என் மலர்
வேலூர்
- நிரந்தரமாக சமத்துவ சுடுகாட்டிற்கு இடவசதி கேட்டு மனு
- கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ரா மன் தலைமையில் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
3-வது நாளான நேற்று மேல்முட்டுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர், ஒன்றியக்குழு உறுப்பினர் செல்விசிவக்குமார் உள்ளிட்ட கிராம மக்கள் உதவி கலெக்டர் வெங்கட்ராமனிடம் கோரிக்கை மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ேல்முட்டுக்கூர் ஊராட்சி காக்காதோப்பு கிராமத்தில் சுமார் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் நிலையில்தான் சுடுகாடு இருந்தது அதில் சடலங்களை புதைத்துக் கொண்டிருந்தோம் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நீர்வரத்து இருந்து கொண்டே இருப்பதால் அங்கு சடலங்களை புதைக்க இயலவில்லை.
அதனால் எங்கள் கிராமத்திற்கு நிரந்தரமாக சமத்துவ சுடுகாட்டிற்கு இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கூறியிருந்தார்கள்.
கல்லூரி சேர எஸ்.டி. சான்று வழங்க நரிகுறவர் மனு
குடியாத்தம் அடுத்த பாக்கம் ஊராட்சி நரிக்குறவர் காலனி லட்சுமிநகரை சேர்ந்தவர் கார்த்திக் இவர் பாசிமணி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மகன் அருணாச்சலம் குடியாத்தத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் சேர உள்ளார் நரிக்குறவர்களை மத்திய அரசு எஸ்.டி. பட்டியலில் சேர்த்துள்ளதால் இதனால் வரை எங்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் கிடைக்கவில்லை.
எனது மகன் அருணாசலம் கல்லூரியில் சேர இருப்பதால் உடனடியாக எஸ்.டி. சாதி சான்று வழங்குமாறு மனு அளித்தார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
அதேபோல் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பழனிவேல் அளித்த மனுவில் கூடநகரம் ஏரிவரத்து கால்வாய் மற்றும் கிளை கால்வாய் பகுதியில் சிங்கல்பாடி மற்றும் உள்ளி ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சேதம் அடைந்த பகுதிகளில் சிமெண்ட் கான்கிரீட் கரை ஏற்படுத்தி தர வேண்டும்.
சிங்கல்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மயான வசதியும், காரியமேடையும் ஏற்படுத்தி தரவேண்டும் சிங்கல்பாடி ஊராட்சி பகுதியில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவேண்டும்.
உள்ளிமலையில் இருந்து வரும் கானாற்று கால்வாய் பகுதியில் சிங்கல்பாடி, உள்ளி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நிளஅளவைகள் மூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றவும் மன அளித்தார்.
- இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (36). இவர் கணியம்பாடி டோல்கேட் அருகேயுள்ள வல்லம் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் டீக்கடையுடன் கூடிய பழக்கடையை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் கணியம்பாடி அடுத்த சின்னபாலம்பாக்கம் பகுதியை சேர்ந்த குமரன்(23) என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பழக்கடைக்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், குமரன் மற்றும் செல்வகுமாரிடம் ஜூஸ் கேட்டுள்ளனர்.
அப்போது, 4 பேர் கும்பல் சத்தம்போட்டு பேசியுள்ளனர். இரவு நேரம் என்பதால் சத்தம்போடதே என்று கடை உரிமையாளர் செல்வகுமார் கூறியுள்ளார். இதில் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது 4 பேர் கொண்ட கும்பல், குமரன் மற்றும் கடை உரிமையாளர் செல்வகுமார் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.
கத்தி வெட்டு
மேலும் பழங்களை வெட்ட பயன்படுத்தக்கூடிய கத்தியை கொண்டு இருவரையும் கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி விட்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
இதில், குமரன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் ரத்த காயங்களுடன் சரிந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த, புகாரின் பேரில் வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காமிராக்களின் பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
அதில் 2 பேரையும் கத்தியால் வெட்டியது ஆரணி குன்னத்தூர் பகுதியை சேர்ந்த கோபி (28), வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மதன் மற்றும் மகேஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கோபியை கைது செய்த போலீசார், தப்பியோடிய மதன் மற்றும் மகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- 9 மையங்களில் நாளை நடக்கிறது
- 2,391 பேர் எழுதுகின்றனர்
வேலூர்:
நாடு முழுவதும் நாளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் போன்ற இந்திய ஆட்சி பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற உள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேலூர் ஊரிசு பள்ளி, ஊரிசு கல்லூரி, டி.கே.எம். கல்லூரி, கோடையிடி குப்புசாமி அரசு பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, சாந்திநிகேதன், எத்திராஜ் மெட்ரிக் பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் உள்ளிட்ட 9 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 391 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தேர்வின் முதல் தாள் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 2-ம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெற உள்ளது.
