என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahalaxmi railway station"

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் ரெயில் அடியில் சிக்கிய சிறுமியை உயிரை பணயம் வைத்து தைரியமாக காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரரை ரெயில்வே துறை மந்திரி பியூஸ் கோயல் பாராட்டியுள்ளார். #JawanSavesGirl #Mahalaxmirailwaystation
    மும்பை:

    மகராஷ்டிரா மாநிலம் தலைநகரான மும்பையில் உள்ள மகாலக்‌ஷ்மி ரெயில் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வந்தார். மூவரும் ஏறுவதற்குள் ரெயில் நகர தொடங்கியது. இருப்பினும் பெற்றோர் இருவரும் ஏறினர். ஆனால் சிறுமியால் ஏற முடியாததால் அவள் பிளாட்பாரத்திற்கும், ரெயிலுக்கும் இடையில் தவறி விழ தொடங்கினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதற்குள் அங்கிருந்த பாதுகாப்புப்படை வீரர் சச்சின் போல் உடனடியாக சிறுமியை காப்பாற்றினார். தனது உயிரை பணயம் வைத்து சிறுமியின் உயிரை தைரியமாக காப்பாற்றிய சச்சினை அனைவரும் பாரட்டினர்.

    இந்நிலையில், மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தனது டுவிட்டரில் 'சச்சின் சிறுமியை காப்பாற்றிய வீடியோவை பதிவு செய்துள்ளார். மேலும், அதனுடன் மகாராஷ்டிரா பாதுகாப்பு படை வீரர் சச்சினின் தைரியத்தை அனைவரும் பாராட்ட வேண்டும். அவர் சமயோசித சிந்தனையுடன் சிறுமியை காப்பாற்றினார்' எனக் குறிப்பிட்டுள்ளார். 



    இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏராளமானோர் சச்சினுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். #JawanSavesGirl #Mahalaxmirailwaystation


    ×