என் மலர்
உள்ளூர் செய்திகள்

சலவன்பேட்டையில் இளம்பெண் தூக்கிட்டு சாவு
- சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்
- போலீசார் விசாரணை
வேலூர்,
வேலூர் சலவன் பேட்டை ஆறுமுகம் முதலி தெருவை சேர்ந்தவர் சங்கர். கட்டிட வேலை செய்து வரூகிறார். இவருடைய மனைவி காவ்யா (வயது 33). தம்பதிக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.
இன்று காலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் காவ்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த காவ்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டில் திரண்டனர்.
வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்களிடம் காவ்யா சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் காவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவ்யாவின் தாய் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






