என் மலர்
நீங்கள் தேடியது "பாதுகாப்புப்படை வீரர்"
- தகராறு கைகலப்பாக மாறியது
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்து கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வர் ரங்கநாதன் இவருக்கு முனிரத்தினம் (வயது 49), அண்ணாதுரை (32) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். முனிரத்தினம் ஸ்ரீபுரம் பகுதியில் வேலை செய்து வருகின்றார். அண்ணா துரை எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அண்ணாதுரை மனைவி கீதாவிடம், குடும்பச் செலவிற்காக முனிரத்தினம் 5 பவுன் நகையை வாங்கி அடகு வைத்துள்ளார். அடகு வைத்து மூன்று ஆண்டுகளாகியும் நகையை திருப்பி தராததால் விடுமுறையில் வந்த அண்ணாதுரை, அண்ணன் முனிரத்தினத்திடம் இது குறித்து கேட்டுள்ளார்.
இதில் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இந்த நிலையில் கணவரை தாக் குவதை தடுக்க வந்த கீதாவை மண்வெட்டியால் தலைப்பகு தியில் முனிரத்தினம் தாக்கியுள்ளார். இதில் பலத்தகாயம டைந்த கீதா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கீதா பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முனிரத்தினத்தை கைது செய்தனர்.
மகராஷ்டிரா மாநிலம் தலைநகரான மும்பையில் உள்ள மகாலக்ஷ்மி ரெயில் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வந்தார். மூவரும் ஏறுவதற்குள் ரெயில் நகர தொடங்கியது. இருப்பினும் பெற்றோர் இருவரும் ஏறினர். ஆனால் சிறுமியால் ஏற முடியாததால் அவள் பிளாட்பாரத்திற்கும், ரெயிலுக்கும் இடையில் தவறி விழ தொடங்கினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்குள் அங்கிருந்த பாதுகாப்புப்படை வீரர் சச்சின் போல் உடனடியாக சிறுமியை காப்பாற்றினார். தனது உயிரை பணயம் வைத்து சிறுமியின் உயிரை தைரியமாக காப்பாற்றிய சச்சினை அனைவரும் பாரட்டினர்.
இந்நிலையில், மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தனது டுவிட்டரில் 'சச்சின் சிறுமியை காப்பாற்றிய வீடியோவை பதிவு செய்துள்ளார். மேலும், அதனுடன் மகாராஷ்டிரா பாதுகாப்பு படை வீரர் சச்சினின் தைரியத்தை அனைவரும் பாராட்ட வேண்டும். அவர் சமயோசித சிந்தனையுடன் சிறுமியை காப்பாற்றினார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏராளமானோர் சச்சினுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். #JawanSavesGirl #Mahalaxmirailwaystation






