என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இருதரப்பினரிடையே மோதல்
- 5 பேர் கைது
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த கம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா.
இவர் வேலூர் அரசு முத்துரங்கம் கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சூர்யா கம்மவான்பேட்டை கிராமத்தில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்க்க சென்றார்.
அப்போது அங்கிருந்த கம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வினோத், கரண், இளவரசன், கபிலன், நம்பிவர்மன், சச்சின் மற்றும் நவீன்குமார் உள்பட 8 பேர் சூரியாவை தாக்கியுள்ளனர். இதனைப் பார்த்த சூர்யாவின் நண்பர்களும், எதிர் தரப்பினரை தாக்கியதால் இருதரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
அப்போது கூட்டத்தில் ஒருவர் கீழே இருந்த பீர் பாட்டிலை எடுத்து, சூர்யாவின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சூர்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து புகாரின் பேரில் வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத், கரண், இளவரசன், கபிலன், நம்பிவர்மன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சச்சின் மற்றும் நவீன்குமார் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.






