search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் சிவில் சர்வீஸ் தேர்வு
    X

    வேலூரில் சிவில் சர்வீஸ் தேர்வு

    • 9 மையங்களில் நாளை நடக்கிறது
    • 2,391 பேர் எழுதுகின்றனர்

    வேலூர்:

    நாடு முழுவதும் நாளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் போன்ற இந்திய ஆட்சி பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற உள்ளது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேலூர் ஊரிசு பள்ளி, ஊரிசு கல்லூரி, டி.கே.எம். கல்லூரி, கோடையிடி குப்புசாமி அரசு பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, சாந்திநிகேதன், எத்திராஜ் மெட்ரிக் பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் உள்ளிட்ட 9 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 391 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த தேர்வின் முதல் தாள் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 2-ம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெற உள்ளது.

    தேர்வு எழுதுபவர்கள் செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களை கண்காணிக்க 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

    தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, தேர்வு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×