தேர்வு எழுதுபவர்கள் செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களை கண்காணிக்க 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, தேர்வு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்தது
- மனு அளிக்க குவிந்த மக்கள்
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் வருடாந்திர ஜமாபந்தி நடைப்பெற்று வருகிறது.
வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையிலும், அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீரா பென் காந்தி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற கூட்டத்தில் அணைக்கட்டு பிடிஓக்கள் சுதாகரன், சாந்தி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முதலாவதாக அணைக்கட்டு, ஊசூர், பள்ளிகொண்டா, அகரம், ஒடுகத்தூர் ஆகிய 5 உட்கோட்டத்திற்க்கு தனிதனியாக நடைப்பெற்று வருகின்றது.
3-வது நாளான நேற்று பள்ளிகொண்டா உட்கோட்டத்திற்க்கு உட்பட்ட மக்கள் தங்களின் குறைகளை மனு அளித்தனர்.
இதில் நேற்று மட்டும் 115 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை அளிக்கும் பெரும்பாலான மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மனுக்களை அளித்து வருகின்றனர்.
ஜமாபந்தி கூட்டத்தில் அளிக்கப்படும் மணுக்களின் மீது நிச்சயம் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் அணைக்கட்டு தாலுகா அலுவலகங்களில் குவிந்த வணணம் உள்ளனர்.
- விஷம் உடல் முழுவதும் பரவியதால் இறந்தது
- சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் கோரிக்கை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி விஜி.
இவரது மனைவி பிரியா இவர்களின் மகள் தனுஷ்கா (வயது 1½) குழந்தை நேற்று இரவு வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.
இரவு நேரம் என்பதால் அருகே இருந்த காட்டுப்பகுதியில் இருந்து பாம்பு ஒன்று ஊர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது.
இதனைப் பார்க்காத குழந்தை அருகே சென்ற உடன் பாம்பு குழந்தையை கடித்தது.
குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அவரை பாம்பு கடித்ததை பார்த்துள்ளனர்.
உடனடியாக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். சாலை வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரம் ஆகியுள்ளது. அப்போது விஷம் உடல் முழுவதும் பரவி குழந்தை செல்லும் வழியிலேயே இறந்தது.
எனவே சாலை வசதி இல்லாத காரணத்தால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் குழந்தை இறந்து விட்டதாக பெற்றோர் கூறினர்.
மேலும் தகவலறிந்த அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைக்குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உடனடியாக அல்லேரி, அத்திமரத்து கொல்லை மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தீ விபத்து ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஊசூராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள வீட்டில் குடிசைத் தொழிலாக தீப்பெட்டிகள் செய்து வருகிறார்.
இன்று காலை 8 மணி அளவில் முருகையன் மற்றும் அவரது தங்கை சுகுணா (56) ஆகியோர் மருந்துகள் பொருத்திய தீக்குச்சிகளை, சாக்கு பைகளில் கொட்டினர். அப்போது தீக்குச்சிகள் ஒன்றோடு ஒன்று உரசி திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகையன் மற்றும் சுகுணா ஆகியோர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவியதால், 2 பேர் மீது தீப்பற்றி எரிந்தது.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். விபத்தில் சிக்கிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுணா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்
- போலீசார் விசாரணை
வேலூர்,
வேலூர் சலவன் பேட்டை ஆறுமுகம் முதலி தெருவை சேர்ந்தவர் சங்கர். கட்டிட வேலை செய்து வரூகிறார். இவருடைய மனைவி காவ்யா (வயது 33). தம்பதிக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.
இன்று காலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் காவ்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த காவ்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டில் திரண்டனர்.
வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்களிடம் காவ்யா சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் காவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவ்யாவின் தாய் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குறைதீர்வு கூட்டத்தில் புகார்
- மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இன்று நடைபெற்றது
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், பயிற்சி ஏ டி எஸ் பி பிரசன்னா குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
அப்போது விவசாயிகள் பேசியதாவது :-
கணியம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்புத்தூர் கிராமத்தில் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து கால்வாய்கள் தூர்ந்து போய் உள்ளது.
நீரை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். நீர் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும்.
பெரிய கம்பத்தம் கிராமத்தில் ரேசன் கடை எப்போது திறக்கப்படுகிறது மூடப்படுகிறது என தெரியவில்லை.
கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்பாடி உழவர் சந்தையில் இருந்து வெளியே வரும் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மற்றும் காய்கறி வாங்க வருபவர்கள் அவதி அடைகின்றனர்.
லத்தேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாயத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஊதிய அளவு விதைகள் இருப்பு வைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அதற்கு வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில் நெல் கம்பு சோளம் சாமை துவரை உளுந்து பச்சை பயிறு காராமணி உள்ளிட்டவை 100 டன் வரை இருப்பு வைக்கப்பட்டுள்ளது விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி 50 சதவீத மானியத்தில் விதைகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய விவசாயிகள் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வங்கிகளில் நகைக்கு கடன் தருகின்றனர் விவசாயத்திற்கு கடன் தர மறுக்கின்றனர்.
