக்க நடவடிக்கை
    • நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மக்களின் அன்றாட தேவைகளில் அவசிய மானதாக விளங்கும் உணவுப்பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், தரமற்ற மற்றும் கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்கள் தங்கள் புகார்களை ஆன்லைன் வழியாக மற்றும் செல்போன் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.

    இதற்காக புதிய இணையதளம் foodsafety.tn.gov.in மற்றும் தமிழ்நாடுஉணவு பாதுகாப்பு துறையின் நுகர்வோர் புகார் செயலி தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இச்செயலி வாயிலாக பொதுமக்கள் தங்கள் புகார்களை மிக எளிமையாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அளிக்கலாம்.

    மேலும் இந்த இணைய தளத்தில் பொதுமக்கள் தங்களது புகார்களை புதிய இணையதளம் மற்றும் ஆப் பதிவிறக்கம் செய்து டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தரமற்ற உணவு, கலப்பட செய்யப்பட்ட உணவு உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்களை இதற்கான இணையதளம் மூலமும், கைபேசிசெயலி மூலமும் தெரிவிக்கலாம்.

    மேலும் புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடைகளை எடுக்கச் சொல்லி மிரட்டல்
    • உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    :

    குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரைச் சேர்ந்த காய்கறிகள் வியாபாரம் செய்யும் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நேற்று குடியாத்தம் டவுன் பேலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தரணம்பேட்டை தினசரி காய்கறி சந்தையில் நகராட்சிக்கு சுங்கம் செலுத்தி காய்கறி வியாபாரம் செய்து அன்றாடம் பிழைப்பு நடத்தி வருகிறோம்.

    அப்பகுதியில் உள்ள உழவர் சந்தையில் கடை வைத்திருக்கும் ஒருவர் அப்பகுதியில் தொடர்ந்து நாங்கள் கடை வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்றால் எனக்கு பணம் தர வேண்டும் என எங்களை மிரட்டுகிறார்.

    பணம் தரவில்லை என்றால் இங்கு யாரும் கடை வைக்கக் கூடாது என்று எங்கள் கடைகளை எடுக்கச் சொல்லி மிரட்டுகிறார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளனர்.

    ×