என் மலர்
நீங்கள் தேடியது "நரிக்குறவ மாணவர்"
- நிரந்தரமாக சமத்துவ சுடுகாட்டிற்கு இடவசதி கேட்டு மனு
- கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ரா மன் தலைமையில் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
3-வது நாளான நேற்று மேல்முட்டுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர், ஒன்றியக்குழு உறுப்பினர் செல்விசிவக்குமார் உள்ளிட்ட கிராம மக்கள் உதவி கலெக்டர் வெங்கட்ராமனிடம் கோரிக்கை மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ேல்முட்டுக்கூர் ஊராட்சி காக்காதோப்பு கிராமத்தில் சுமார் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் நிலையில்தான் சுடுகாடு இருந்தது அதில் சடலங்களை புதைத்துக் கொண்டிருந்தோம் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நீர்வரத்து இருந்து கொண்டே இருப்பதால் அங்கு சடலங்களை புதைக்க இயலவில்லை.
அதனால் எங்கள் கிராமத்திற்கு நிரந்தரமாக சமத்துவ சுடுகாட்டிற்கு இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கூறியிருந்தார்கள்.
கல்லூரி சேர எஸ்.டி. சான்று வழங்க நரிகுறவர் மனு
குடியாத்தம் அடுத்த பாக்கம் ஊராட்சி நரிக்குறவர் காலனி லட்சுமிநகரை சேர்ந்தவர் கார்த்திக் இவர் பாசிமணி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மகன் அருணாச்சலம் குடியாத்தத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் சேர உள்ளார் நரிக்குறவர்களை மத்திய அரசு எஸ்.டி. பட்டியலில் சேர்த்துள்ளதால் இதனால் வரை எங்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் கிடைக்கவில்லை.
எனது மகன் அருணாசலம் கல்லூரியில் சேர இருப்பதால் உடனடியாக எஸ்.டி. சாதி சான்று வழங்குமாறு மனு அளித்தார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
அதேபோல் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பழனிவேல் அளித்த மனுவில் கூடநகரம் ஏரிவரத்து கால்வாய் மற்றும் கிளை கால்வாய் பகுதியில் சிங்கல்பாடி மற்றும் உள்ளி ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சேதம் அடைந்த பகுதிகளில் சிமெண்ட் கான்கிரீட் கரை ஏற்படுத்தி தர வேண்டும்.
சிங்கல்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மயான வசதியும், காரியமேடையும் ஏற்படுத்தி தரவேண்டும் சிங்கல்பாடி ஊராட்சி பகுதியில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவேண்டும்.
உள்ளிமலையில் இருந்து வரும் கானாற்று கால்வாய் பகுதியில் சிங்கல்பாடி, உள்ளி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நிளஅளவைகள் மூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றவும் மன அளித்தார்.