மாடு வாங்க வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது தக்காளி குறைந்த விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகின்றனர். எனவே தக்காளி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கூறினார்.
- மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் கமிஷனரை குறி வைத்து தாக்கிப்பேசினர்
- வேலூரில் பரபரப்பு
வேலூர்,
வேலூர் மாநகராட்சி கமிஷனராக ரத்தினசாமி நியமிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக பணியாற்றி வருகிறார். வேலூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்ட முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அவர்தான்.
மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள், டெண்டர் விதிகளின்படி இருந்தால் மட்டுமே பில் தொகை வழங்கப்படும் என கறாராக கூறியுள்ளார். அவரது உத்தரவால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஒப்பந்ததாரர்கள் பலர் பில் தொகை பெற முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பலரும் கமிஷனர் ரத்தினசாமியை குறி வைத்து தாக்கிப்பேச ஆரம்பித்தனர்.
அவரும், சளைக்காமல் பதில் அளித்ததுடன் 'ஆணையரை தாக்கிப் பேசவே கூட்டம் நடப்பதாக கருதுகிறேன்' என்றும் வெளிப்படையாக கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், வேலூர் போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற மணிவண்ணன், மரியாதை நிமித்தமாக கலெக்டர் குமாரவேல் பாண்டியனை நேற்று மாலை சந்தித்தார். அவருடன் இருந்த கமிஷனர் ரத்தினசாமி அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் மாநகராட்சி ஆய்வு பணிகளுக்கு செல்லும் போது தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
'முன்கூட்டியே தகவல் அளித்தால் பாதுகாப்பு அளிப்பதாக' போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உறுதியளித்தார்.
இதனால் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- அரசு துறை அதிகாரிகள் பேசினர்
அணைக்கட்டு,
அணைக்கட்டு ஒன்றியக்குழு கூட்டம் நேற்று ஒன்றியக்குழு தலைவர் சி.பாஸ்கரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, துணைத்தலைவர் சித்ரா குமார பாண்டியன், அலுவலக மேலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு. பாபு கலந்து கொண்டார்.
கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்களை, அங்கன்வாடி, பள்ளிக்க ல்விதுறை, போக்கு வரத்துதுறை, சுகாதாரதுறை ஆகிய அரசு துறை அதிகாரிகள் அவர்களிடம் இருக்கும் திட்டங்களை எடுத்துரைத்து பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
- 8 மாதத்திற்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை
வேலூர்,
வேலூர் சுற்றுலா மாளிகையில் ₹7.65 கோடியில் கூடுதல் கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் சுற்றுலா மாளிகையில் போதிய இடவசதி இல்லாததால் கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கடந்த ஆண்டு வேலூர் சுற்றுலா மாளிகையில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்தோடு அதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்ப பொதுப்ப ணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அதிகாரிகள் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான நிதி, வரைப்படத்தை அறிக்கையாக தயாரித்து அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, வேலூர் சுற்றுலா மாளிகையில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.7.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூடுதல் கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இப்பணிகள் 8 மாதத்திற்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் சென்று கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும் பணிகளை விரைந்தும், தரமாக கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சங்கர்லிங்கம், செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி செயற்பொறியாளர் ராஜாமணி உட்பட பலர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் சுற்றுலா மாளிகையில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.7.65 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. கூடுதல் கட்டிடம் 1260 சதுர மீட்டரில் தரைத்தளம், முதல் தளத்தில் 6 விஐபி அறைகள், லிப்ட் உள்ளிட்ட வசதியுடன் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. பணிகள் விரைந்து செய்து முடிக்கப்படும் என்றனர்.
- 5 பேர் கைது
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த கம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா.
இவர் வேலூர் அரசு முத்துரங்கம் கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சூர்யா கம்மவான்பேட்டை கிராமத்தில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்க்க சென்றார்.
அப்போது அங்கிருந்த கம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வினோத், கரண், இளவரசன், கபிலன், நம்பிவர்மன், சச்சின் மற்றும் நவீன்குமார் உள்பட 8 பேர் சூரியாவை தாக்கியுள்ளனர். இதனைப் பார்த்த சூர்யாவின் நண்பர்களும், எதிர் தரப்பினரை தாக்கியதால் இருதரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
அப்போது கூட்டத்தில் ஒருவர் கீழே இருந்த பீர் பாட்டிலை எடுத்து, சூர்யாவின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சூர்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து புகாரின் பேரில் வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத், கரண், இளவரசன், கபிலன், நம்பிவர்மன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சச்சின் மற்றும் நவீன்குமார் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.






