என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் காய்கறி வியாபாரிகள் புகார்
- கடைகளை எடுக்கச் சொல்லி மிரட்டல்
- உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
:
குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரைச் சேர்ந்த காய்கறிகள் வியாபாரம் செய்யும் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நேற்று குடியாத்தம் டவுன் பேலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தரணம்பேட்டை தினசரி காய்கறி சந்தையில் நகராட்சிக்கு சுங்கம் செலுத்தி காய்கறி வியாபாரம் செய்து அன்றாடம் பிழைப்பு நடத்தி வருகிறோம்.
அப்பகுதியில் உள்ள உழவர் சந்தையில் கடை வைத்திருக்கும் ஒருவர் அப்பகுதியில் தொடர்ந்து நாங்கள் கடை வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்றால் எனக்கு பணம் தர வேண்டும் என எங்களை மிரட்டுகிறார்.
பணம் தரவில்லை என்றால் இங்கு யாரும் கடை வைக்கக் கூடாது என்று எங்கள் கடைகளை எடுக்கச் சொல்லி மிரட்டுகிறார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளனர்.
Next Story






