என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரணாம்பட்டு தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்
    X

    ஏரி குத்தி மேட்டில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்த காட்சி.

    பேரணாம்பட்டு தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்

    • அதிகாரிகள் பங்கேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொது கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் எம் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.

    மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பி. விஸ்வநாத், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பா.ரஞ்சித் குமார், எம். விக்னேஷ், வி. சத்யமூர்த்தி, ஜே.நேரு, எஸ். உதயகுமார், சீனிவாசன், ஏ.எஸ்.ராஜீ, கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளரரும் மற்றும் மாணபல்லல குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஜி.பரசுராமன், வழக்கறிஞர் ஆர்.என்.ரகுபதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் உஸ்னரா பர்வீன், எஸ். குமாரி சௌந்தரராஜன் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ரோஜா, ராஜா வனக்குழு தலைவர் எம். எஸ்.சிட்டி பாபு ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.லோகேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

    வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி நந்தகுமார், முன்னாள் நகர மன்ற தலைவரும் தி.மு.க. தலைமை கழக பேச்சாளருமான தா.புவியரசி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் கே. ஜனார்த்தனன், எம்.டேவிட், பேரணாம்பட்டு ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜே சித்ரா ஜனார்தனன், பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் டேவிட், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்எருக்கம்பட்டு டி.விஜயகுமார், பேரணாம்பட்டு நகர மன்றதுணைத் தலைவர்ஆழியார் ஜுபேர் அஹமது, பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இக்கூட்டத்தில்ஒன்றிய நகர கிளைக் கழக தி.மு.க. நிர்வாகிகளான கே.ராகவலுஜி, பிரியா கோபி, எஸ்.ஓவசி முல்லா, எஸ்.தேவன், கே.சீனிவாசன், வி.கருணாகரன், கே.கே. முரளி, பி.சிவக்குமார், வி.பட்டாபி, எம்.அகிலன், ஒன்றிய குழு உறுப்பினர் டி.எம்.டில்லி ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் எஸ்.அமலா சிவாஜி, எஸ்.பாபுஜே ராஜமாணிக்கம், ஸ்ரீ லட்சுமி சந்திரசேகர், வி.பிரசன்னா, தேவி நியூஸ் எம்.ராகசுதா மணிவண்ணன், எம்.மோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ். விஜயகுமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×