என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போலீஸ் பாதுகாப்பு கேட்கும் மாநகராட்சி கமிஷனர்
  X

  போலீஸ் பாதுகாப்பு கேட்கும் மாநகராட்சி கமிஷனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் கமிஷனரை குறி வைத்து தாக்கிப்பேசினர்
  • வேலூரில் பரபரப்பு

  வேலூர்,

  வேலூர் மாநகராட்சி கமிஷனராக ரத்தினசாமி நியமிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக பணியாற்றி வருகிறார். வேலூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்ட முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அவர்தான்.

  மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள், டெண்டர் விதிகளின்படி இருந்தால் மட்டுமே பில் தொகை வழங்கப்படும் என கறாராக கூறியுள்ளார். அவரது உத்தரவால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஒப்பந்ததாரர்கள் பலர் பில் தொகை பெற முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

  வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பலரும் கமிஷனர் ரத்தினசாமியை குறி வைத்து தாக்கிப்பேச ஆரம்பித்தனர்.

  அவரும், சளைக்காமல் பதில் அளித்ததுடன் 'ஆணையரை தாக்கிப் பேசவே கூட்டம் நடப்பதாக கருதுகிறேன்' என்றும் வெளிப்படையாக கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

  இந்நிலையில், வேலூர் போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற மணிவண்ணன், மரியாதை நிமித்தமாக கலெக்டர் குமாரவேல் பாண்டியனை நேற்று மாலை சந்தித்தார். அவருடன் இருந்த கமிஷனர் ரத்தினசாமி அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

  அந்த நேரத்தில் மாநகராட்சி ஆய்வு பணிகளுக்கு செல்லும் போது தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

  'முன்கூட்டியே தகவல் அளித்தால் பாதுகாப்பு அளிப்பதாக' போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உறுதியளித்தார்.

  இதனால் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  Next Story
  ×