என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் கல்லப்பாடியில் கெங்கையம்மன் சிரசு திருவிழா
- பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்
- இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நாடகமும் நடக்கிறது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு கூழ் ஊற்றுதலும் இரவு பெருமாள் சாமி உற்சவம் நடைபெற்றது.
இன்று காலை அம்மன் சிரசு திருவிழா தொடங்கியது. கெங்கையம்மன் சிரசு பவனி வந்தது. கோவிலை அடைந்தது தொடர்ந்து கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பின் குடியாத்தம் நகரம் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நாடகமும், நாளை காளியம்மன் திருவிழாவும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் தர்மகர்த்தா, ஊர் பெரிய தனகாரர்கள் உள்பட விழா குழுவினர் கிராம மக்கள் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.